Home /News /spiritual /

தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு இன்று திருமணத்திற்கு எதிர்பார்த்த வரன் அமையும்... (ஏப்ரல் 08,2022)

தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு இன்று திருமணத்திற்கு எதிர்பார்த்த வரன் அமையும்... (ஏப்ரல் 08,2022)

தெய்வீக வாக்கு

தெய்வீக வாக்கு

Rasi Palan உங்கள் மேல் அதிகாரியுடன் நீங்கள் மேற்கொள்ளும் ஆக்கப்பூர்வமான ஆலோசனையால் உங்கள் அறிவுத்திறன் மேம்படும்...

மேஷம் :

உங்களுக்கு யாரேனும் மன ரீதியான தொந்தரவுகள் அல்லது தேவையற்ற தொல்லைகளை அளித்துக் கொண்டிருந்தால், அவர்களை எதிர்கொள்வதற்கான பலம் உங்களுக்கு கிடைக்கலாம்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - லவங்கப்பட்டை

ரிஷபம் :

தற்காலிக பந்தங்கள் முடிவுக்கு வரும் நேரம் இது. வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்கு நகருவதற்கு இதுவே சரியான தருணம். உங்கள் வாழ்வின் கடந்த கால கசப்புகளை இப்போது மறந்து விடுங்கள். உங்கள் வாழ்வில் இனி அது எதிரொலிக்காது.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - குடிசை

மிதுனம் :

உங்கள் மேல் அதிகாரியுடன் நீங்கள் மேற்கொள்ளும் ஆக்கப்பூர்வமான ஆலோசனையால் உங்கள் அறிவுத்திறன் மேம்படலாம். உங்கள் தொழில்முறை வாழ்க்கைக்கு தடையாக உள்ள சில விஷயங்கள் உங்களுக்கு தெரியாமல் இருக்கலாம்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - வானவில்

கடகம் :

சவால் மிகுந்த வேளையில் நீங்கள் நம்பிக்கையுடன் இருந்தால் வெற்றியை எட்டலாம். நீங்கள் ஆச்சரியப்படும் வகையில் உங்களிடம் ஒருவர் காதலை வெளிப்படுத்த வாய்ப்பு உண்டு. எதிர்கால முடிவுகளை தான்தோன்றி தனமாக செய்யாமல் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஏரி

சிம்மம் :

நீங்கள் போட்டித் தேர்வு அல்லது நுழைவுத் தேர்வுக்கு முயற்சி செய்பவர் என்றால், அதன் முடிவுகள் உங்களுக்கு சாதகமாக அமையக் கூடும். இதுநாள் வரையில் உங்களுக்கு இருந்த லேசான பதட்டம் இனி இருக்காது. வெளியிடங்களில் உணவுகளை தவிர்ப்பது நல்லது.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - படகு

கன்னி :

எதிர்வரும் வாரத்தில் மாபெரும் திட்டங்களை முடிவு செய்வீர்கள். நீங்கள் எதிர்பார்த்த பெரும் காரியம் விரைவில் நிறைவேறும். உங்கள் திறன் வாய்ந்த துறையில் புதிய வாய்ப்பு உங்களுக்கு கிடைக்கும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - தலைப்பாகை

துலாம் :

சிலர் வாக்குறுதி அளித்தபடி நடந்து கொள்ள மாட்டார்கள். ஆனால், இதை வைத்து மற்றவர்களை நீங்கள் எடைபோட வேண்டியதில்லை. நீங்கள் நினைத்தது நடக்கவில்லை என்றால் மாற்று வழிமுறையை கடைப்பிடிக்கவும். பணவரவை எதிர்பார்க்கலாம்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ப்ளூ ராசிக்கல்

விருச்சிகம் :

நீங்கள் புதிய தொழில் தொடங்க திட்டுமிடுபவர் என்றால், அதற்கு தேவையான நிதி கிடைக்க வாய்ப்பு உண்டு. சர்வதேச அளவிலான வாய்ப்புகள் உண்டு. பழைய நண்பரை பிரிவதால் மன வருத்தங்கள் உண்டாகலாம்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - கடல் சிப்பி

தனுசு :

உங்கள் குடும்பத்தினர் அல்லது நெருங்கிய ஒருவரிடம் இருந்து உங்களை ஆச்சரியப்படுத்தும் செயல் நடக்கக் கூடும். திருமணத்திற்கு எதிர்பார்த்த வரன் அமையும். கோடை காலத்தில் திருமணம் நடக்கலாம்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - பேஷன் பழம்

மகரம் :

தொழிலில் கூட்டு சேருவது அல்லது புதிய தொழில் தொடங்குவதற்காக சில பழைய நண்பர்கள் உங்களை அணுகக் கூடும். அரசு அதிகாரிகளுக்கு சவால் மிகுந்த தருணம் காத்திருக்கிறது. மாணவர்கள் கடுமையாக உழைக்க வேண்டும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - படிகக்கல்

கும்பம் :

சில குற்றச்சாட்டுகளை நீங்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். குடும்பத்தில் தேவையான ஆதரவு கிடைக்கும். அதிக செலவுகளை குறைத்துக் கொண்டு, சேமிப்புகளை தொடங்க வேண்டியது அவசியம்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஜாஸ்மின்

மீனம் :

தற்போது நீங்கள் எதிர்கொண்டு வரும் சிக்கல்களுக்கு தீர்வு காண, அடிப்படையான சில விஷயங்களை மாற்றியமைக்க வேண்டியிருக்கும். அலுவலகத்தில் மூத்த அதிகாரி ஒருவர் உங்களுக்கு அறிவுரை வழங்கலாம். எல்லாவற்றையும் அனைவரிடமும் விவாதிக்காதீர்கள்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - கூலாங்கல்
Published by:Vaijayanthi S
First published:

Tags: Oracle Speaks

அடுத்த செய்தி