Home /News /spiritual /

தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு பதவி உயர்வுகள் கிடைக்கும் (10.03.2022)

தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு பதவி உயர்வுகள் கிடைக்கும் (10.03.2022)

தெய்வீக வாக்கு

தெய்வீக வாக்கு

Rasi Palan | சில நாட்களுக்கு முன்பு நீங்கள் கனவில் கண்டது போலவே, இன்று உங்களுடைய நாள் சிறப்பாக அமையும். அறிமுகமில்லாத நபரை சந்திப்பது உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுத்து நீங்கள் எதிர்பார்த்தது போலவே எல்லாம் நடைபெறும்.

மேஷம் :

நாம் நடப்பவற்றை எப்படி விமர்சித்தாலும், அதில் ஒரு பகுதியாகவே இருப்பது முரண்பாடாக இருக்கிரதவல்லவா? அதைப் போன்ற ஒரு நாளாகத் தான் இன்று உங்களுக்கு இருக்கும். மிகவும் குழப்பமாக, சரி எது, தவறு எது, என்ற ரீதியில் மனநிலை இருக்கும். பதட்டம் குறைக்க தியானம் மற்றும் மூச்சுப் பயிற்சி செய்யுங்கள்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – ஒரு தெளிவான குவார்ட்ஸ்

ரிஷபம் :

இன்று உங்களுக்கு ப்ரிசம் போல இருக்கும். அதாவது, உங்களைச் சுற்றி நடக்கும் பல்வேறு விஷயங்களுக்கு நீங்கள் தான் மைய ஒளியாகத் திகழ்வீர்கள். உங்களுக்காக பல விஷயங்கள் காத்திருக்கின்றன. எதிர்பார்த்த பணவரவும் கிடைக்கும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – புறா

மிதுனம் :

எந்த விதமான கிசுகிசுக்களையும் பேசாமல் நீங்கள் தவிர்க்க வேண்டும், ஏனென்றால் மற்றவர்கள் உங்களை கிசுகிசுக்களை பேச வைத்து அது உங்களுக்கு சில நாட்கள் கழித்து தேவையில்லாத பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும். நீங்கள் சந்திக்க வேண்டும் என்று ஆவலாக காத்திருக்கும் நபர் வேறு சில திட்டங்களை வைத்திருப்பார். எனவே உங்கள் திட்டத்தை மறு பரிசீலனை செய்யுங்கள்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – வெள்ளிக் கிண்ணம்

கடகம் :

சில நாட்களுக்கு முன்பு நீங்கள் கனவில் கண்டது போலவே, இன்று உங்களுடைய நாள் சிறப்பாக அமையும். அறிமுகமில்லாத நபரை சந்திப்பது உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுத்து நீங்கள் எதிர்பார்த்தது போலவே எல்லாம் நடைபெறும். சந்தையில் புதிதாக இருக்கும் ஒரு ப்ராஜெக்டில் நீங்கள் பணி அமர்த்தப்படுவார்கள்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – அடர் நீல பொருள்

சிம்மம் :

நீங்கள் ஏதேனும் ஒரு முடிவு செய்துவிட்டால் அதைப் பற்றிய மாற்றுக் கருத்தை உங்களிடம் புரிய வைக்க முயற்சி செய்வது மிகவும் கடினமானது. ஆனால் மற்றவர்கள் சொல்வதையும் நீங்கள் கவனிக்கலாம். உங்களிடம் இருக்கும் அபரிதமிதமான ஆற்றலை நீங்கள் ஒரு குறிப்பிட்ட ஒரு விஷயத்தில், குறிப்பிட்ட திசையை நோக்கி மட்டுமே செலுத்தலாம். தேவை இல்லாத பல்வேறு ஆலோசனைகள் உங்களை பாதிக்கக்கூடும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – கருப்பு சிப்பர்

கன்னி :

பலரும் விரும்பாத மிகவும் மோசமான ஏதேனும் ஒரு விஷயத்தை நீங்கள் பேசி விடக்கூடும். எனவே உங்கள் வார்த்தைகளை மிகவும் கவனமாக கையாளுங்கள். நீங்கள் பரிசு அல்லது பாராட்டை எதிர்பார்த்து காத்திருக்கும் நபரிடம் இருந்து உங்களுக்கு கிடைக்காது.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – கேன்வாஸ்

துலாம் :

உங்களை கிரஷ்ஷாக நினைக்கும் ஒருவர் உங்களை சந்திக்க முயற்சி செய்யலாம். நீங்கள் இருவரும் நெருங்கிக் பழகக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். இந்த உறவை எப்படி கையாள்வது அல்லது கமிட் செய்யலாமா என்று உங்களுக்கு குழப்பமாக இருக்கும். அதே நேரத்தில் அந்த குறிப்பிட்ட நபரிடமிருந்து விலகி இருப்பதும் உங்களுக்குக் கடினமாக இருக்கும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – புதிய மொபைல்

விருச்சிகம் :

ஒரே விஷயத்தை பலரும் பல விதமாகப் பார்ப்பதால், ரகசியம் என்பது எல்லாரிடமும் உங்களுக்கு சாதகமாக இருக்காது. உங்களுக்கு நீங்கள் பாஸ் ஆக விரும்புவதால், நீங்கள் வேறு விதமான வேலைக்காக முயற்சிக்க வேண்டும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – குடை

தனுசு :

உங்கள் சீனியரிடம் நீங்கள் உருவாக்கிய இம்ப்ரஷன் நீண்ட காலத்துக்கு பலன் தரும் மற்றும் பதவி உயர்வுகள் கிடைக்கும். நீங்கள் முன்னேறிச் செல்ல இந்த காலம் மிகவும் முக்கியமானது. யாரை நம்புகிறோம் என்பதில் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – காப்பர் வயர்

மகரம் :

மிகவும் தாராளமாக இருப்பது உங்களுடைய மன அமைதியை குலைத்துவிடும். எனவே, வேலை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கைக்கிடையே நீங்கள் சரியாக பேலன்ஸ் செய்ய வேண்டும். உங்கள் வாழ்க்கைத்துணைக்கு நீங்கள் ஆதரவாக இருக்க வேண்டும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – நீல கவர்

கும்பம் :

இன்று நாளின் தொடக்கத்தில் உங்களுக்கு ஏதேனும் குழப்பம் இருக்கலாம். ஆனால், நாட்கள் செல்ல செல்ல, நீங்கள் முன்னேற்றம் காணுவீர்கள். அடுத்து என்ன செய்யவேண்டும் என்று உங்களால் நன்றாக உணர முடியும். நீங்கள் வெளிநாட்டுக்கு செல்ல முயற்சி செய்து கொண்டிருந்தால், அது சாதகமாக முடியும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – கண்ணாடி பாட்டில்

மீனம் :

எது முக்கியம் மற்றும் எது அவசியம் என்று இரண்டிற்கும் இடையே கண்டறிவது கடினம். சில நேரத்தில், இரண்டுமே தேவைப்படும். உங்கள் குடும்பம் உங்களுடைய முடிவுகளில் ஆதரவாக இருப்பார்கள். நீங்களும் வெற்றி காணுவீர்கள்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – ஒரு விளக்கு
Published by:Selvi M
First published:

Tags: Oracle Speaks, Rasi Palan

அடுத்த செய்தி