ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு இன்று (அக்டோபர் 08, 2022) பணியிடத்தில் புதிய வளர்ச்சி ஏற்படும்

தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு இன்று (அக்டோபர் 08, 2022) பணியிடத்தில் புதிய வளர்ச்சி ஏற்படும்

தெய்வீக வாக்கு

தெய்வீக வாக்கு

Rasi Palan | மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான தினசரி ராசி பலன் இதோ...

 • Trending Desk
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  மேஷம்:

  உணர்வுப்பூர்வமான விஷயங்கள் மற்றும் நம்பிக்கை சார்ந்த விஷயங்களில் நீங்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். இல்லை என்றால் உங்களுக்கு ஏற்கனவே இருக்கும் தலைவலி பெரியதாகிவிடும். உங்களுக்குப் பிடிக்காத விஷயங்களை விட்டு விடுங்கள்.

  உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ரோஸ் நிற படிகக்கல்

  ரிஷபம்:

  தேவையற்ற மன அழுத்தம் மற்றும் குழப்பம் ஆகியவை காரணமாக சில தாமதங்கள் உண்டாகலாம். நீங்கள் என்ன திட்டமிட்டீர்களோ, அதைவிட கூடுதலாக செய்து முடிப்பீர்கள். கையில் உள்ள தரவுகளை சரிபார்க்கவும்.

  உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - புஷ்பராகம்

  மிதுனம்:

  திடீரென்று கிடைக்கும் அதிர்ஷ்டம் உங்களை விரும்பிய உயரத்திற்கு கொண்டு செல்லும். உங்கள் இலக்கு நோக்கிய பயணத்தில் அது முதல் படியாக அமையும். உங்கள் தகவல் தொடர்பு அனைத்தும் எளிமையாக இருக்கட்டும். ரிஸ்க் எடுக்க தயங்க வேண்டாம்.

  உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - கிறிஸ்டல்

  கடகம்:

  இன்று நீங்கள் நம்பிக்கையுடன் இருப்பீர்கள். ஆற்றல்கள் திரும்பக் கிடைத்த உணர்வு ஏற்படும். உங்கள் வாழ்க்கை துணை உங்களுக்கு பயனுள்ள அறிவுரையை வழங்குவார். குழந்தைகள் எதிர்வரும் விடுமுறை நாட்களை எதிர்பார்த்து காத்திருப்பார்கள்.

  உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ப்ளூ கிறிஸ்டல்

  சிம்மம்:

  நீங்கள் தைரியம் மிகுந்தவராக கருதிக் கொள்வீர்கள். இக்கட்டான சூழலில் அதை சோதித்துப் பார்க்க வேண்டியிருக்கும். குடும்பத்திற்கு உங்கள் ஆதரவு மிக பெரிய அளவில் தேவை. பணியிடத்தில் உள்ள பிரச்சனைகள் ஒவ்வொன்றாக தீரும்.

  உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - குவார்ட்ஸ்

  கன்னி:

  தினசரி வாழ்க்கையில் நீங்கள் திட்டமிடாத மாற்றம் ஒன்றை ஏற்றுக் கொள்ள வேண்டியிருக்கும். பலமான வாய்ப்பு ஒன்று உங்களை தேடி வருகிறது. அது உங்களுக்கு பணியிடத்தில் புதிய வளர்ச்சியை ஏற்படுத்துவதாக அமையும்.

  உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - எமரால்டு

  துலாம்:

  உங்கள் அதிகாரம் மற்றும் பலம் ஆகியவற்றை தங்களுக்கு சாதகமாக்கிக் கொள்ள சிலர் முயலுகின்றனர். ஆகவே, பேச்சுவார்த்தையின்போது கவனமாக இருக்கவும். சின்னதாக அல்லது பெரியதாக மாற்றம் ஒன்று நிகழ இருக்கிறது.

  உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - பட்டாகத்தி

  விருச்சிகம்:

  சாதாரண ஒன்றில் மிக அற்புதமான ஒன்றை நீங்கள் காண்பீர்கள். பாரம்பரியம் மிகுந்த நிறுவனத்தில் வேலை கிடைப்பதற்கான சாத்தியம் இருக்கிறது. இரண்டாம் வாய்ப்பு மூலமாக வருமானம் தேட நினைப்பீர்கள்.

  உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - செவ்வந்தி

  தனுசு:

  இன்றைய நாளுக்கான முன்னுரிமைகளை தெளிவாக பட்டியலிட்டுக் கொள்ளுங்கள். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகளை செய்து முடிப்பீர்கள். நல்லதொரு வாழ்க்கைத் துணையை தேடும் உங்களுக்கு விரைவில் அப்படியொரு நபரை சந்திப்பீர்கள்.

  உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - சிப்பி

  மகரம்:

  வாழ்க்கையில் பரிணாமங்கள் மாற இருக்கின்றன. கடந்த கால கஷ்டங்கள் தீர்ந்து புதிய பாதை வர இருக்கிறது. எடுத்துக் கொண்ட காரியத்தில் உறுதியாக நிற்பீர்கள். பிறருக்கு கடன் கொடுப்பதை சிறிது காலத்திற்கு ஒத்தி வைக்கவும்.

  உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - மணி பிளாண்ட்

  கும்பம்:

  மிகக் கடினமான சூழல் ஒன்றை எதிர்கொள்ள இருக்கிறீர்கள். தொடர்ச்சியாக ஏற்படும் மாற்றங்களால் நீங்கள் மனச்சோர்வு மற்றும் வெறுப்பு அடையக் கூடும். கொஞ்சம் ஓய்வு தேவைப்படலாம்.

  உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - விளக்கு

  மீனம்:

  வெளிநாடு செல்ல நீங்கள் திட்டமிட்டு வரும் நிலையில், அதற்கான நேரம் கணிந்துள்ளது. பாரம்பரியம் மிகுந்த பள்ளியில் உங்கள் குழந்தையை சேர்க்க நினைக்கிறீர்கள். அதற்கான வாய்ப்பு மிகக் குறைவு. தேவைகளை எளிமையாக்கிக் கொண்டால் அவற்றை எதிர்கொள்ளலாம்.

  உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - மார்பிள் டேபிள்

  Published by:Murugesh M
  First published:

  Tags: Oracle Speaks, Rasi Palan