மேஷம்:
நிலுவையில் உள்ள பணிகளை முடிக்கவும், நிலுவையில் உள்ள பணத்தை செலுத்தவும் உகந்த நாளாகும். லேசான தொற்றுகள் அல்லது தலைவலி போன்றவை ஏற்படலாம். வாக்குவாதம் வருகின்ற இடங்களில் பொறுமையை கடைப்பிடிக்கவும்.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - தோட்டம்
ரிஷபம்:
இன்றைய தினம் ஆற்றல் வலுவானதாக இருக்கும். இது புதிய சிந்தனையை தூண்டும். உங்களிடம் யாராவது கடன் கேட்டால் மறுத்து விடவும். நிறைய நடைபயிற்சி செய்யவும். அது உங்களுக்கு ரிலாக்ஸ் அளிப்பதாக அமையும்.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - இரண்டு சிறகுகள்
மிதுனம்:
இன்றைய தினம் உங்கள் மனம் தைரியமானதாக இருந்தாலும், மற்றவர்களின் பார்வைக்கு உணர்ச்சிவசப்பட்டவராக தெரிவீர்கள். உத்திசார்ந்த பேச்சுவார்த்தை மூலம் காரியம் சாதிக்கலாம். சக ஊழியர் உங்களிடம் பண உதவி கேட்பார்.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - கூழாங்கற்கள்
கடகம்:
பழைய நண்பரை சந்திக்கலாம் அல்லது அவருடன் மீண்டும் தொடர்பு ஏற்படக் கூடும். வெளியிடங்களுக்குச் செல்ல பருவநிலை சாதகமானதாக இருக்காது. எதாவது ஒன்றுக்கு ஆதரவளிக்க திட்டமிடுகிறீர்கள் என்றால், அதற்கான வாய்ப்பு கிடைக்கும்.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - பழைய பேப்பர்
சிம்மம்:
விருந்தினர்கள் திடீரென்று வருவார்கள். இன்றைய தினம் மகிழ்ச்சியான கொண்டாட்டங்கள் நிரம்பியிருக்கும். தடைபட்ட பணவரவு வந்து சேரும். உங்கள் பணியாளர் முன்வைக்கும் குறைகளுக்கு தீர்வு காண முன்னுரிமை அளிக்கவும்.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - முத்துக்கள்
கன்னி:
பணியிடத்தில் நல்லதொரு சூழல் நிலவுகிறது. நீண்டகாலம் நிலுவையில் உள்ள பேச்சுவார்த்தையை முடிப்பீர்கள். வீட்டிலும், அலுவலகத்திலும் ஆவண நடவடிக்கைகளை நிறைவு செய்யவும். தூக்கமின்றி தவிக்கும் நீங்கள் முறையாக தூங்க வேண்டும்.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - வாசல்
துலாம்:
சில பொறுப்புகளை சுமந்து வருகிறீர்கள் என்பதால் நீங்கள் பலவீனமானவர் அல்ல. உங்கள் வாதங்களை வலுவானதாக எடுத்துரைக்கவும். புதியதொரு உணவை சமைக்க முயற்சிக்கலாம். உடல்நலன் குறித்து கூடுதல் கவனம் தேவை.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - சிவப்பு கைக்குட்டை
விருச்சிகம்:
இரவில் தூக்கத்தின் போது வரும் கனவுகள் அச்சுறுத்தலை ஏற்படுத்தக் கூடும். ஆனால், அதை தீவிரமானதாக கருத வேண்டாம். எதிர்பாலினத்தவர் உங்கள் கவனத்தை ஈர்க்க கூடும். இன்றைய தினம் பழைய நண்பரை சந்திப்பீர்கள்.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - செங்கல் சுவர்
தனுசு:
மிக நெருக்கமான ஒருவர் உங்களை தவறாக வழிநடத்துவார். இன்றைய தினம் உங்கள் மனம் விரும்பும் நபர்களுக்காக நேரம் ஒதுக்கவும். மாலையில் வெளி இடங்களுக்கு செல்வீர்கள். வழக்கமான மருத்துவ பரிசோதனை உதவிகரமாக இருக்கும்.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - புதிய அடையாளம்
மகரம்:
இன்றைய தினம் பழைய நினைவுகள் வந்து போகும். எதார்த்தத்தை உணருவது உதவியாக அமையும். உங்கள் அக்கறையை விரும்புகின்ற பெற்றோர் மீது கவனம் செலுத்தவும். பழைய கண்ணோட்டத்திற்கு புதிய திட்டத்தை செயல்படுத்தவும்.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - காப்பர் பாட்டில்
கும்பம்:
உங்கள் அச்சம் தற்போது கட்டுப்பாடான அளவில் இருக்கும். இனி கெட்ட கனவுகள் வராது. கடந்த சில மாதங்களில் உங்களுக்கு கிடைத்த பலன்களை எண்ணி மகிழ்ச்சி அடைவீர்கள். உங்களுக்கான பொறுப்புகள் அதிகரிக்க உள்ளன.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - பனை மரம்
மீனம்:
குடும்பத்திற்கான ஒரே மன ஆறுதல் நீங்கள் மட்டுமே. ஆகவே, அவர்களுக்காக நேரம் ஒதுக்கவும். புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட வாய்ப்பு உண்டு. ரியல் எஸ்டேட் துறையில் இருப்பவர்கள் பிஸியாக இருப்பீர்கள். அரசு அதிகாரிகளுக்கு சில தடைகள் ஏற்படலாம்.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - பறவை கூட்டம்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Oracle Speaks, Tamil News