ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு இன்று (டிசம்பர் 28, 2022) கொண்டாட்டங்கள் மற்றும் சர்ப்ரைஸ் நிறைந்த நாளாக இருக்கும்.!

தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு இன்று (டிசம்பர் 28, 2022) கொண்டாட்டங்கள் மற்றும் சர்ப்ரைஸ் நிறைந்த நாளாக இருக்கும்.!

தெய்வீக வாக்கு

தெய்வீக வாக்கு

Oracle Speaks | மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான தினசரி ராசி பலன் இதோ...

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

மேஷம்:

இன்று முக்கியமான பேச்சுவார்த்தைகளின் போது அமைதியாக மற்றும் நிதானமாக இருங்கள். உங்கள் மீதான விமார்சனத்தை பகுப்பாய்வு செய்வதில் நேரம் செலவிடுங்கள். இன்று உங்களுக்கு கொண்டாட்டங்கள் மற்றும் சர்ப்ரைஸ் நிறைந்த நாளாக இருக்கலாம்.

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு மேனெக்வின்

ரிஷபம்:

கடந்த காலத்தில் உங்களை மன உளைச்சலுக்கு உள்ளாகியிருந்த சில விஷயங்களில் இருந்து மீண்டு வெளியே வந்து இன்று சமநிலை உணர்வை அடைவீர்கள். உங்களுக்கு இருக்கும் சில பழைய பள்ளி பழக்கவழக்கங்கள் இன்று ஒரு தடையாக இருக்கலாம்.

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு ரோல்மாடல்

மிதுனம்:

நீங்கள் ஏற்கனவே போட்டு வைத்துள்ள திட்டத்தில் ஏற்படும் திடீர் மாற்றம் உங்கள் நாளை இன்று முற்றிலும் மாற்றும். இன்று நீங்கள் ஒரு நிகழ்வுக்கு அழைக்கப்படலாம். இன்று உங்களுக்கு அறிமுகமாகும் புதிய நபர்கள் நீண்ட காலத்திற்கு உதவியாக இருப்பார்கள். அவுட்டோர் ஆக்டிவிட்டீஸ்களின் போது விழிப்புடன் இருங்கள்.

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு சில்வர் ஸ்ட்ரிங்

கடகம்:

இன்று நீங்கள் புதிதாக சில முயற்சிகள் அல்லது செயல்களை செய்ய துவங்கும் முன் பதற்றமாக உணரக் கூடும். ஆனால் ஆற்றல் நிறைந்த நாளாக அமையும். ஒரு குறிப்பிட்ட முடிவை எடுப்பதில் உங்களுக்கு குழப்பம் வரலாம். அதிலிருந்து மீள உங்களுக்கு வழக்கத்தை விட அதிக நேரம் எடுக்கலாம்.

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு ரோஜா செடி

சிம்மம்:

நீங்கள் நினைத்தபடி காரியங்களை சாதித்து கொள்ளும் நாளாக இன்று இருக்கும். இன்று நீங்கள் செய்யும் கடினமான வேலைகளுக்கான வெகுமதிகளை விரைவில் பெறலாம். நீங்கள் சிரமமின்றி மற்றவர்களை மிஞ்சி முன்னேறி செல்வீர்கள். பாராட்டுகள் நிறைந்த நாள்.

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - சூரிய உதயம்

கன்னி:

பிரச்சனைகளைத் தீர்க்க மனதளவில் சிறிது நேரம் மற்றும் இடைவெளி கொடுங்கள். இன்று புதிதாக ஏதாவது முயற்சி செய்ய நீங்கள் விரும்புவீர்கள். அந்த முயற்சி மூலம் சில நன்மைகள் உங்களுக்கு கிடைக்க கூடும். பணியிடத்தில் இன்று உங்களுக்கு சாதகமான சூழல் நிலவும்.

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு உயரமான கட்டிடம்

துலாம்:

நீங்கள் பல அனுபவங்களை பெற்று பெற்று மெச்சூரிட்டியாக இருப்பீர்கள் என்றால் இன்று ஏற்படும் திடீர் நிலைமைகளை உன்னிப்பாக கவனித்து அதற்கேற்ப முடிவுகளை எடுக்கும் பகுப்பாய்வு செய்யும் திறனை பெற்றிருப்பீர்கள். இன்று எந்த செயலையும் செய்யும் முன் நன்கு சிந்தித்துப் பார்க்க வேண்டும். உங்களுக்கு நெருக்கமான ஒருநபர் இன்று துன்பத்தில் இருக்கலாம்.

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு வாலட்

விருச்சிகம்:

இன்று உங்களின் முதன்மையான பணி, நீங்கள் உறுதியாக நம்பும் ஒருவருக்காக இருக்க வேண்டும். ஆனால் இது தவறினால் உங்கள் இருவருக்கும் இடையே இடைவெளியை ஏற்படுத்தலாம். இன்று சொத்து சார்ந்த பரிவர்த்தனையில் ஈடுபட்டிருந்தால் நல்ல நேரத்திற்காக காத்திருங்கள்.

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு எமரால்ட்

தனுசு:

இன்று பல வாய்ப்புகள் கொண்ட ஒரு ஆற்றல்மிக்க நாளாக உங்களுக்கு அமையும். சிறிய வாய்ப்புகளாக இருந்தாலும் அவை சுவாரஸ்யமானவையாக இருக்கும். நிலுவையில் உள்ள பணிகளை இன்று முடிப்பதில் கவனம் செலுத்துங்கள்.

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு கோல்டன் எம்பிராய்டரி

மகரம்:

இன்று உங்களது நாள் இயல்பாக மற்றும் ஆற்றல் நிறைந்ததாக இருக்கும். இன்று நீங்கள் உங்களது எதிர்கால திட்டங்களை நிதானமாக திட்டமிடலாம். நண்பர்களின் திடீர் வரவு அல்லது சந்திப்பு உங்களை உற்சாகமாக வைக்கும். பெற்றோரின் உடல்நிலையில் கவனம் தேவை.

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு தேனீ

கும்பம்:

இன்று உங்களுக்கு கற்பனைகள் அதிகமாக இருக்கலாம்.. ஆனால் நீங்கள் உண்மையில் கற்பனைகளை தவிர்த்துவிட்டு முயற்சிகளில் வேகத்தை அதிகரிக்க வேண்டும். உங்கள் வாழ்க்கைக்கு ஒரு புதிய திசையை காட்டும் ஒரு சுவாரஸ்யமான வாய்ப்பு இன்று உங்களை நோக்கி வரக்கூடும்.

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு சணல் பை

மீனம்:

உங்கள் உணர்வுகளை நீங்கள் பிறரிடம் வெளிப்படையாக காட்டினால் காயமடைவோமோ என்ற பயம் உங்களுக்கு ஏற்பட கூடும். ஆனால் நீங்கள் அவ்வாறு செய்யாவிட்டால் அது உங்களுக்கு கவலையை ஏற்படுத்த கூடும். உங்கள் ரகசியத்தை அறிந்த மிக நெருங்கிய நண்பரிடம் உள்ளுக்குள் இருப்பதாய் தயங்காமல் பகிர்ந்து கொள்ளலாம்.

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு ஏரி

First published:

Tags: Oracle Speaks, Tamil News