Home /News /spiritual /

தெய்வீக வாக்கு : இன்று முதல் இந்த ராசியினருக்கு செல்வாக்கு உயரும்... (ஏப்ரல் 03, 2022)

தெய்வீக வாக்கு : இன்று முதல் இந்த ராசியினருக்கு செல்வாக்கு உயரும்... (ஏப்ரல் 03, 2022)

தெய்வீக வாக்கு

தெய்வீக வாக்கு

Rasi palan | யாரேனும் ஒருவர் வேண்டுமென்றே உங்களுடன் பிரச்சனை ஏற்படுத்த வாக்குவாதத்தில் ஈடுபட விரும்பலாம். உங்களின் மனோபாவம் ஒரு பிரச்சினையாக இருக்ககூடும்...

மேஷம் :

உங்களுக்கு சம்மந்தமான ஒரு விஷயத்தில் நீங்கள் பழைமைவாதியாக இருந்தாலும், உங்கள் கண்ணோட்டம் முக்கியமான ஒரு நபரின் கவனத்தை ஈர்க்கும். எளிமையான அணுகுமுறை உங்கள் திட்டத்தை விரைவில் முடிக்க உதவும். நீங்கள் சில செல்வாக்கு மிக்க நபர்களைச் சந்தித்து, புதிய வாய்ப்பைப் பெறுவீர்கள். ஏதோ ஒரு வகையான அங்கீகாரத்தை விரைவில் பெறுவீர்கள்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – அமேதிஸ்ட்

ரிஷபம் :

இன்னொரு நபரின் நோக்கம் என்ன என்பதை அளவிடுவது அவ்வளவு சுலபமாக இருக்காது, ஆனால் நீங்கள் அந்த ரிஸ்க் எடுக்க விரும்புவீர்கள். உங்களைச் சுற்றியுள்ளவர்களை எளிதில் நம்புவது என்பது காலம் கடந்த ஒன்றாக மாறிவிட்டுள்ளது. விரைவில் நீங்கள் பயணம் மேற்கொள்வீர்கள். நீங்கள் புறக்கணிக்க முயற்சிக்கும் ஒருவர் அறிவிப்பு இல்லாமல் உங்களை சந்திக்க வரலாம். உங்கள் நெருங்கிய நண்பர்களை புத்திசாலித்தனமாக தேர்ந்தெடுங்கள்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – ரோஸ் குவார்ட்ஸ்

மிதுனம் :

உங்களுடைய சமீபத்திய பிரசெண்டேஷன் மூலம் அலுவலகத்தில் உள்ளவர்கள் உங்கள் மீது நல்ல அபிப்ராயத்தைப் பெறுவார்கள். உங்களை நன்றாக கவனித்துக் கொண்டிருக்கும் ஒருவர் மூலம் நீங்கள் விரும்பும் மாற்றம் ஏற்படும். உங்கள் மீதான உங்கள் நம்பிக்கை நீண்ட காலத்திற்குப் பிறகு மீண்டும் உறுதி செய்யப்படும் வாய்ப்பு உள்ளது. உங்கள் கடந்தகால சாதனைகள் உங்களுடைய திறனை உறுதி செய்யும். உங்கள் தற்போதைய உறவிலிருந்து பிரச்கனையை அகற்ற முயற்சிக்கவும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – தெளிவான குவார்ட்ஸ்

கடகம் :

உங்கள் மனம் புத்துணர்ச்சியாக இருக்க வேண்டும் என்றால், உங்களையே நீங்கள் பற்றிக் கொள்ள வேண்டும். கொஞ்சம் ரிலாக்சாக இருப்பது உங்களை நன்றாக புரிந்து கொள்ள உதவும். உங்கள் நண்பர்களுடன் குறைந்த நேரத்தையும் உங்களுக்காக, தனிமையில் அதிக நேரத்தையும் செலவிட நீங்கள் விரும்புவீர்கள். உங்கள் மீது சுமத்தப்பட்ட குடும்ப ரீதியான பிரச்சனை, இப்போது தீர்க்கப்படும். தேவையற்ற உதவிகளைக் கேட்பதைத் தவிர்க்கவும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – பவழம்

சிம்மம் :

உங்கள் வாழ்க்கைத் துணையுடன் பிரைவேட்டான உரையாடல்களை பொதுவெளியில் தவிர்க்கவும். நீங்கள் சில தேவையற்ற உணர்ச்சிகளில் மூழ்கிப்போவதை நீங்களே உணரலாம். இந்த நாள் அப்படி தான் செல்லும். கடந்த காலத்தில் உங்களுடன் நெருக்கமாக இருந்த யாரோ ஒருவர் உங்களை தொடர்பு கொள்ளலாம். உங்களுக்கு உணர்ச்சி ரீதியாகவும் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. சீரற்ற முடிவுகளை எடுக்காமல், நன்றாக யோசிக்க வேண்டும். இப்போது ஏதேனும் குழப்பம் இருந்தால், அதை தற்காலிகமாக விட்டு விடுங்கள். சுவாசப் பயிற்சிகளை செய்வது மன அழுத்தத்தைக் குறைக்கும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – பசுமையான புல்வெளி

கன்னி :

உங்கள் மனதில் ஒரு நல்ல திட்டம் இருக்கும், ஆனால் அது நிறைவேறுவதற்கு இன்னும் கொஞ்சம் காலம் பொறுமையாக காத்திருக்க வேண்டும். தினசரி செய்யக்கூடிய எளிய பணிகள் தாமதங்களை ஏற்படுத்தலாம். கடந்த காலத்தில் நீங்கள் செய்தவற்றின் நற்பலனை இப்போது பெறலாம். பல விஷயங்களைப் பற்றி ஒரே நேரத்தில் யோசிப்பது குழப்பம் மற்றும் தேவையற்ற மன அழுத்தத்தை ஏற்படுத்தும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – மரகதம்

துலாம் :

யாரேனும் ஒருவர் வேண்டுமென்றே உங்களுடன் பிரச்சனை ஏற்படுத்த வாக்குவாதத்தில் ஈடுபட விரும்பலாம். உங்களின் மனோபாவம் ஒரு பிரச்சினையாக இருக்ககூடும். மற்றவர்கள் உங்களிடம் அதிக வேலை பளுவை ஏற்படுத்தலாம். நீங்கள் மனதில் நிறைய விஷயங்கள் மறைத்திருப்பீர்கள், எல்லாவற்றையும் வெளிப்படையாக பேசுவது முக்கியமல்ல. கடந்த கால பிரச்சினையை தீர்க்க உங்களுக்கு சரியான வாய்ப்பு கிடைக்கும். வெளியிடங்களில் நேரத்தை செலவிடுவது மன அமைதியைத் தரும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – டார்மலின்

விருச்சிகம் :

முக்கியமான ஒருவருடன் இன்று நீங்கள் சந்திக்க ஒப்புக்கொண்டிருந்தால், அதற்கு மரியாதை அளிக்கும் வகையில் அவரின் நேரத்தையும் இடத்தையும் மதிக்கிறீர்கள் என்பதை உறுதி செய்யுங்கள். உங்களால் செயல்படுத்த முடியாத எந்த யோசனைகளைப் பற்றியும் பேசுவதை நீங்கள் தவிர்க்க வேண்டும். தற்போது காணப்படும் நிதி நெருக்கடி தற்காலிகமானது. குடும்பத்தில் மூத்தவர்கள் உங்களைப் பற்றி மிகவும் நல்ல அபிப்ராயம் கொண்டுள்ளனர். அவர்களை தலைகுனியச் செய்யாமல் இருக்க நீங்கள் முயற்சி செய்யலாம். ஒரு வயதான நபருக்கு உங்கள் உதவி தேவைப்படும், அவர் உங்களைத் தேடிக்கொண்டிருக்கலாம்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – சர விளக்கு

தனுசு :

நீங்கள் ஏதேனும் ஒரு விஷயத்தைப் பற்றி பலமுறை ஊகித்திருந்தால், உங்கள் அச்சம் உண்மையாகிவிடும். எனவே, இதை தவிர்க்க வேண்டுமானால், அதிகாரத்தை யாரிடமும் தரக்கூடாது. உங்கள் மன உறுதியை நீங்கள் பலப்படுத்தினால், உங்கள் ஆற்றல் அதிகரிக்கும். உங்கள் நண்பர்களில் இருவர் உங்களைத் தொடர்பு கொள்ள முயற்சி செய்யலாம், ஆனால் அவரை நீங்கள் சந்திக்க விரும்ப மாட்டீர்கள். உங்களிடம் புதிய பார்ட்னர்ஷிப் பற்றி யோசனை இருந்தால், உங்கள் கூட்டாளரைத் தேர்ந்தெடுப்பதைப் பற்றி நன்றாக யோசிக்க வேண்டும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – முத்து

மகரம் :

இந்த பிரபஞ்சம் தற்போது உங்கள் தேவை மற்றும் விருப்பங்களை நிறைவேற்றும் வகையில் மாற்றங்களை மேற்கொள்கிறது. நீங்கள் விரும்பியது நடந்தவுடன் நன்றியுணர்வுடன் இருக்க வேண்டும். ஏதும் ஒரு சிறிய பிரச்சினையில், சிறிய வாக்குவாதம் அல்லது கருத்து வேறுபாடு ஏற்படலாம். உங்கள் துணைக்கு உங்களுடன் அடிப்படை புரிதல் இல்லாமல் இருக்கலாம். அவர் முற்றிலும் மாறுபட்டவராக காணலாம். மனம் அமைதி பெற, ஆன்மீக பயிற்சி தேவைப்படும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – நீல ஸஃபையர்

கும்பம் :

இந்த உலகில் வாழ்வது சவால்கள் இல்லாமல் இருப்பது போல தோன்றலாம், ஆனாலும் நீங்கள் வளர, புதிய சவால்களை நீங்களே தேடிச்செல்லக் கூடும். ஒரு முன்னாள் ஊழியர், தன்னுடைய தனிப்பட்ட வேலைகளுக்காக உங்களை அணுகுவார். நீங்கள் பெற்றுக்கொள்ளும் இடத்தில் இருக்கிறீர்கள், எனவே, அதை முழுமையாகப் பயன்படுத்தலாம். இதுவரை நீங்கள் அடக்கிய உணர்ச்சிகள் பொதுவில் காட்டப்பட்டு, மற்றவர்களை திசைதிருப்பலாம். கடந்த காலத்தில் ஏற்பட்டிருக்கக்கூடிய பொருளாதார முன்னேற்றம் இன்னும் நீடிக்கும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – மஞ்சள் கிறிஸ்டல்

மீனம் :

நீங்கள் எந்த அளவுக்கு பணிவாகஇருக்கிறீர்களோ, அந்த அளவுக்கு மற்றவர்களின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். நீங்கள் இதைப் பின்பற்றினால், எதிர்ப்பு குறையும், எனவே உங்களால் நடப்பதை கவனிக்க முடியும். இந்த வாரம் உங்கள் குழந்தைகளின் மகிழ்ச்சி உங்களுக்கு மகிழ்ச்சியை உண்டாக்கும். அலுவலகம் சம்மந்தப்பட்ட பயணம் தள்ளிப்போகும். கொஞ்சம் ஓய்வு தேவை. பணப்புழக்கம் நன்றாக இருக்கும், முடிந்தால் அடர்சிவப்பு நிறத்தைத் தவிர்க்கவும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – கூழாங்கற்கள்
Published by:Vaijayanthi S
First published:

Tags: Oracle Speaks

அடுத்த செய்தி