Home /News /spiritual /

தெய்வீக வாக்கு: இந்த ராசியினர் இன்று வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது... (ஏப்ரல் 06, 2022)

தெய்வீக வாக்கு: இந்த ராசியினர் இன்று வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது... (ஏப்ரல் 06, 2022)

தெய்வீக வாக்கு

தெய்வீக வாக்கு

Rasi palan | உங்கள் பொறுப்பை பகிர்ந்து கொள்ள இன்று புதிய நபர் உங்களுடன் கூட்டு சேரலாம். உங்கள் முன்னேற்றத்திற்கான ஒரு நல்ல செய்தி இது...

மேஷம்:

இன்று நீங்கள் மிகவும் சோம்பலாக உணர்வீர்கள். சுறுசுறுப்பாக அலல்து வேலை செய்யும் மனநிலை இருக்காது. இதனால் பல வேலைகளை இன்று செய்யாமல் தள்ளி போடுவீர்கள். ஒட்டு மொத்தமாக எனர்ஜி இல்லாதது போலவும், அலுப்பாகவும் இன்றைய நாள் உங்களுக்கு இருக்கும்.

உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு கண்ணாடி பாட்டில்

ரிஷபம்:

உங்களுக்கு நெருக்கமானவர்களுக்கும், உங்களுக்கு இடையே மனக்கசப்பு ஏற்படலாம். எனவே உங்கள் வாழ்க்கைதுணை போன்ற நெருங்கிய உறவுகளிடம் கவனமாக பழகுங்கள். இன்றைய தினம் காலை நேரம் உங்களுக்கு இனிமையனதாக இருக்க கூடும். கோபம் ஏற்படும் படி யாராவது ஏதாவது சொன்னால், அந்த இடத்தில் இருந்து உடனே சென்றுவிடுங்கள். வீண் வாக்குவாதங்களை தவிர்க்க பாருங்கள்.

உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு சன் டவுனர்

மிதுனம்:

உங்கள் பொறுப்பை பகிர்ந்து கொள்ள இன்று புதிய நபர் உங்களுடன் கூட்டு சேரலாம். உங்கள் முன்னேற்றத்திற்கான ஒரு நல்ல செய்தி இது. நிலுவையில் உள்ள பணிகளை இன்றே முடிக்க முயற்சிக்கவும். சரியான நேரத்தில் உங்களுக்கு வரும் ஒரு விஷயம், உங்களை இன்று கூடுதல் வேலையிலிருந்து காப்பாற்றும்.

உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு ரிதம்

கடகம்:

இன்றைய நாள் மிகவும் பரபரப்பாகே சென்றாலும் உங்கள் குடும்பத்தினருடன் தொடர்பில் இருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். தலைமை பதவிக்கான வாய்ப்பு விரைவில் தேடி வருவதற்கான அறிகுறிகள் இன்று தென்படலாம்.

உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு நீர்நிலை

சிம்மம்:

நீங்கள் முன்பு யாரையாவது கஷ்டப்படுத்தி அதனால்அவர்கள் இன்னும் உங்களை மன்னிக்காமல் இருந்தால், இப்போது அவர்களுடன் சமரசம் செய்ய இன்று நல்ல நாள். பழைய நண்பர்களை சந்திக்க கூடும். வெளியிடங்களுக்கு செல்ல இன்று அதிக வாய்ப்பு இருப்பதால் அதிகம் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.

உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - மிக உயரமான கட்டிடம்

கன்னி:

இன்று சில சவால்கலாய் எதிர்கொள்ள நேரிடலாம் என்பதால் மனதை தயார்படுத்தி கொள்ளுங்கள். வெளிநாட்டில் இருந்து சில வாய்ப்புகள் உங்களை தேடி வரலாம். நாளின் முடிவில் மனதிற்கு மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடக்கலாம்.

உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு காஃபி ஷாப்

துலாம்:

வீட்டில் நிலவி வரும்அமைதி ஒரு சிறிய பிரச்சனை காரணமாக பாதிக்கப்படலாம். நீங்கள் திட்டமிடாத கூடுதல் பொறுப்புகளை செய்ய நேரிடும். உங்களின் மனநிலையை மகிழ்ச்சியாக்க புதிய பொழுதுபோக்கில் உங்கள் கவனம் செல்லலாம்.

உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு பைரைட் கிரிஸ்டல்

விருச்சிகம்:

நீண்ட நாளாக இழுபறியில் இருந்த காதல் விஷயங்களில் முன்னேற்றம் ஏற்படலாம். இப்போது வேலையில் உருவாகும் சூழ்நிலையை கவனத்தில் கொண்டு எச்சரிக்கையாக இருங்கள். இப்போது வேலைகளில் நீங்கள் காட்டும் ஈடுபாடு உங்களுக்கு பிற்காலத்தில்பயனுள்ளதாக இருக்கும்.

உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு பைந்நீலம் (பச்சை கலந்த நீல நிற மணிக்கல்)

தனுசு:

இன்றைய நாள் உங்களுக்கு சற்று மெதுவாக செல்லும். நீங்கள் இன்று சலிப்பாக உணரலாம். வேலைகளை சீக்கிரம் முடித்துவிட்டு சீக்கிரம் தூங்க சென்றால் போதும் என்ற மனநிலையில் இருப்பீர்கள். உங்களை விட்டு தொலைவில் உள்ள உங்களுக்கு நெருக்கமான ஒருவருடன் இன்று பேசும் வாய்ப்பு கிடைக்க கூடும்.

உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - வலுவான அல்லது உறுதியான பொருட்கள்

மகரம்:

எதிர்காலத்தில் முன்னேறும் பாதைக்காக புதிய கூட்டணி வாய்ப்புக்காக இன்று நீங்கள் தயாராகலாம். தெளிவாக இருப்பது போல தோன்றும் எதையும் நன்கு ஆராய்ந்து பிறகு முடிவெடுங்கள். உங்களுக்கு கீழ் பணிபுரிபவர் உங்கள் எதிர்ப்பார்ப்புக்கு ஏற்ப ஒத்துழைக்காமல் போகலாம்.

உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு டூர்மலைன் (கருநிற கனிமம்)

கும்பம்:

இன்றைய நாள் உங்களுக்கு சோர்வானதாக இருக்கலாம். எனவே சிறிது ஓய்வு எடுத்தல் நலம். ஒரு வேலையே செய்வதற்கு முன் அதில் எந்த அளவு உண்மைகள் இருக்கிறது என்பதை தெரிந்து கொண்டு அதை செய்ய துவங்குங்கள்.

உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு மெட்டாலிக் ஆர்ட்

மீனம்:

உங்களது நெருங்கிய மற்றும் ஒரு நல்ல நண்பருக்கு அவர்களின் குடும்ப விஷயங்களில் உங்கள் உதவி தேவைப்படலாம். உடன்பிறந்தவர்களுடன் மோதல் வரலாம் என்பதால் அவர்களை விமர்சிப்பதை தவிருங்கள். உங்களது சேமிப்பு தக்க சமயத்தில் இன்று உதவலாம்.

உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு புத்தர் சிலை
Published by:Vaijayanthi S
First published:

Tags: Oracle Speaks

அடுத்த செய்தி