Home /News /spiritual /

தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு காதல் வெற்றி அடையும்... (ஏப்ரல் 05, 2022)

தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு காதல் வெற்றி அடையும்... (ஏப்ரல் 05, 2022)

தெய்வீக வாக்கு

தெய்வீக வாக்கு

Rasi palan | நீண்ட நாளாக மனதில் இருந்த பாரம் இறங்கியதால், நீங்கள் மிகவும் லேசாக உணர்கிறீர்கள். இப்போது நீங்கள் உங்களுடைய அடுத்தடுத்த முக்கியத்துவத்தை நோக்கி முன்னேறலாம்...

மேஷம் :

ஒரு புதிய திறமையை கற்றுக்கொள்ள முயற்சித்து, அதனை வெற்றிகரமாக முடிப்பீர்கள். அடுத்த சில நாட்களில் அதனால் உங்களுக்கு பலன் கிடைக்க கூடும். பணிச்சுமை காரணமாக நீங்கள் சிறிய வேலையை எதிர்பார்க்கலாம், ஆனால் இது தற்காலிகமானது தான்.

உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - இறகு

ரிஷபம்:

இதுவரை நீங்கள் புரிந்துகொள்ளாமல் இருந்த புதிய பொறுப்பின் முக்கியத்துவம் இன்று தெரியவரும். யதார்த்தத்திற்கும், கற்பனைக்கும் இடையிலான இடைவெளியை போக்க உங்களை விட மூத்தவர் மூலம் சரியான அறிவுரை கிடைக்கலாம்.

உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் -பறவை

மிதுனம்:

இன்றை நாளின் பெரும்பகுதியை ஆற்றல் மற்றும் புத்துணர்ச்சியுடன் உருவாக்குங்கள். புதுமையான திட்டங்கள் உருவாக்கப்பட்டு, உடனடி வெற்றியை நோக்கி நகரும். அப்படி ஏதாவது செய்ய உங்களுக்கு ஒப்புதல் கூட இருக்கும். உங்கள் உடன்பிறந்தவர்கள் குடும்ப விஷயங்களில் உங்கள் உதவியை நாடலாம்.

உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - சிலந்தி

கடகம்:

பொய்க்கு பின்னால் மறைந்திருந்த அனைத்து உண்மைகளும் இப்போது தெளிவாக புரியும். ஆனால் நீங்கள் இப்போதைக்கு அதை மறுக்கவோ, ஒப்புக்கொள்ளவோ செய்வீர்கள். சூழ்நிலை எவ்வளவு மோசமாக இருந்தாலும், ஒருவருக்கு இரண்டாவது வாய்ப்பு கொடுப்பது நல்லது. பண விவகாரங்கள் தீரும்.

உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - இரண்டு குருவிகள்

சிம்மம்:

தற்செயல் என்று எதுவும் இல்லை, வீட்டு வாசலைத் தேடி நல்லது, கெட்டது என எதுவந்தாலும் அது உங்களைத் தான் சாரும். லேசான பதட்டம் இருக்கலாம். ஆனால் அனைத்தும் மிக விரைவில் சரியாகிவிடும், அதற்கான நேர்மறை அறிகுறிகள் உள்ளன.

உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - பீங்கான் குவளை

கன்னி:

புதிய வாய்ப்புகள் மற்றும் யோசனைகள் உங்கள் வீடு தேடி வந்து கதவை தட்டும் என்பதால், இன்றைய தினம் உற்சாகமானதாக இருக்கும். ஆனால் சரியானதை தேர்ந்தெடுப்பதற்கான சரியான மனநிலையில் நீங்கள் இல்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். இதன் பொருள் நீங்கள் இன்னும் சிறிது நேரம் காத்திருக்க வேண்டும். ஒரு முடிவை எடுக்கும் முன்பு நன்றாக சிந்திக்க வேண்டும்.

உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - நீல நிற மண்பாண்டங்கள்

துலாம்:

உங்கள் பணியிடத்தில் சில புதிய நபர்களை சந்திக்க வாய்ப்பு உள்ளது. வீட்டில் சிறிது நேரம் மட்டுமே இருப்பதால், யாருக்காவது தீர்வு சொல்லும் முன்பு அவர்களைப் பற்றி புரிந்துகொள்ள சிறிது நேரம் எடுத்துக்கொள்ளுங்கள். வார இறுதியில் புத்துணர்ச்சி திட்டம் சூப்பராக ஒர்க் அவுட் ஆக வாய்ப்புள்ளது.

உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - கழுகு

விருச்சிகம்:

கொஞ்ச நாட்களாகவே ஏங்கிக் கொண்டிருந்த மனம் நிறைந்த உணவும், மகிழ்ச்சியான சூழ்நிலையும் கிடைக்கக்கூடும். நீங்கள் இன்று வாரத்தைத் தொடங்கினாலும், நீங்கள் ஏற்கனவே ஒரு இடைவெளியைப் பற்றி யோசித்துக்கொண்டிருக்கிறீர்கள். சில பழைய முதலீடுகள் இப்போது லாபம் தரலாம்.

உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - அணில்

தனுசு:

கடைசி வாய்ப்பும் கைகூடவில்லை என்றால், அதற்கான காரணம் விரைவில் தெரிய வரும். பிள்ளைகளுடன் நீங்கள் கூடுதலாக, முழு அர்ப்பணிப்புடன் நேரம் செலவிட வேண்டும் என அவர்கள் எதிர்பார்க்கலாம். குடும்பத்தில் உள்ள வயதானவர்கள் உடல்நலக்குறைவு பற்றி தெரிவிக்கலாம். வேலை - வாழ்க்கை இரண்டையும் சமநிலையை செய்ய வேண்டிய நாள் இன்று.

உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - தோட்டம்

மகரம்:

ஒரு விஷயத்தில் முடிவெடுத்துவிட்டீர்கள் என்றால், உடனே காரியத்தில் இறங்க வேண்டிய சரியான நேரம் இது. எனவே காலம் கனிந்து வருவதால், தாமதம் செய்யாதீர்கள். உங்கள் மனைவி உங்களுக்கு பக்கபலமாக இருப்பார். நாளின் இரண்டாம் பாதியில் புதிய பார்வையாளர்கள் வரலாம்.

உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - கிளி

கும்பம்:

நீண்ட நாளாக மனதில் இருந்த பாரம் இறங்கியதால், நீங்கள் மிகவும் லேசாக உணர்கிறீர்கள். இப்போது நீங்கள் உங்களுடைய அடுத்தடுத்த முக்கியத்துவத்தை நோக்கி முன்னேறலாம். எந்த விஷயத்தையும் ஒத்திவைக்கவோ, ஒழுங்காக சீரமைக்கவோ தேவையில்லை. உங்களை யாரோ மிகவும் மிஸ் செய்கிறார்கள்.

உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - கூடு

மீனம்:

கடந்த வாரம் நீங்கள் சீரமைக்கப்பட்ட ஆற்றல்களுடன் பணியாற்றியதால் எல்லாமே சரியாக உள்ளது. இன்று வேலையில் சுணக்கம் ஏற்படலாம், ஆனால் அது கொஞ்ச நேரத்திலேயே சரியாகிவிடும். உங்களுடைய உணர்வுகளை எபப்டி வெளிக்காட்டப் போகிறீர்கள் என்பதில் நீங்கள் தெளிவாக இருக்க வேண்டும். எந்தவொரு குழப்பமும் தவறான தகவல் தொடர்புக்கு வழிவகுக்கலாம்.

உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஆமை
Published by:Vaijayanthi S
First published:

Tags: Oracle Speaks

அடுத்த செய்தி