Home /News /spiritual /

தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு இன்று பெரிய வாய்ப்புகள் தேடி வரும்... (ஏப்ரல் 12, 2022)

தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு இன்று பெரிய வாய்ப்புகள் தேடி வரும்... (ஏப்ரல் 12, 2022)

தெய்வீக வாக்கு

தெய்வீக வாக்கு

Today Rasi Palan | சில புதிய வழக்கங்களை நீங்கள் தொடங்க இன்று ஒரு நல்ல நாள். ஒரு புத்தகம் அல்லது கட்டுரை உங்களது வாழ்விற்கு ஊக்கமளிக்கும்...

மேஷம்:

பல நாட்களாக உங்கள் மகிழ்ச்சியை நீங்களே தள்ளி போட்டு கொண்டிருந்தால், அதை செயல்படுத்த வேண்டிய நாள் இன்று. தேவையில்லாமல் யாராவது உங்களை குறைகூறினால் அவர்களின் கருத்தை புறக்கணிக்கவும். சில சோதனைகள் இருக்க கூடும் என்பதால் அலுவலகப் பணிகளில் அலட்சியம் காட்டாதீர்கள்.

உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு செலினைட்

ரிஷபம்:

இன்று நண்பர்கள் மற்றும் உங்களை சுற்றியுள்ளவர்களுடன் நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கும் நாள். நண்பர்கள் அல்லது நெருங்கிய உறவுகளுடன் சேர்ந்து ஜாலியாக ட்ரிப் செல்வீர்கள். பணவரவுக்கு குறை இருக்காது.

உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு ரத்தின கல்

மிதுனம்:

உங்களது ஆற்றல் முழுமையாக வெளிப்படும் நாள் இன்று. எனவே நீங்கள் என்ன சாதிக்க விரும்புகிறீர்களோ அதற்காக இன்றைய நாளை யன்படுத்திக் கொள்ளுங்கள். உங்கள் மேலதிகாரி சில பெரிய வாய்ப்புகளுக்காக உங்களை பரிந்துரைக்கலாம். மாலைக்குள் சிறப்பு வாய்ந்த ஒருவரிடமிருந்து நீங்கள் உபசரிப்பை பெற கூடும்.

உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு மணற்கல்

கடகம்:

உங்களது இன்றைய பொழுதை ஷாப்பிங் ஆக்கிரமித்து கொள்ள வாய்ப்புகள் உண்டு. வழக்கமான வேலைகளில் இடையூறுகள் ஏற்படலாம் என்பதால் உங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலைகளை குறித்த நேரத்தில் முடித்து கொடுப்பது நல்லது.

உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ட்ரீ ஆஃப் லைஃப் சின்னம்

சிம்மம்:

வீட்டில் உறவுகளுடன் தேவையற்ற வீண் வாக்கு வாதங்கள் வரலாம் என்பதால் வாயை கொடுத்து வம்பில் மாட்டி கொள்ளாதீர்கள். எது நடந்தாலும் அமைதியாக கடந்து செல்லுங்கள். அலுவலகத்தை பொறுத்த வரை இன்று நீங்கள் ஈடுபடும் டீம் ஒர்க் உங்களுக்கு நல்ல பெயரை வாங்கி தரும்.

உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு ஸ்டீல் பாக்ஸ்

கன்னி:

உங்கள் வீட்டிற்கு மாலை அலல்து இரவு நேரங்களில் விருந்தினர்கள் வர கூடும். இதனால் இன்றைய நாளை மகிழ்ச்சியுடன் நிறைவு செய்வீர்கள். என்றாலும் அலுவலகத்தை பொறுத்த வரை உங்களது வேலை முடிய வேண்டும் என்றால் சிலரின் ஈகோவை நீங்கள் திருப்திப்படுத்த வேண்டும் என்ற நிலை ஏற்படலாம். பொழுது அமைதியாக கழிய அவர்களிடம் மோதாமல் அமைதியாக அனுசரித்து செல்வது நல்லது.

உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு ரூபி ஸ்டோன்

துலாம்:

வீட்டில் நெருங்கிய உறவினர்கள் குறிப்பாக உடன்பிறந்தவர்களுடன் நேரம் செலவிட இன்று ஒரு நல்ல நாள். வெளி சூழல்களால் அதிகப்படியான அல்லது தேவையற்ற மன அழுத்தம் உங்களை எரிச்சலடைய செய்யலாம்.

உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு நீல நிற ரத்தினம்

விருச்சிகம்:

இன்றைய நாளில் நீங்கள் தொட்டது துலங்கும். உங்கள் பழைய ஆர்வத்தை மீட்டெடுக்க வேண்டிய சிறப்பான நாள். இன்று உங்கள் ஆற்றல் வெளிப்படும் மற்றும் உற்சாகமாக இருப்பீர்கள்.

உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - மஞ்சள் நிற கண்ணாடி

தனுசு:

தொலைதூரத்தில் அல்லது வெளிநாட்டில் இருந்து வரும் போன் கால்உங்கள் நாளையே சிறப்பானதாக மாற்றும். ஒரு குறுகிய வெளியூர் பயணம் நன்மை தரலாம். மேலும் எல்லாவற்றையும் நேர்மறையாக மற்றும் புன்னகையுடன் எதிர் கொள்ளுங்கள்.

உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு சிவப்பு பவளம்

மகரம்:

சில புதிய வழக்கங்களை நீங்கள் தொடங்க இன்று ஒரு நல்ல நாள். ஒரு புத்தகம் அல்லது கட்டுரை உங்களது வாழ்விற்கு ஊக்கமளிக்கும். தொலைந்து போனதாக நீங்கள் கருதும் ஒன்று இன்றைக்கு கிடைக்கலாம். உங்கள் தேவைகளுக்கு முன்னுரிமை கொடுங்கள்.

உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - சில பறவைகள்

கும்பம்:

இன்றைய நாள் உங்களுக்கு கலவையான முடிவுகளை கொண்டதாக இருந்தாலும் அவை நிலையானதாக இருக்கும். நீங்கள் முயற்சி செய்யும் செயல்களில் மெதுவான முன்னேற்றத்தை காணலாம். உங்கள் உள்ளுணர்வை பின்பற்றுங்கள். எதிர்மறை உணர்ச்சிகளை தூக்கி எறியுங்கள்.

உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - செவ்வந்திக்கல்

மீனம்:

நீங்கள் இன்று நம்பிக்கையுடனும், எதிர்பார்த்த முடிவை எடுப்பதில் உறுதியுடனும் இருப்பீர்கள். குடும்பத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பீர்கள். யாரேனும் உதவி கேட்டு வந்தால் உங்களால் செய்ய முடிந்தது செய்து விடுங்கள்.

உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு கார்னெட் ஸ்டோன்
Published by:Vaijayanthi S
First published:

Tags: Oracle Speaks

அடுத்த செய்தி