Home /News /spiritual /

தெய்வீக வாக்கு: இன்று உங்களுக்கு உற்சாகமான நாளாக அமையும்... (ஏப்ரல் 10,2022)

தெய்வீக வாக்கு: இன்று உங்களுக்கு உற்சாகமான நாளாக அமையும்... (ஏப்ரல் 10,2022)

தெய்வீக வாக்கு

தெய்வீக வாக்கு

Today Rasi Palan | உங்களின் நெருங்கிய நண்பர் ஒரு முக்கியமான விஷயத்திற்காக உங்களிடம் வந்து ஆலோசனை கேட்க கூடும் | Today-rasi-palan-10-april-

    மேஷம்:

    இன்றைய நாள் நீங்கள் செய்யும் சிறு முயற்சி கூட உங்களுக்கு சிறப்பான பலனை தரும். ஏதாவது வேலை விஷயமாக வெளியூர் செல்ல திட்டமிட்டிருந்தால் பயணம் நல்ல படியாக அமையும். ரியல் எஸ்டேட்டில் நீங்கள் செய்து உள்ள முதலீடுகளில் சில முன்னேற்றங்களை காணலாம்.

    உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு விளக்கு

    ரிஷபம்:

    உங்களுக்கான வாய்ப்புகளை இன்று எதிர்பார்த்து காத்திருப்பீர்கள். ஆனால் கைகூடாமல் போகலாம், அதற்காக இன்னும் சில நாட்கள் காத்திருக்க நேரிடலாம். இன்று உங்கள் வீட்டிற்கு விருந்தினர்கள் வருகை தரலாம்.

    உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - இரண்டு குருவிகள்

    மிதுனம்:

    இன்று நீங்கள் குழப்பமாக உணரலாம். உங்கள் மன அமைதிக்கு தியானம் உதவும். யாரேனும் ஒருவர் கூறும் தற்செயலான வார்த்தை காரணமாக நீங்கள் புண்பட நேரிடலாம். அவர்களின் வார்த்தையை மறந்து மன்னித்து விடுவது நல்லது.

    உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு பனை செடி

    கடகம்:

    பணியிடத்தில் இன்று உங்களுக்கு வேலைபளு சற்று அதிகமாக இருக்கும். காதல் ஆர்வம் உங்களுக்கு ஏற்பட கூடும். இன்று நீங்கள் சிந்திக்க அல்லது எதிர்வினையாற்ற மிக குறைவான நேரமே இருக்கும். இன்றைய நாள் உங்களுக்கு பரபரப்பாகவே செல்லும்.

    உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - மண் பாண்டங்கள்

    சிம்மம்:

    தொழில் மற்றும் வேலையில் உங்கள் கவனம் நன்றாக இருக்கும். நீங்கள் அர்ப்பணிப்புடன் செய்யும் செயல்கள் மீது இன்று நிறைய எதிர்பார்ப்புகள் ஏற்படும். உங்கள் வேலையில் சில பதவி உயர்வுகளை எதிர்பார்க்கலாம். காதல் வாழ்க்கையில் ஈகோவை தவிர்த்து கொள்ளுங்கள்.

    உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு மாணிக்ககல்

    கன்னி:

    இன்று உங்களுக்கு உற்சாகமான நாளாக அமையும். எதிலும் அவசரம் காட்டாமல் நிதானமாக இருப்பது நல்லது. பலனை எதிர்பார்க்காமல் நீங்கள் செய்த வேலைக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். விளையாட்டு வீரர்களுக்கு நல்ல வாய்ப்புகள் வந்து சேரும்.

    உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு ஆடும் நாற்காலி

    துலாம்:

    உங்களின் நெருங்கிய நண்பர் ஒரு முக்கியமான விஷயத்திற்காக உங்களிடம் வந்து ஆலோசனை கேட்க கூடும். உங்களின் வேலைத்திறன் மற்றும் ஆளுமைக்கு பாராட்டு கிடைக்கும். எந்த ஒரு விஷயத்திலும் தீர விசாரிக்காமல் பிறர் பேச்சை கேட்டு முடிவுகள் எடுக்காதீர்கள்.

    உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு சில்வர் வயர்

    விருச்சிகம்:

    நீங்கள் ஒரு உழைப்பாளி எனில் உங்களுக்கு இன்றைய நாள் சிறப்பானதாக இருக்கும். அலுவலகத்தில் முக்கியமான உயரதிகாரிகளிடமிருந்து உங்கள் பணிக்கான பாராட்டுகளை பெற வாய்ப்புள்ளது. குடும்பத்தில் சில சிக்கல்கள் ஏற்படலாம்,அதை உடனடியாக பேசித் தீர்ப்பது நல்லது.

    உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு தெளிவான குவார்ட்ஸ்

    தனுசு:

    இன்று உங்களது விலையுயர்ந்த பொருட்கள் மீது நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். வேலைகளில் திடீர் தொந்தரவுகள் நேரிடலாம் அல்லது சில சிக்கல்களை சந்திக்கலாம். இன்று நீங்கள் எங்கும், எதிலும் எச்சரிக்கையுடன், விழிப்புடன் இருக்க வேண்டும்.

    உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு பிரமிடு

    மகரம்:

    இன்று பல சிக்கலான விஷயங்களை சந்திக்க நேரிடலாம். குடும்ப உறுப்பினர்களிடம் இருந்து நல்ல செய்தி வரும். இன்று உங்களுக்கு வெகுமதி அல்லது அங்கீகாரம் கிடைக்கும். அஜீரண கோளாறு ஏற்படும் வாய்ப்பு இருப்பதால் வெளியே உணவு சாப்பிடும் போது கவனம் தேவை.

    உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு செதுக்கப்பட்ட கல்

    கும்பம்:

    இன்று நீங்கள் எதிலும் வெளிப்படையாக இருப்பது நல்லது. எதிலும் ஆர்வமுடன் ஈடுபடுவீர்கள், உற்சாகம் மற்றும் மகிழ்ச்சியுடன் இருப்பீர்கள். உங்களை பார்த்து மற்றவர்கள் ஆச்சரியப்படலாம்.

    உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ட்ரீ ஆஃப் லைஃப் சின்னம்

    மீனம்:

    விடாமுயற்சி மட்டுமே உங்களுக்கு விருப்பமான முடிவுகளை தேடி தரும். உத்தியோகபூர்வ ஆவணங்கள் அல்லது ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் முன் மிகவும் கவனமாக இருக்கவும்.

    உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு மீன் தொட்டி
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Oracle Speaks

    அடுத்த செய்தி