ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு இன்று ஆற்றல் அதிகரிக்கும் நாள்... (மே 16, 2022)

தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு இன்று ஆற்றல் அதிகரிக்கும் நாள்... (மே 16, 2022)

தெய்வீக வாக்கு

தெய்வீக வாக்கு

Rasi Palan | மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான தினசரி ராசி பலன்...

மேஷம்:

இன்றைக்கு வேகமாக வேலை செய்ய வேண்டிய நாள், அதற்காக உங்களை தயார்படுத்திக்கொள்ளுங்கள். உங்கள் ஆற்றல் அளவை இன்று பரிசோதித்துக்கொள்ள தயாராக இருங்கள். மனதில் தேவையில்லாத விஷயங்களை சேர்த்து வைப்பதை கைவிடுங்கள்.

உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு ரூபி கல்

ரிஷபம்:

மனதில் மறைத்துவைக்கப்பட்ட உண்மையான எண்ணத்தை யாருடனாவது பகிர்ந்து கொள்ள வேண்டும் என நீங்கள் இன்று நினைக்கலாம். உங்களை சுற்றி நீங்கள் கட்டமைத்து வைத்த நல்ல மதிப்பீடுகள் இன்று கைகொடுக்கும்.

உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - வெள்ளி மோதிரம்

மிதுனம்:

இன்று உங்களுக்கு யாருடனாவது கூட்டு சேர வாய்ப்பு கிடைத்தால் அதனை ஏற்றுக்கொள்வது நல்லது. காலை வேளை அழுத்தமாக இருந்தாலும், மாலையில் நிதானமாக ஒரு நல்ல யோசனைக்கு வடிவம் கொடுக்கும் நேரம் கிடைக்கும்.

உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - பரிசு பை

கடகம்:

உங்கள் பணிக்கு அங்கீகாரம் கிடைக்கும். இது எதிர்காலத்தில் அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்கவோ அல்லது வணிக யோசனையை அதிகரிக்கவோ உதவலாம். யாருடனாவது எதையாவது சொல்ல வேண்டி இருந்தால் அதனை உடனடியாக செய்து முடிக்கவும்.

உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு செல்லப் பிராணி

சிம்மம்:

உங்களைக் கவரக்கூடிய ஒரு நல்ல ஆசிரியர் அல்லது செல்வாக்கு செலுத்துபவரை நீங்கள் சந்திப்பீர்கள். வீட்டு விஷயங்கள் உங்கள் மனதில் நாள் முழுவதும் ஓடிக்கொண்டே இருக்கும். நேரத்திற்கு விஷயத்தை செய்து முடிப்பது பெரிய சவாலாக இருக்கும்.

உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு தோட்டம்

கன்னி:

சில நாட்கள் எப்போதும் போல இருக்காது, மிகவும் சாவாலனதாக இருக்கும். அப்படி ஒருநாளைத் தான் இன்று சந்திக்கப்போகிறீர்கள். ஆற்றல்கள் இன்று கடினமாக இருக்கும். ஆனால் மதியத்திற்கு மேல் நிலைமை சரியாகிவிடும்.

உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு ஃபெங்சுய் சின்னம்

துலாம்:

சின்ன விஷயங்களுக்காக தேவையற்ற மன அழுத்தத்திற்கு ஆளாக வேண்டாம். முக்கியத்துவம் வாய்ந்த விஷயத்தில் உங்களுக்கு கூடுதல் நுண்ணறிவு தேவைப்படலாம். உங்கள் மனைவி சொல்லக்கூடிய ஒரு யோசனை ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கலாம்.

உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு மைல்கல்

விருச்சிகம்:

உங்கள் மீது ஈர்க்கப்பட்ட ஒருவர் விரைவில் உங்களை சந்திக்க வாய்ப்பு உள்ளது. வரும் நாட்களில் உங்களின் வேலை மிகவும் பரபரப்பாக இருக்கும். ஒரு தெய்வீக அனுபவம் பல நாட்களுக்கு உங்களை மகிழ்விக்கும்.

உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு மாற்றுச்சொல்

தனுசு:

சோம்பேறித்தனம் சரியான நேரத்தில் சரிசெய்யப்படாவிட்டால் தீங்கு விளைவிக்கும். சொகுசான பழக்க வழக்கத்தில் இருந்து இன்று வெளியே வர முயற்சி செய்யுங்கள். உங்களுடன் வேலை செய்யும் ஒருவர் நாளின் பெரும்பகுதியை எடுத்துக்கொள்ளலாம்.

உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு பூச்செண்டு

மகரம்:

இன்றைய நாளின் ஆற்றலை தாமதம் மற்றும் ஒத்திவைப்புகள் ஆளுமை செலுத்தும். நீங்கள் இரண்டு முக்கியமான பணிகளை மீண்டும் திட்டமிட வேண்டியிருக்கலாம். புதிய விதிகளைப் பின்பற்றுவது லாபகரமானதாக இருக்காது.

உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு வெள்ளை ரோஜா

கும்பம்:

இன்றைய நாள் மெதுவாக தொடங்கினாலும், பிற்பகலில் வேகமாக ஓட வேண்டி இருக்கும். ஒரு உறவினர் அவசர அவசரமாக தொடர்ந்து பின்தொடரலாம். சில விசேஷ நிகழ்வுகளுக்கு ஒரு இடத்தை முன்பதிவு செய்ய நீங்கள் திட்டமிட்டிருந்தால், இப்போது நேரம் வந்துவிட்டது.

உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு கண்ணாடி டம்ளர்

மீனம்:

ஏக்கம் மற்றும் பழைய சம்பவங்களுடன் தொடர்புடையவர்களை சந்திப்பது உங்களை உணர்ச்சிவசப்படுத்தலாம். விரைவில் நண்பர்களுடன் ஒரு ரோட் டிரிப் செல்ல திட்டமிடலாம். வேலையைப் பொறுத்தவரை உள்நாட்டில் தெளிவான தகவல்தொடர்புகளை வைத்திருங்கள்.

உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் -சைகை மொழி

Published by:Vaijayanthi S
First published:

Tags: Oracle Speaks