Home /News /spiritual /

தெய்வீக வாக்கு: உங்களின் நீண்ட கால உழைப்புக்கு அங்கீகாரம் கிடைக்கும்... (ஏப்ரல் 02, 2022)

தெய்வீக வாக்கு: உங்களின் நீண்ட கால உழைப்புக்கு அங்கீகாரம் கிடைக்கும்... (ஏப்ரல் 02, 2022)

தெய்வீக வாக்கு

தெய்வீக வாக்கு

Rasi Palan | உங்களின் நீண்ட கால உழைப்புக்கு அங்கீகாரம் கிடைக்கும். இத்தனைக்கும், அதை நீங்கள் பெரிதாகப் பொருட்படுத்த மாட்டீர்கள்.

    மேஷம் :

    உங்கள் பாதை தெளிவாக இருக்கிறது, பயமின்றி முன்னேறலாம். கடந்த சில நாட்களாக நீங்கள் செய்து கொண்டிருந்த அனைத்து திட்டங்களையும் இப்போது செயல்படுத்தலாம். திருமண செய்யக் காத்திருப்பவர்களுக்கு அதற்கான கிடைக்கும்.

    உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – டான்ஜரின் நிற ஆடை

    ரிஷபம் :

    இப்போது எல்லா விஷயங்களும் தெளிவாகத் தோன்றுவதால், உங்களைச் சுற்றியுள்ள மாயையிலிருந்து வெளியேற நீங்கள் தயாராக உள்ளீர்கள். ஆனால், உங்கள் முன்னே உள்ள சவால் கடினமாகத் தெரிகிறது. ஆனால் அதை முறியடிக்கலாம், மனம் சோர்ந்து போகாமல் நீங்கள் அதை முயற்சி செய்ய வேண்டும். வேலையில் உள்ள சிக்கல்கள் இன்று உங்களை பிஸியாக வைத்திருக்கும்.

    உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – இலவங்கங்கள்

    மிதுனம் :

    தற்போதைய சூழ்நிலைகளை நீங்கள் எவ்வாறு கையாளப் போகிறீர்கள் என்பதைப் பற்றி நீங்கள் ஒரு அழகான திட்டத்தை வைத்திருப்பீர்கள். ஆனால் அது மனதில் இருக்கும் ஒரு திட்டம் மட்டுமே. உண்மையில் அது வேறாக இருக்கும். உங்கள் உரையாடல் யாரையாவது புண்படுத்தியிருந்தால், அதை நீங்கள் புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும். ஒரு சிறிய இடைவெளி எடுக்க வேண்டிய நேரம் இது.

    உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – இரத்தினக்கல்

    கடகம் :

    வெற்றிக்கான அடிப்படை விதி விடாமுயற்சி என்பதை நீங்கள் புரிந்து கொண்டுவிட்டீர்கள். அதிகமாக கடினமான உழைப்பை வழங்கியும், உங்களுக்கானது கிடைக்கவில்லை என்பதே உங்களின் மிகப்பெரிய ஏமாற்றம். அது உங்களை நிலைகுலைய அனுமதிக்க வேண்டாம். நல்ல காலம் விரைவில் வரும்.

    உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – சாமந்தி பூ

    சிம்மம் :

    மிகவும் பிராக்டிக்கலாக இருப்பது சில நேரங்களில் ஆணவத்தை வெளிப்படுத்தலாம். உங்கள் அணுகுமுறையை மென்மையாக்க முயற்சிக்க வேண்டும். ஒரு சட்ட விவகாரம் உங்களுக்கு சாதகமாக செல்லும். புதிய ஒப்பந்தங்களை முடிக்க முயற்சிப்பவர்கள் அல்லது ஆவணங்களில் கையெழுத்திட முயற்சிப்பவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

    உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – சார்ம் பிரேஸ்லெட்

    கன்னி :

    நீங்கள் எப்படிப் புரிந்து கொள்ள விரும்புகிறீர்களோ அதே வழியில் மற்றவர் உங்களைப் புரிந்துகொள்ள மாட்டார்கள். உங்களை கொஞ்சம் எளிதாக வெளிப்படுத்துங்கள். மருத்துவ செலவுகளைத் தவிர்க்க, உங்கள் ஆரோக்கியத்தை நீங்கள் கவனிக்க வேண்டும்.

    உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – தண்ணீர் பாட்டில்

    துலாம் :

    உங்களுக்கு அருகில் வசிக்கும் ஒரு பெண்ணுடன் உங்கள் உறவை சுமூகமாக மாற்ற வேண்டிய சூழல் ஏற்படலாம். இல்லையென்றால் சில தவறான தகவல்தொடர்புகள் ஏற்படலாம், அல்லது வேறு பிரச்சனைகள் உருவாகலாம். விலகி இருப்பது அல்லது நச்சுத்தன்மையுள்ள நபர்களைத் தவிர்ப்பது தற்காலிகமான சிறந்தத் தீர்வாக இருக்கும்.

    உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – பச்சைக்கல்

    விருச்சிகம் :

    நீங்கள் எந்த வகையில் பார்த்தாலும் ஏதாவது ஒரு குறுக்கீடு இருக்கும். உங்களால் முடிந்தவரை அதைத் தாண்டி செல்லவும் அல்லது தவிர்க்கவும் முயற்சி செய்யுங்கள். புதிய பார்ட்னர்ஷிப் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. சர்வதேச அளவில் பெரு நகரங்களில் உங்கள் பணியை விரிவுபடுத்தும் திட்டம் இருந்தால், அதற்கான வேலைகளைத் தொடங்குவதற்கு இது சரியானே நேரம்.

    உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – அணில்

    தனுசு :

    இதயம் சம்பந்தப்பட்ட விஷயங்களுக்கு இன்று முக்கியத்துவம் கொடுப்பீர்கள். யாரோ ஒருவர் நீண்ட காலமாக உங்களை நேசித்து, தன்னுடைய உணர்வுகளை வெளிப்படுத்த காத்திருக்கலாம். எந்த நடவடிக்கையையும் எடுப்பதற்கு முன், நீங்கள் மற்றவர்களின் முனைப்பையும் பாராட்ட வேண்டும். வரி சம்மந்தப்பட்ட விஷயங்களில் காரணமின்றி சிக்கிக் கொள்வீர்கள், எனவே எச்சரிக்கையாக இருக்கவும்.

    உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – புறா

    மகரம் :

    ஒரு நபரைப் பற்றிய உங்கள் கண்ணோட்டத்தில் புதிய குழப்பங்கள் உங்களுக்கு ஏற்படலாம். மற்றவர்களின் உரையாடல்களால் பாதிக்கப்படாமல் இருக்க முயற்சி செய்யுங்கள். நீங்கள் புதிதாகக வணிகம் செய்தாலோ, அல்லது ஸ்டார்ட்அப் நிறுவனம் வைத்திருந்தாலோ, எதிர்பார்க்காத சவால்களை சந்திக்க நேரிடும்.

    உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – மிராஜ்

    கும்பம் :

    மோசமான காலம் முடிந்துவிட்டது, நீங்கள் புதிய வாழ்க்கை, புதிய சாகசம் மற்றும் உங்களை மனப்பூர்வமாக மகிழ்விக்கும் விஷயங்களை நோக்கி செல்கிறீர்கள். நிதி ரீதியான திட்டமிடுவது மிகவும் அவசியம். அதைத் தவிர்த்து, மற்ற அனைத்தும் உங்களின் கட்டுப்பாட்டில் உள்ளன.

    உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – உருகும் பனி

    மீனம் :

    உங்களின் நீண்ட கால உழைப்புக்கு அங்கீகாரம் கிடைக்கும். இத்தனைக்கும், அதை நீங்கள் பெரிதாகப் பொருட்படுத்த மாட்டீர்கள். ஆனால் சரியான நேரத்தின் முக்கியத்துவத்தை நீங்கள் கட்டாயம் புரிந்து கொள்ள வேண்டும்.நேரத்தின் முக்கியத்துவத்தை தெரிந்து கொண்டால், நீங்கள் ரொம்ப காலமாக ஆசைப்பட்ட விஷயம் எளிதில் கிடைக்கும்.

    உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – பித்தளை டம்ப்ளர்
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Oracle Speaks

    அடுத்த செய்தி