Home /News /spiritual /

Today Rasi Palan : இந்த ராசியினர் இன்று (ஆகஸ்ட் 7, 2022) குழந்தைகளால் மகிழ்ச்சி அடைவீர்கள்

Today Rasi Palan : இந்த ராசியினர் இன்று (ஆகஸ்ட் 7, 2022) குழந்தைகளால் மகிழ்ச்சி அடைவீர்கள்

ராசி பலன்

ராசி பலன்

Rasipalan | மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான தினசரி ராசி பலன் இதோ...

    மேஷம் 

    மற்றவர்களின் நோக்கத்தைப் புரிந்து கொண்ட பிறகும், நீங்கள் ஆபத்தைத்தான் தேர்வு செய்வீர்கள். மற்றவர்களை நம்புவதைத் தவிர்க்க வேண்டும் என்பதைத் தாமதமாகப் புரிந்துக்கொள்வீர்கள். நீங்கள் விரைவில் ஒரு பயணத்தை மேற்கொள்ளலாம். வாழ்வில் நீங்கள் புறக்கணிக்க முயற்சிக்கும் ஒருவர் உங்களிடம் வருவார்கள். எனவே நண்பர்களைப் புத்திசாலித்தனமாகத் தேர்வு செய்வது நல்லது.

    உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் – செடி.

    ரிஷபம் 

    உங்களது வாழ்வில் ஏற்படும் சில சிக்கல்களில் நீங்கள் பழைமைவாதிகள் போல் செயல்படுவீர்கள். ஆனால் பொதுவாழ்வில் உங்களது பார்வை வேறுபடும். நேரத்தை சரியாகத் திட்டமிட்டு செயல்படுவது, ஒரு வேலையை விரைவில் முடிக்க உதவியாக இருக்கும். நீங்கள் சில முக்கியமான நபர்களைச் சந்தித்து புதிதாக ஒன்றைத் தொடங்குவதற்கான வாய்ப்பைப் பெறலாம். தூர தேசத்தைச் சேர்ந்த ஒருவர் உங்களுக்கு சில நல்ல செய்திகளைக்கூறலாம்.

    உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - பூங்கொத்து

    மிதுனம் 

    உங்கள் மனம் அமைதியடைய வேண்டும் என்றால் ஐம்புலன்களை அடக்கி இருக்கவும். வாழ்வில் நிகழும் சில விஷயங்கள் உங்கள் எதிர்காலத்தை சிறப்பாக திட்டமிட உதவும். நீங்கள் இப்போது தனியாக நேரத்தை செலவிட விரும்பலாம். உங்கள் மீது சுமத்தப்பட்ட குடும்ப அழுத்தம் விரைவில் சரியாகும். தற்போதைக்குக் கடன் வாங்குவதைத் தவிர்க்கவும்.

    உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் – ஒரு பீங்கான் குவளை

    கடகம்

    சிலரிடம் நல்ல அபிப்ராயத்தைப் பெறுவீர்கள். உங்களது திறன் மற்றும் கடந்த காலத்தில் எப்படி இருந்தீர்கள் என்பது குறித்து வேறு யாராவது உங்களுக்கு எடுத்துரைத்து உறுதுணையாக இருக்கலாம். நீங்கள் ஏதேனும் முதலீடு செய்திருந்தால், உங்களை வளர்ச்சிப்பாதைக்கு இட்டு செல்லும்.

    உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் – பிங்க் நிற மலர்

    சிம்மம்

    உங்களது வாழ்வில் நீங்கள் ஒரு திட்டத்தை உருவாக்கியிருக்கலாம். ஆனால் அதை செயல்படுத்துவது முற்றிலும் கடினமாக இருக்கக்கூடும். தினசரி பணிகள் உங்களை எப்போதும் பிஸியாக வைத்திருக்கும். கடந்த காலத்தில் நீங்கள் செய்தவற்றின் பலனை பெறும் நாள். தேவையில்லாமல் பல விஷயங்களைப்பற்றி யோசிப்பது வீண் குழப்பம் மற்றும் மன அழுத்தத்திற்கு வழிவகுக்கும்.

    உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - புதிய வாசனை திரவியம்

    கன்னி

    பொது இடங்களில் தனிப்பட்ட உரையாடல்களைத் தவிர்க்கவும். உங்களை அறியாமல் சில விஷயங்களில் நீங்கள் ஈடுபடலாம். இது ஒரு குழப்பமான மற்றும் மாறுபட்ட உணர்வுகள் மற்றும் உணர்ச்சிகளைக் கொண்ட ஒரு நாளாக அமையும். உங்களால் ஈர்க்கப்பட்ட ஒருவர் உங்களைத் தொடர்புகொள்ள முயற்சி செய்யும் போது நீங்கள் உணர்ச்சி ரீதியாகவும் பாதிக்கப்படலாம். எனவே அவசரமான அல்லது விரைவான முடிவுகளை எடுப்பதைத் தவிர்க்கவும். வாழ்வில் ஆரோக்கியமாக இருக்க சுவாசப் பயிற்சிகளைப் தினமும் செய்யுங்கள்.

    உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் – ஒரு வெள்ளை பலகை

    துலாம்

    நீங்கள் முக்கியமான ஒருவரை சந்திக்க இருந்தால், அவர்களின் நேரத்தையும் ஈடுபாட்டையும் நீங்கள் மதிக்கிறீர்கள் என்று அர்த்தம். இச்சந்திப்பில் உங்களால் செயல்படுத்த முடியாத யோசனைகளைப் பற்றி பேசுவதை நீங்கள் தவிர்க்க நேரிடும். சிறிது காலத்திற்கு சில நிதி நெருக்கடிகள் இருக்கலாம், ஆனால் நீங்கள் அதை விரைவில் சமாளிக்க முடியும். குறிப்பாக முதியவர்கள் உங்களைப் பற்றி ஒரு நல்ல அபிப்ராயத்தை வைத்திருப்பதால் அவர்களைத் தாழ்த்திப் பேசமால் இருக்க நீங்கள் முயற்சி செய்யுங்கள்..

    உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு சிலிக்கான் அச்சு

    விருச்சிகம்

    இன்று யாராவது உங்களுடன் வேண்டுமென்றே சண்டையிட்டால், அதைவிட்டு விலகி செல்லுங்கள். மனதில் ஏற்படும் குழப்பம் மிகப்பெரியப் பிரச்சனையாக இருக்கக்கூடும் என்பதால் அமைதிப்படுத்துவதற்கான வழிகளைத் தேர்வு செய்யுங்கள். உங்கள் மனதில் நிறைய விஷயங்கள் இருந்தாலும் எல்லாவற்றைப் பற்றி பேசத்தேவையைில்லை. நிச்சயம் கடந்த கால பிரச்சனையைத் தீர்க்க உங்களுக்கு பல வாய்ப்புகள் கிடைக்கும்.

    உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் -விளக்குகளின் சரம்

    தனுசு: (நவம்பர் 22 - டிசம்பர் 21):

    உலகம் தற்போது உங்கள் தேவை மற்றும் ஆசைகளின் அடிப்படையில் மறுசீரமைக்க முயற்சிக்கிறது. நீங்கள் நன்றியுணர்வு நிறைந்தவராக இருக்கலாம். ஒரு சிறிய பிரச்சனையில் சண்டை அல்லது கருத்து வேறுபாடு ஏற்படலாம். உங்களது கணவரோ/ மனைவியோ உங்களுடன் ஒத்துழைக்காமல் அதற்கு எதிர்மறையாக சில விஷயங்களில் செயல்படலாம். எனவே சிறிது நேரம் ஒதுக்கி உணர்வுகளுக்கு மதிப்பளியுங்கள். ஆன்மீக பயணம் உங்களுக்கு நன்மை தரும்.

    உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - பறவை

    மகரம்

    ஏதாவது நடக்கப்போகிறது? என்று நீங்கள் கருதினால், முதலில் நீங்கள் பயப்படாதீர்கள். ஏனென்றால் அதுவே நடந்துவிடக்கூடும். இதைத் தவிர்ப்பதற்கான சிறந்த வழி, அதற்கு முக்கியத்துவம் கொடுப்பதை நிறுத்துவது தான்.. உங்கள் நண்பர்கள் இருவர் உங்களைத் தொடர்பு கொள்ளவார்கள் ஆனால் சந்திக்கமாட்டார்கள். தேவையான யோசனைகளை அவர்களுக்கு வழங்குங்கள்.

    உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் – சூரிய கதிர்கள்

    கும்பம்

    எந்த எதிர்ப்பும் இல்லாமல் உங்களுக்கு சில விஷயங்கள் நடப்பதை நீங்கள் கவனிப்பீர்கள். இந்த வாரம் உங்களது குழந்தைகளால் மகிழ்ச்சியைப் பெறுவீர்கள். உங்கள் வேலைக்கு சிறிது ஓய்வு கொடுத்துவிட்டு மற்ற பொறுப்புகளில் ஈடுபடுங்கள். பணவரவு நன்றாக இருக்கும், மன அழுத்தம் குறைந்து. உங்களுக்குச் சாதகமான நாள்களாக அமையும். முடிந்த வரை கருப்பு நிறத்தைத் தவிர்க்க முயற்சிக்கவும்.

    உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு மண் பானை

    மீனம்

    சாதாரண வாழ்க்கையில் நீங்கள் சலிப்படையக்கூடும். உங்களது பழைய முதலாளி உங்களை ஏதாவது உதவிக்காகத் தொடர்பு கொள்ளலாம். நிதி முன்னேற்றம் சில காலத்திற்கு நிலையானதாக இருக்கலாம்.எனவே உங்கள் பொழுதுபோக்கை வேறு வழிகளில் கையாளுங்கள்..

    உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் – மின்னஞ்சல்
    Published by:Murugesh M
    First published:

    Tags: Rasi Palan

    அடுத்த செய்தி