ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

சனிக்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (அக்டோபர் 01, 2022) புதிய வேலைக்கான வாய்ப்பு கிடைக்கும்..!  

சனிக்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (அக்டோபர் 01, 2022) புதிய வேலைக்கான வாய்ப்பு கிடைக்கும்..!  

வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு

Astrology | மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கான இன்றைய (அக்டோபர் 01) ராசிப்பலன்கள், பரிகாரங்களை இங்கு பார்க்கலாம்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

மேஷம்:

பணியிடத்தில் அதிகாரிகள் உடனான பந்தம் மேம்படும். மாற்றங்களை ஏற்றுக் கொள்ளுங்கள். பணவரவு மற்றும் லாபம் இரண்டும் சேர்ந்து கிடைக்கும். வணிகத்தில் மேம்பாடு காணப்படும்.

பரிகாரம் - விநாயகரை வழிபடவும்

ரிஷபம்:

அலுவலகத்தில் எதுவும் பேசாத நிலையிலும் கவலை உங்களை ஆட்கொள்ளும். பொருளாதார சூழல் மேம்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. தேவைகளை குறைத்துக் கொள்ளுங்கள். இல்லை என்றால் செலவுகள் அதிகரிக்கும்.

பரிகாரம் - அனுமன் கோவிலில் மந்திரம் உச்சரிக்கவும்

மிதுனம்:

வணிகத்தில் சில பிரச்சினைகள் ஏற்படலாம். அலுவலகத்தில் பழிவாங்கும் நோக்கத்தில் எந்த காரியத்தையும் செய்ய வேண்டாம். அன்புக்குரிய நபர்களுடன் பிரச்சனைகள் அதிகரிக்கும். செலவுகளால் கடன் ஏற்படும்.

பரிகாரம் - சிவனை வழிபடவும்

கடகம்:

நீண்ட காலமாக நிலுவையில் இருக்கும் வேலையால் மன அழுத்தம் ஏற்படக் கூடும். பொருளாதார சூழல் மேம்பட இருக்கிறது. உணர்ச்சி மிகுதியில் யாருக்கும் வாக்குறுதி கொடுக்க வேண்டாம். பின்னாளில் வருத்தம் ஏற்படும்.

பரிகாரம் - விநாயகருக்கு பூ அலங்காரம் செய்யவும்.

சிம்மம்:

யாருடனும் நிதி சார்ந்த பிரச்சினையை தவிர்க்க வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் கொடுக்கல், வாங்கல் வைத்துக் கொள்ள வேண்டாம். இல்லை என்றால் உங்களுக்குதான் இழப்பு ஏற்படும். வர்த்தகர்களுக்கு இயல்பான நாளாக அமையும்.

பரிகாரம் - கோசாலைக்கு தீவனம் தானமாக வழங்கவும்

கன்னி:

அலுவலகத்தில் உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். புதிய நபர்கள் மீது நம்பிக்கை வைக்கும் முன்பாக, அவர்கள் குறித்து முழுமையாக விசாரிக்கவும் இல்லை என்றால் சட்ட சிக்கலில் மாட்டிக் கொள்வீர்கள்.

பரிகாரம் - சூரிய பகவானுக்கு உகந்த பொருட்களை தானம் செய்யவும்

துலாம்:

முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகரிக்கும் தேவைகள் காரணமாக நிதி பற்றாக்குறை ஏற்படும். கடன் வாங்கக் கூடிய சூழல் கூட உண்டாகும். பணிகளை குறித்த நேரத்தில் முடிக்கவும். வர்த்தகர்களுக்கு லாபம் கிடைக்கும்.

பரிகாரம் - எறும்புகளுக்கு மாவு வைக்கவும்

விருச்சிகம்:

குடும்ப பிரச்சினைகள் அதிகரிக்கலாம். இதன் காரணமாக அலுவலகப் பணிகளும் பாதிக்கும். சரியான தருணத்தில் முடிவெடுக்க வேண்டும். புதிய வேலைக்கான வாய்ப்புகள் கிடைக்கும்.

பரிகாரம் - விலங்குகளுக்கு சேவை செய்யவும்

தனுசு:

பொருளாதார சூழல் மேம்படும் வாய்ப்பு இருக்கிறது. முதலீட்டு வாய்ப்புகளும் உருவாகும். அன்புக்குரிய நபர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய நிறைய செலவு செய்ய வேண்டியிருக்கும். வர்த்தகர்கள் சாதுர்யமாக முடிவெடுப்பார்கள்.

பரிகாரம் - சரஸ்வதி தேவியை வழிபடவும்

மகரம்:

பணம் தொடர்புடைய சிக்கல்கள் நீடிக்கும். நிதிநிலை குறித்த கவலைகள் அதிகரிக்கும். அத்தியாவசியமற்ற செலவுகளுக்காக கடன் பெற வேண்டியிருக்கும். நிலத்தில் முதலீடு செய்வது பலன் அளிக்கும்.

பரிகாரம் - சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்யவும்

கும்பம்:

அலுவலகப் பணி தொடர்பான தேவையற்ற கவலைகள் நீடிக்கும். மனதில் குழப்பம் ஏற்படும். குடும்ப வாழ்க்கையிலும் சிக்கல் உண்டாகலாம். வணிகர்களுக்கு இன்று ஏமாற்றம் நிறைந்த நாளாகும்.

பரிகாரம் - பைரவர் கோவிலுக்கு கொடி வழங்கவும்

மீனம்:

நிலுவையில் உள்ள பணிகள் கவலையை ஏற்படுத்தும். பொருளாதார சூழல் மேம்படும். புதிய முதலீட்டிற்கான வாய்ப்புகள் வரும். அலுவலகத்தில் பதவி உயர்வை எதிர்பார்க்கலாம்.

பரிகாரம் - ஸ்ரீசுக்தா மந்திரம் உச்சரிக்கவும்

Published by:Lakshmanan G
First published:

Tags: Astrology, Job, Money, Rasi Palan