Home /News /spiritual /

தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு இன்று நல்ல யோகமான நாள்... (ஏப்ரல் 30, 2022)

தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு இன்று நல்ல யோகமான நாள்... (ஏப்ரல் 30, 2022)

தெய்வீக வாக்கு

தெய்வீக வாக்கு

Rasi Palan | நீண்ட நாட்களாக தள்ளிப்போன காரியங்கள் இன்று கைகூடும். பணம் சார்ந்த விஷயங்கள் இன்று சிறப்பாக நடைபெறும்.

மேஷம்

நீங்கள் முதலீடு செய்தவற்றில் இருந்து உங்களுக்கு வரவேண்டிய வருமானம் விரைவில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம். உங்களை சுற்றியுள்ளவர்களிடம் சில விஷயங்களில் ஜாக்கிரதையாக இருங்கள்.இல்லையெனில் அவர்கள் உங்களை பயன்படுத்திக் கொள்வார்கள். யாராவது உங்களை ஏதாவது குற்றம் சாட்டினால், அதை பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு மண் பானை

ரிஷபம்

நீங்கள் சமீபகாலமாக மிகவும் சுயமாக வளர்ந்து வருகிறீர்கள். இது உங்களின் எதிர் காலத்திற்கு மிகவும் உதவியாக இருக்கும். இன்று உங்களுக்கு பல வகையில் நல்லது நடக்கும். உங்களின் மன அழுத்தத்திற்கு குழந்தைகள் ஒரு புதிய காரணமாக இருக்கலாம். ஆனால் இது தற்காலிகமான ஒன்று தான்.

உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம்- ஒரு மஞ்சள் படிகம்

மிதுனம்

மோசமான நிகழ்வுகளுக்கு நீங்கள் உண்மையில் உங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும். நிதித் துறையில் பணிபுரிபவர்கள் மன அழுத்தத்தை எதிர்நோக்க நேரிடலாம். கல்வி சார்ந்த துறையில் இருப்பவர்கள் இன்று அதிக பிஸியாக இருப்பார்கள். வியாபாரம் செய்பவர்களுக்கு இன்று நல்ல நாளாக அமையும்.

உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு வானவில் நிற படிகம்

கடகம்

உங்களுக்கு காலம் உங்களை நெருங்கி வருகிறது. எனவே உங்களை அதற்காக தயார்படுத்தி கொள்ளுங்கள். இந்த காலகட்டத்தில் உங்கள் சொந்த துறையில் புகழ் பெற வாய்ப்பு உள்ளது. நீங்கள் அலட்சியமாக இருப்பது சிக்கலைக் கொண்டு வரலாம். எனவே கவனமாக இருந்து பலவற்றை சாதிக்க பாருங்கள்.

உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு நிலவுக்கல்

சிம்மம்

சிறிய மோதல்கள் வேறு வடிவமாக உருவாக்கலாம். முடிந்தவரை விரைவில் விஷயங்களை முடிக்க முயற்சியுங்கள். கலைத்துறையில் இருப்பவர்கள் ஓரளவுக்கு நல்ல பணம் சம்பாதிக்கலாம். சில்லறை வணிகத்தில் இருப்பவர்களுக்கும் இன்று லாபம் வரக்கூடும்.

உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம்- ஒரு நெல்லிக்காய்

கன்னி

இன்று நீங்கள் எதிர்பார்க்கும் இடத்தில் இருந்து வணிக வாய்ப்புகள் வரலாம். நீங்கள் வேலையிலோ அல்லது வீட்டிலோ யாரேனும் ஆதிக்கம் செலுத்துவதாக உணர்ந்தால், விரைவில் குரல் கொடுக்க வேண்டியிருக்கும். இனிமையான விஷயம் ஒன்று உங்களுக்கு நடக்க வாய்ப்பு உள்ளது.

உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம்-ஒரு பணப்பெட்டி

துலாம்

நீங்கள் நாடகம் அல்லது நடிப்புத் துறையில் இருந்தால், உங்களுக்கு புதிய வழிகள் திறக்கும். பிரபலமான இடத்திலிருந்து உங்களுக்கு அழைப்பு வந்திருந்தால், அதை நீங்கள் அவசியம் கருத்தில் கொள்ள வேண்டும். மேலும் இன்று நீங்கள் உணர்வு ரீதியாக வலுவாக இருக்க வேண்டும்.

உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம்- பட்டாம்பூச்சி

விருச்சிகம்

உங்களின் நண்பர்களை நீண்ட நாட்களுக்குப் பிறகு சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும். எனவே மிக மகிழ்ச்சியான நாளாக இன்று உங்களுக்கு அமையும். கடந்த காலத்தில் நீங்கள் ஏதாவது காயப்படுத்தியிருந்தால், அதை வெளிப்படுத்த வேண்டிய நேரம் இது. இன்று உங்களுக்கு நிம்மதியான நாளாக இருக்கும்.

உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம்- ஒரு பெரிய பூங்கா

தனுசு

இது ஒரு பிரகாசமான நாள் மற்றும் உங்களுக்கு நல்லதே நடக்கும். நீங்கள் நீண்ட நாட்களாக தள்ளி போட்ட வேலைகளை விரைவில் முடித்து விடுங்கள். வீட்டுப் பொறுப்புகள் இன்று அதிகரிக்கலாம். எனவே அதற்கான நேரத்தை ஒதுக்குங்கள்.

உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு சாமந்தி மலர்

மகரம்

வேலையில் உங்களுக்கு இன்று அதிக கவனம் தேவை. மேலும் உங்களுக்கு உள்ள பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு நேரத்தை ஒதுக்குங்கள். இன்று பங்குச் சந்தை உங்களுக்கு சாதகமாக இருக்கும். இதன் மூலம் நீங்கள் விரைவாக அதிக பணம் சம்பாதிப்பீர்கள்.

உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு நியான் விளக்கு

கும்பம்

உங்களின் தொலைதூர உறவில் சிறிது சிக்கல் ஏற்படலாம். இருப்பினும், இது மிகவும் தற்காலிகமான ஒன்று தான். வேலையில் மன அழுத்தம் வழக்கத்தை விட அதிகமாக இருக்கலாம்.எனவே தேவைப்படும் போது ஓய்வு எடுத்து கொள்ளுங்கள். இன்று இசை ஒரு நல்ல சிகிச்சையாக உங்களுக்கு இருக்கலாம்.

உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ரெட்ரோ இசை

மீனம்

ஒரு குழுவாக நீங்கள் ஏதாவது திட்டமிடுகிறீர்கள் என்றால், அது இப்போது வடிவம் பெற வாய்ப்புள்ளது. நீண்ட நாட்களாக தள்ளிப்போன காரியங்கள் இன்று கைகூடும். பணம் சார்ந்த விஷயங்கள் இன்று சிறப்பாக நடைபெறும். உங்களாக நேரம் உதிக்க வேண்டிய நாள் இன்று.

உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு கண்ணாடி கதவு
Published by:Vaijayanthi S
First published:

Tags: Oracle Speaks

அடுத்த செய்தி