Home /News /spiritual /

தெய்வீக வாக்கு: இன்று இந்த ராசியினர் பணியிடத்தில் பர்ஃபாமென்ஸை நிரூபிக்க வேண்டிய நாள்...( ஏப்ரல் 25, 2022)

தெய்வீக வாக்கு: இன்று இந்த ராசியினர் பணியிடத்தில் பர்ஃபாமென்ஸை நிரூபிக்க வேண்டிய நாள்...( ஏப்ரல் 25, 2022)

தெய்வீக வாக்கு

தெய்வீக வாக்கு

April 25, Rasi Palan | நீங்கள் எந்த சிக்கல் அல்லது பிரச்சனைகளையும் பற்றி கவலைப்படாமல் இருக்க நினைப்பது உண்மையில் உங்களுக்கு சவால் மிகுந்ததாக இருக்கும்.

மேஷம்:

நீங்கள் எந்த சிக்கல் அல்லது பிரச்சனைகளையும் பற்றி கவலைப்படாமல் இருக்க நினைப்பது உண்மையில் உங்களுக்கு சவால் மிகுந்ததாக இருக்கும். ஆனால் இன்றைய தினம் நீங்கள் இப்படி தான் இருந்தாக வேண்டும். எதிலும் தலையிடாமல் ஒதுங்கி போவது தான் உங்களுக்கு நல்லது. சொந்தமாக சொத்து வாங்கும் எண்ணத்தில் இருந்தால் அதைப் பற்றி இப்போது சிந்திக்க தொடங்கலாம்.

உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு முறுக்கு கயிறு

ரிஷபம்:

உங்கள் செயல்திறனில் ஏற்படும் குறைபாடுகளை அதிகாரிகளால் பொறுத்து கொள்ள முடியாது. எனவே உங்கள் பர்ஃபாமென்ஸை நிரூபிக்க இன்று நீங்கள் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். வர உள்ள சவால்களுக்காக இப்போதே தயாராக தொடங்குங்கள்.

உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு கம்பளிப்பூச்சி

மிதுனம்:

நீங்கள் மனதில் என்ன நினைக்கிறீர்கள் என்பதை பிறரிடம் சொல்லியே ஆக வேண்டும் என்பது அவசியமில்லை. ஏனென்றால் சில சமயங்களில் நீங்கள் யாரையாவது உங்கள் பேச்சால் புண்படுத்தலாம். எனவே பேச்சில் கவனமாக இருங்கள். அலுவலகத்தில் சீனியர்களிடையே உங்கள் இமேஜை தடுக்க சக ஊழியர் முயற்சி செய்யலாம் என்பதால் எச்சரிக்கையாக இருங்கள்.

உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு ஸ்நூஸ் பட்டன்

கடகம்:

உங்களது கனவுலகத்தில் இருந்து நீங்கள் வெளியே வந்து நிஜ உலகில் வாழ துவங்குங்கள். நீங்கள் யதார்த்தத்தை நோக்கி செல்ல வேண்டிய நாள் இன்று.நீண்ட காலமாக நம்பி முதலீடு செய்து வருபவர்களை மதிப்பாய்வு செய்ய வேண்டிய நேரம் இந்து அமையும்.

உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு பட்டம்

சிம்மம்:

இன்றைய தினம் உங்களக்கு பணவரவு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. புதிய விஷயங்களை கற்று கொள்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். சுற்றி இருப்பவர்களிடம் இன்று இணக்கமாக செல்ல வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு பாராசூட்

கன்னி:

நீண்ட நாளாக சந்திக்க வேண்டும் அல்லது பேச வேண்டும் என்று நினைத்திருந்த நபரை சந்திப்பீர்கள் அல்லது பேசுவீர்கள். தவிர இன்றைய நாளில் நீங்கள் ஒரு ஸ்பெஷல் நபரை சந்திக்கும் வாய்ப்புகளும் இருக்கிறது. மேலும் ஆன்மீக ரீதியாக மகிழ்ச்சியான நாளாக அமையும்.

உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு கீ ஹோல்டர்

துலாம்:

உறுதியாக தெரியாத விஷயங்களில் இறங்கி செயல்படுவதை இன்று செய்யாதீர்கள். சில நாட்களுக்கு தள்ளி போடுங்கள். பிசியான வேலைகளுக்கு நடுவே உங்களுடன் நேரம் செலவு செய்ய நீண்ட நாட்களாக காத்திருக்கும் குடும்பத்தினரையும் கவனிக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு ஸ்னோமேன்

விருச்சிகம்:

உங்களது வாழ்வில் நீங்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் உயரங்களை அடைய வாய்ப்புகள் இன்று உண்டாகலாம். இவ்வளவு நாட்களாக காத்திருந்த ஒன்று உங்களை வந்தடையலாம். மொத்தத்தில் இன்று உங்களுக்கு உற்சாகமான நாளாக இருக்க போகிறது.

உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு சில்க் டை

தனுசு:

சூதாட்டம் போன்றவற்றில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டிய நாள் இன்று. சிறிய விஷயத்திற்காக கூட இன்று நீங்கள் எரிச்சல் அல்லது கோபமடைய கூடும்மன அமைதியுடன் இன்றைய நாளை கழிப்பது உங்களக்கு சவாலான விஷயமாக இருக்கும்.

உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு கருப்பு மரகதகல்

மகரம்:

இன்று உங்களக்கு நிதி நெருக்கடி மிகுந்த நாளாக அமையலாம். உங்கள் குடும்ப உறுப்பினர்களின் உடல் நலனில் இன்று கவனம் செலுத்துங்கள் மற்றும் அக்கறையுடன் இருங்கள். நிதி நெருக்கடி இருந்தாலும் தக்க சமயத்தில் உங்களக்கு உதவி கிடைக்கும் வாய்ப்புகளும் இருக்கிறது.

உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு முயல்

கும்பம்:

எதிர்பாராமல் நடக்கும் நிகழ்வுகள் மற்றும் சந்திப்புகள் காரணமாக நீங்கள் மகிழ்ச்சி அடைவீர்கள். வீட்டிற்கு வெளியே சந்திக்கும் நபர்களால் உங்களது இந்த நாள் மிகவும் உற்சாகமாக அமையும். நண்பர்கள் அல்லது சக ஊழியர்களுடன் நீங்கள் மேற்கொள்ளும் குறுகிய பயணம் சிறப்பாக அமையும்.

உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு மஞ்சள் பூ

மீனம்:

நீங்கள் நிலுவையில் வைத்திருந்த சில வேலைகளை இன்று முடிப்பீர்கள். அலுவலகத்தில் குறித்த நேரத்தில் வேலையை முடித்து உயரதிகாரிகளிடம் பாராட்டை பெறுவீர்கள். சமீபத்திய நாட்களை ஒப்பிடும் போது இன்றைய நாள் உங்களுக்கு குறைவான மன அழுத்தம் கொண்ட நாளாக அமையும்.

உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு நைட்டிங்கேல்
Published by:Vaijayanthi S
First published:

Tags: Oracle Speaks

அடுத்த செய்தி