Home /News /spiritual /

தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு இன்று எதிர்பாராத வாய்ப்புகள் வந்து சேரும்... (ஏப்ரல் 09, 2022)

தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு இன்று எதிர்பாராத வாய்ப்புகள் வந்து சேரும்... (ஏப்ரல் 09, 2022)

தெய்வீக வாக்கு

தெய்வீக வாக்கு

Rasi Palan | இன்று நீங்கள் நேர்மறையாக, ஆற்றலுடனும் இருப்பது போல உணர்வீர்கள்...

மேஷம்:

இன்றைய நாள் உங்களுக்கு செலவுகளை கொண்டு வரும். எனவே நீங்கள் செலவு விஷயத்தில் கவனமாக மற்றும் சிக்கனமாக இருக்க வேண்டும். நடக்கும் என்று நீங்கள் நம்பிக்கை இருந்த ஒன்று நடக்காமல் போகலாம்.அதை பாசிட்டிவாக எடுத்து கொள்ளுங்கள். செரிமான பிரச்சனைகள் ஏற்படலாம் என்பதால் உணவில் கவனமாக இருங்கள்.

உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு சணல் நாற்காலி

ரிஷபம்:

இன்று எந்த நேரத்திலும் நீங்கள் எதிர்பார்க்காத வாய்ப்பு உங்களை தேடி வரலாம். உங்கள் உடன்பிறந்த சகோதரி அல்லது சகோதரருக்கு உங்கள் உதவி அல்லது வழிகாட்டுதல் தேவைப்படலாம். எனவே அவர்களுக்காக சிறிது நேரம் ஒதுக்குங்கள்.

உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு ஜேட் செடி

மிதுனம்:

குறிப்பிட்ட சில வேலைகளை தாமதமாக நீங்கள் செய்து வருகிறீர்கள் என்றால், அந்த வேலைகளுக்கு இன்று முன்னுரிமை கொடுங்கள். மனதில் இருக்கும் குழப்பங்களை போக்க நீங்கள் எடுக்கும் முயற்சி நன்மை தரும். குழப்பங்கள் நீங்கினாலே நீங்கள் முன்னேறுவதற்கான வழி பிறக்கும்.

உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு மீன் தொட்டி

கடகம்:

இன்று நீங்கள் நேர்மறையாக, ஆற்றலுடனும் இருப்பது போல உணர்வீர்கள். நீங்கள் வெளிநாட்டில் முதலீடு செய்ய திட்டமிட்டு இருந்தால் அது நிலையானதாக இருக்காது. எனவே அந்த முடிவை மறுபரிசீலனை செய்யுங்கள். ஒரு குறிப்பிட்ட வேலை உங்களுக்கு வழங்கப்பட்டால் அதற்கு ஒரு காரணம் இருக்கும். எனவே அதை குறித்த நேரத்தில் நிறைவேற்றுங்கள்.

உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு கழுகு

சிம்மம்:

இன்று பணியிடத்தில் மூத்த அதிகாரிகள் உங்களை கேள்வி கேட்க கூடும். உங்கள் வாழ்க்கை துணையிடம் விவாதித்து முடிவெடுக்க வேண்டிய சில விஷயங்கள் இருக்கலாம். வெளிநாட்டிற்கு சென்று உங்கள் பிள்ளைகள் படித்து வருகிறர்கள் என்றால் அவர்கள் மூலம் நல்ல செய்து உங்களுக்கு வரலாம்.

உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு கடிதம்

கன்னி:

கடந்த சில நாட்களாக ஒரு விஷயத்தில் கவனம் செலுத்த முடியாமல் திணறி இருப்பீர்கள். இன்று உங்கள் மனதை ஒருமுகப்படுத்தி அதில் கவனம் செலுத்தினால் வெற்றி கிடைக்கும். நண்பர்களுடன் வெளியே செல்வது உங்களுக்கு அமைதி தரும். காதல் ஆர்வமுள்ள ஒருவர் உங்களை சந்திக்க விரும்பலாம்.

உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு சில்க் ஸ்கார்ஃப்

துலாம்:

உங்கள் கடந்தகால அனுபவத்திலிருந்து வேறுபட்ட ஒன்றை நீங்கள் இன்று பெறும் வாய்ப்பு உள்ளது. மாற்றங்களை பற்றி யோசிப்பது உங்களை உற்சாகப்படுத்தும். புதிய வேலை ஏதாவது தொடங்க திட்டமிட்டிருந்தால் இன்று அதற்கு நல்ல நாள். பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் இன்று உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.

உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - தங்கத்தில் செய்த வேலைப்பாடு

விருச்சிகம்:

புதிய சொத்து வாங்க மற்றும் முதலீடு செய்ய இன்று ஏற்ற நாள். நீங்கள் பங்கு சந்தையில் முதலீடு செய்துள்ளீர்கள் என்றால், எதிர்பாராத வகையில் பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. சீரற்ற ஆன்லைன் பரிவர்த்தனைகளை இன்று தவிர்ப்பது நல்லது.

உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு மஞ்சள் பெட்டி

தனுசு:

நீங்கள் இன்று ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த ஒரு வாய்ப்பு தாமதமாகலாம். மேலும் உணர்ச்சி ரீதியாக பாதிக்கப்படலாம். எனவே இன்று நீங்கள் மன ரீதியாக சோர்வடையாமல் இருக்க அமைதியான இடத்திற்கு தனியாக பயணம் செல்வது நல்லது.

உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு வெள்ளை வலை

மகரம்:

சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்த உங்கள் குடும்ப உறுப்பினர்க குணமடைவதற்கான அறிகுறிகளை இன்று காட்டலாம். வீட்டில் நீண்ட காலத்திற்கு பின் சிறப்பான ஆற்றல் வெளிப்படும். உங்களின் பொருளாதார நிலை மேம்படும். எதிலிருந்தும் தப்பித்துச்செல்வது தீர்வாகாது என்பதால் இன்று எதையும் துணிவோடு எதிர்கொள்ள வேண்டிய நாள்.

உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு முத்து

கும்பம்:

வியாபாரிகள் மற்றும் கடை உரிமையாளர்களுக்கு இன்று திடீர் லாபம் அல்லது அதிர்ஷ்டம் கிடைக்கும். நீங்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் விஷயம் மாறவில்லை என்றால் அதை இன்று மறுபரிசீலனை செய்யலாம். சிலர் இன்று தாங்கள் தனிமையாக இருப்பதை போல உணரலாம்.

உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - உங்களுக்கு விருப்பமான பழைய கேஜெட்

மீனம்:

வெற்றிக்காக இதுவரை காத்திருக்கும் விஷயங்களில் நீங்கள் நினைத்தபடியான முடிவுகள் வர வாய்ப்புகள் உள்ளது. வீண் விவாதங்கள் மற்றும் சண்டைகள் ஏற்படும் என்பதால் இவற்றை தவிர்த்து விடுங்கள். உங்களுக்கான திசையை நோக்கி தொடர்ந்து செல்ல வேண்டிய நாள். மாலை நேரத்தில் உங்களை உற்சாகப்படுத்தும் சம்பவங்கள் நிகழலாம் அல்லது பாசிட்டிவான நபர்களை சந்திக்கலாம்.

உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - விண்மீன் கூட்டம்
Published by:Vaijayanthi S
First published:

Tags: Oracle Speaks

அடுத்த செய்தி