ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

திங்கள்கிழமை ராசிபலன் | இந்த ராசியினர் இன்று (அக்டோபர் 03, 2022) தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்..!

திங்கள்கிழமை ராசிபலன் | இந்த ராசியினர் இன்று (அக்டோபர் 03, 2022) தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்..!

money

money

Money Mantra | மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கான இன்றைய (அக்டோபர் 03) பணவரவு எப்படி இருக்கும் என்பதை தற்போது பார்க்கலாம்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

மேஷம்:

இன்றைக்கு உங்களுக்கு மிகவும் ராசியான நாளாக அமையக்கூடும். தொழில் விஷயங்களில் எந்த சிக்கலும் இல்லாமல் உற்சாகமாக இருப்பீர்கள். தொழில் மற்றும் வாழ்க்கையில் நல்ல செய்தி கிடைக்கும் நாள் இன்று. லாப இலக்கில் கவனம் செலுத்தி எதிர்ப்பார்த்ததை விட அதிக லாபம் அடைவீர்கள். உங்களுக்கான பல்வேறு பணிகள் தீவிரமாக நடைபெறும். அனுபவம் வாய்ந்த நபர்களிடம் ஆலோசனைப் பெறவும்.

பரிகாரம்: காயத்ரி மந்திரத்தை 108 முறை உச்சரிக்கவும்.

ரிஷபம்:

உங்களது உடல் நலத்தில் கவனமுடன் இருக்க வேண்டிய நாள் இன்று. உங்களது தொழில் வியாபாரம் நல்ல வளர்ச்சி பெறும். பணியிடத்தில் அதிகாரிகள் உதவக்கூடும். தேவையற்ற உரையாடல்களைத் தவிர்த்து பணிகளை மட்டும் கவனமுடம் செய்யுங்கள்.

பரிகாரம்: விநாயகப் பெருமானுக்கு அருகம்புல் வைத்து வழிபடவும்.

மிதுனம்:

உங்களது இலக்கில் எப்போதும் கவனமுடன் இருக்க வேண்டும். பணி மற்றும் சொந்த வாழ்க்கையில் அனைவரின் ஒத்துழைப்பு கிடைத்து உற்சாகம் ஏற்படும் நாளாக அமையும். வர்த்த நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். தொழில்முறை பயணங்கள் சாத்தியமாகும். நிதி விவகாரங்கள் சாதகமாக அமையக்கூடும். வேலைகள் பயனுள்ளதாக அமையும். தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு லாபம் அதிகரிக்கக்கூடும்.

பரிகாரம்: அனுமனுக்கு தேங்காய் வைத்து வழிபடுதல்

கடகம்:

பொருளாதார வளர்ச்சி மேம்படும் நாளாக அமையும். வாழ்க்கையில் பல்வேறு சலுகைகள் கிடைக்கும். தாமதமான வங்கிப்பணிகள் சிறப்பாக நடைபெறும். வியாபார விஷயங்களில் கவனம் தேவை. வேலைத்திறன் பலப்படுவதோடு பொருளாதார வியாபார முயற்சிகள் சாதகமாக அமையும்.

பரிகாரம்: துர்கைக்கு குங்கும அர்ச்சனை செய்யவும்.

சிம்மம்:

பணியிடத்தில் படைப்பாற்றல் அதிகரிக்கும் நாளாக அமையும். லாப சதவீதம் அதிகமாக இருக்கும். தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உங்களின் செயல்திறன் அதிகரிப்பதால் அடைய வேண்டிய இலக்கை எட்டுவீர்கள். பொருளாதார ரீதியாக வர்த்தக லாபம் அடையும் நாள் இன்று.

பரிகாரம்: சிறுமிகளுக்கு கீர் ஊட்டவும்.

கன்னி:

தொழிலில் லாபம் அடைந்தாலும் பொறுமையுடன் இருக்க வேண்டிய நாள். தொழிலபதிபர்களின் நம்பிக்கையைக் காப்பாற்றுவீர்கள். தொலைதூர நாடுகளின் விவகாரங்கள் கையாளப்படும். உங்களது பணிகளில் விழிப்புணர்வுடன் செயல்படுவீர்கள். வாழ்க்கை மற்றும் தொழிலில் ஒழுங்கையும், ஒழுக்கத்தையும் கடைப்பிடிக்க வேண்டும். நிதி விஷயங்களில் பிஸியாக இருங்கள்.

பரிகாரம்: வாழை மரத்தடியில் நெய் தீபம் ஏற்றவும்.

துலாம்:

தொழில் சம்பந்தமான விஷயங்களில் எதிர்பார்த்த பலன்களைப் பெறுவீர்கள். தொழில் நிபுணர்களுடன் இணக்கத்தைப் பேணி உங்களின் திறமையை வளர்த்துக் கொள்ளவும். தொழில் வல்லுநர்கள் குறிப்பிடத்தக்க முடிவுகளைப் பெறுவார்கள். வெற்றியைப் பற்றி உற்சாகமாக இருங்கள். நிதி பிரச்சனை ஏற்படாது.

பரிகாரம்: அதிகாலையில் எழுந்து சூரியனை வழிபடவும்.

விருச்சிகம்:

தொழில் வல்லுநர்கள் திட்டங்களை விரைவுபடுத்துவார்கள். தகவல் பரிமாற்றத்தில் வெற்றி பெறுவீர்கள். சாதனைகளை அதிகப்படுத்தி தொழிலில் மரியாதை காண்பீர்கள். போட்டி அதிகமாக இருந்தாலும் உங்களது பணியில் சிறப்பாக செயல்பட வேண்டிய நாள்.

பரிகாரம்: தாமரை மலரைக் கொண்டு மா லட்சுமிக்கு அர்ச்சனை செய்யுங்கள்.

தனுசு:

தொழில் வியாபாரத்தில் சிறந்த செயல்திறனைப் பேணுவீர்கள். தீர்மானங்களை நிறைவேற்றுவீர்கள். உங்களது தொழிலில் நம்பிக்கை அதிகரிக்கும். நிலுவையில் உள்ள வழக்குகள் வேகமெடுக்கும். வாழ்க்கையில் புதிய தொடக்கத்தை உருவாக்க முடியும். பணியிடத்தில் சுறுசுறுப்பு அதிகரிக்கும் நாள் இன்று.

பரிகாரம்: நாய்க்கு அன்னம் வழங்கவும்.

மகரம்:

அனைவரின் ஒத்துழைப்போடு வாழ்க்கையில் முன்னேற்றம் அடையும் நாள் தான் இன்று. வாழ்க்கை மற்றும் தொழிலில் ஒழுக்கம், பொறுமை மற்றும் நம்பிக்கையுடன் இருந்தால் நல்ல பலனளிக்கும். வியாபாரத்தில் எவ்வித பிரச்சனையும் ஏற்படாது. அந்நியர்களிடமிருந்து சற்று விலகி இருங்கள். வீண் வதந்திகளை நம்ப வேண்டாம்.

பரிகாரம்: உடல் ஊனமுற்றவர்களுக்கு சேவை செய்யுங்கள்.

கும்பம்:

நீங்கள் பணிபுரியும் பணியிடத்தில் பொறுமையாக வேலை செய்யுங்கள். ஏற்கனவே திட்டமிட்ட முயற்சிகள் பலனளிக்கும். லாப சதவீதம் மேம்படும். உத்தியோகத்தில் வளர்ச்சி அடைவீர்கள். பொருளாதார விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். பெரிய முயற்சிகளுக்கான வழி திறக்கும். தொழில், வியாபாரத்தில் சுபகாரியம் ஏற்படுவதோடு எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யும் நாளாக அமையும்

பரிகாரம்: எறும்புகளுடன் மாவு மற்றும் சர்க்கரை சேர்த்து வைக்கவும்.

மீனம்:

இன்றைக்கு தொழில் விரக்தி அடைவீர்கள். விரும்பிய தொழிலை நேர்த்தியாக செய்து வெற்றி காண்பீர்கள். எதற்கும் பேராசைக் கொள்ளாதீர்கள். சில வீண் விவாதங்கள் ஏற்படும் என்பதால் மற்றவர்களுடனான உரையாடலில் கவனமுடன் இருக்கவும். சகாக்களின் ஆதரவு கிடைக்கும். தொழில் ரீதியான உறவுகளில் நல்லிணக்கம் ஏற்படும் நாளாக அமையும்.

பரிகாரம்: மீன்களுக்கு உணவளிக்கவும்.

First published:

Tags: Astrology, Money, Rasi Palan