Home /News /spiritual /

தெய்வீக வாக்கு: இந்த ராசியினர் வீட்டிலும், பணியிடத்திலும் கவனமாக இருக்க வேண்டும்... (ஏப்ரல் 04, 2022)

தெய்வீக வாக்கு: இந்த ராசியினர் வீட்டிலும், பணியிடத்திலும் கவனமாக இருக்க வேண்டும்... (ஏப்ரல் 04, 2022)

தெய்வீக வாக்கு

தெய்வீக வாக்கு

Rasi palan | உங்கள் நீண்ட தூர நண்பர்களுடன் நெட்வொர்க்கில் இருப்பது பயனுள்ளதாக இருக்கும். வேலை மற்றும் வேடிக்கையான நேரங்களின் கலவையாக இன்றைய நாள் இருக்கும்.

மேஷம்

நாளின் ஆரம்பம் சற்று மந்தமாக இருக்கலாம், ஆனால் வேகம் படிப்படியாக அதிகரிக்கும். சில சவால்களை சமாளித்து முன்னேறுவீர்கள். இன்று என்ன நடந்தாலும் அதனை பொறுமையாக கையாளுங்கள். நீண்ட நாள் பிரச்சனை இன்று முடிவிற்கு வரும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு காத்தாடி

ரிஷபம்

இன்று உங்களுக்கு ஒரு பரபரப்பான நாள். ஒரு சவாலான பணியை எடுத்து சரியான நேரத்தில் முடித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்துவீர்கள். ஆனால் உங்கள் வேலைகளை முடிக்க நீங்கள் பம்பரமாக சுழல்வீர்கள். வேலைச் சுமை அதிகமாக இருக்கக்கூடும். சில வாதங்கள் சில நேரம் உங்களை திசை திருப்பலாம். இப்போதைக்கு உங்கள் கோபத்தை கட்டுப்படுத்துவது நல்லது.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - சிட்டுக்குருவிகள்

மிதுனம்

இன்று நீங்கள் நிராகரித்த வாய்ப்பு திடீரென்று மீண்டும் தோன்றும். மறுபரிசீலனை செய்வது நல்லது. சில புதிய யோசனைகளை உருவாக்க வேண்டியிருக்கும். ரியல் எஸ்டேட்டில் இருப்பவர்கள் நிலையான வளர்ச்சியை சந்திக்கலாம்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - படிக நகைகள்

கடகம் :

இன்று திட்டமிட்ட பயணம் நடைபெறும். உங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். கடந்த கால அனுபவங்களை நினைத்து மகிழ்வீர்கள். சுற்றியுள்ள சிலர் உங்கள் திறமைக்கு எதிராக உங்கள் சாதனைகளை பற்றி கிசுகிசுக்கலாம். எச்சரிக்கையாக இருங்கள்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு விளக்கு

சிம்மம் :

இன்றைய நாள் நீங்கள் உறுதியாகவும், வழக்கத்தை விட உற்சாகமாக இருப்பதாகவும் உணரலாம். உங்கள் எதிர்கால யோசனைகளை முன்வைக்க இது ஒரு நல்ல நாளாக இருக்கலாம். ஒவ்வொரு விவரத்தையும் முன்கூட்டியே விவாதிக்கவும். ஒரு பழைய சக ஊழியர் உங்களை தேடி வருவார்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு மைல்கல்

கன்னி :

இன்று உங்கள் உள் உணர்வு அடுத்த கட்டத்தை நோக்கி உங்களை வழிநடத்தும். நீங்கள் ஏதேனும் விவாதத்தில் ஈடுபட்டிருந்தால், உங்கள் கருத்து முக்கியமானதாக இருக்கலாம். இன்று ஒருவர் உங்களுக்கு அளிக்கும் வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள். எனினும் இன்று கவனம் தேவை.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு டிஜிட்டல் வரைபடம்

துலாம் :

சில தவறான புரிதல்கள் இன்று சரியாகும். உங்கள் நாள் கூடுதல் பிஸியாக இருக்கலாம். எனவே உங்கள் நாள் பரபரப்பாக இருக்கும். உடல்நல பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் உங்களை நீங்களே கவனித்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு தேவையான உதவி இன்று கிடைக்கும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு கடை

விருச்சிகம் :

இன்று உங்கள் மேலதிகாரி உங்களை பாராட்டுவார். பணிகளை விரைவாக முடிக்க நீங்கள் முன்பே தயாராக இருக்க கற்றுக்கொள்ளுங்கள். தேவையில்லாத ரிஸ்க் எடுக்காதீர்கள் அல்லது நம்பத்தகாத வாக்குறுதிகளை கொடுக்காதீர்கள். மருத்துவ கவனிப்பு தேவைப்படலாம்.

மேலே இருந்து அதிர்ஷ்ட அடையாளம் - கையெழுத்து

தனுசு :

ரியல் எஸ்டேட் பிரச்சினையில் யாராவது உங்கள் உதவியை நாடலாம் அல்லது ஆலோசனை பெறலாம். அதிக நேரம் வேலை செய்ய வேண்டிய நிலை வரும். ஒரு சிறிய இடைவெளி உங்கள் மனதை தெளிவுபடுத்தலாம். ஒரு திறமையான நபர் உங்களுக்கு உதவலாம்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு பை

மகரம் :

உங்கள் நீண்ட தூர நண்பர்களுடன் நெட்வொர்க்கில் இருப்பது பயனுள்ளதாக இருக்கும். வேலை மற்றும் வேடிக்கையான நேரங்களின் கலவையாக இன்றைய நாள் இருக்கும். உங்கள் விலைமதிப்பற்ற பொருட்களுடன் கவனமாக இருங்கள். மேலும் தொழிலில் எதிர்பாராத திடீர் விரயங்கள் உண்டாகும். பணத்தை பத்திரப்படுத்தவும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு மெழுகுவர்த்தி

கும்பம் :

வீட்டிலும், பணியிடத்திலும் இன்று கவனம் தேவை. நீங்கள் சில கவலை பிரச்சினைகளை சந்திக்க நேரிடலாம். எனவே உங்கள் குடும்பத்தினருடன் உரையாடுவது ஒரு நல்ல விஷயமாக இருக்கலாம். சிறிய சந்தோஷங்கள் இன்று போதுமானதாக இருக்கலாம்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - கண்ணாடி

மீனம் :

இன்று பொருளாதார நிலை நன்றாக இருக்கும். உங்களைச் சுற்றி வதந்தி பரப்புபவர்கள் இருக்கலாம், அதை புறக்கணிப்பது கடினமாக இருக்கும் என்பதால் கவனம் தேவை. மன அழுத்தத்தின் போது குடும்ப உறுப்பினர்கள் காப்பாற்ற முன்வருவார்கள். உங்கள் திறமைகளை நீங்களே தீர்மானிக்க வேண்டும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - மரப்பெட்டி
Published by:Vaijayanthi S
First published:

Tags: Oracle Speaks

அடுத்த செய்தி