Home /News /spiritual /

செவ்வாய்க்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (ஆகஸ்ட் 30, 2022) முழுவதும் லாப வாய்ப்புகள் கிடைக்க கூடும்..!

செவ்வாய்க்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (ஆகஸ்ட் 30, 2022) முழுவதும் லாப வாய்ப்புகள் கிடைக்க கூடும்..!

money

money

Money Mantra | மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கான இன்றைய (ஆகஸ்ட் 30) பணவரவு எப்படி இருக்கும் என்பதை தற்போது பார்க்கலாம்.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
மேஷம்:

அதிகம் பழக்கமில்லாத நபர்கள் தரும் ஆலோசனையின் பேரில் இன்று முதலீடு எதுவும் செய்யாதீர்கள், அப்படி செய்தால் நஷ்டம் ஏற்படும். உங்களை சுற்றி இருப்பவர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். வீட்டில் சுப காரியங்கள் பற்றிய விவாதம் எழும்.

ராசியான எண்: 9, ராசியான நிறம்: வெள்ளை

பரிகாரம்: ஹனுமான் சாலிசா பாராயணம் செய்யவும்

ரிஷபம்:

இன்று சொத்து விஷயத்தில் குடும்பத்தாரும், சுற்றி இருப்பவர்களும் சில பிரச்சனைகளை உருவாக்க முயற்சிப்பார்கள். மற்றப்படி இன்றைய நாள் உங்களுக்கு மிக சாதகமாக இருக்கும். பணி நடத்தை தொடர்பான சச்சரவுகள் இன்று தீரும். நீங்கள் செயல்படுத்த நினைக்கும் புதிய திட்டம் தொடர்பான சில வேலைகளை தாராளமாக தொடங்கலாம்.

ராசியான எண்: 0, ராசியான நிறம்: கருப்பு

பரிகாரம்: ஆலமரத்தடியில் நெய் விளக்கு ஏற்றவும்

மிதுனம்:

இன்றைய நாள் பொருளாதார ரீதியாக உங்களுக்கு மிக சாதகமாக இருக்கும். நாள் முழுவதும் லாப வாய்ப்புகள் கிடைக்க கூடும். மிகவும் சுறுசுறுப்பான நாளாக உங்களுக்கு அமைந்தாலும், குடும்பத்தில் அமைதி நிலவும்.

ராசியான எண்: 5, ராசியான நிறம்: லைட் ப்ளூ

பரிகாரம்: சுந்தரகாண்டம் அல்லது ஹனுமான் சாலிசாவை 7 முறை பாராயணம் செய்யவும்

கடகம்:

வியாபாரத்தில் பெரிய ரிஸ்க் எடுக்க வேண்டாம்; இழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது என்பதால் எச்சரிக்கையுடன் செயல்படுங்கள். குடும்பத்தில் கவலை ஏற்படும் மற்றும் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க கடன் வாங்க வேண்டியிருக்கும்.

ராசியான எண்: 2, ராசியான நிறம்: சிவப்பு

பரிகாரம்: சிறையில் அடைக்கப்பட்ட பறவைகளை விடுவிக்கவும்

சிம்மம்:

இன்று உங்கள் பிள்ளைகள் தொடர்பாக நீங்கள் ஒரு பெரிய முடிவை எடுக்க வேண்டியிருக்கலாம். பார்ட்னர்ஷிப்பில் செய்யப்படும் தொழில்கள் இன்று லாபம் தரும். அன்றாட வீட்டு வேலைகளை சமாளிக்க இன்று உங்களுக்கு பொன்னான வாய்ப்பு கிடைக்கும்.

ராசியான எண்: 9, ராசியான நிறம்: ஃபிரோஸி

பரிகாரம்: : விநாயகப் பெருமானுக்கு லட்டு வைத்து படைக்கவும்

கன்னி:

வியாபார ரீதியாக இன்றைய நாள் உங்களுக்கு இனிமையாக இருக்கும். எதிலும் அவசரம் காட்டாமல் நிதானமாக இருங்கள். குடும்பத்துடன் மகிழ்ச்சியாக நேரம் செலவிடுவீர்கள். ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள்.

ராசியான எண்: 4, ராசியான நிறம்: பர்பிள்

பரிகாரம்: ராமர் கோவிலுக்கு கொடி காணிக்கை செலுத்தவும்

துலாம்:

வியாபாரம் உட்பட இன்று நீங்கள் ரிஸ்க் எடுக்கும் விஷயங்கள் லாபம் தரும். பொறுமை மற்றும் உங்கள் மென்மையான நடத்தை மூலம் இருக்கும் பிரச்சனைகளை சரி செய்யலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். துன்பத்தில் இருப்பவருக்கு உதவ வாய்ப்பு கிடைத்தால் தயங்காமல் உதவுங்கள்.

ராசியான எண்: 7, ராசியான நிறம்: பச்சை

பரிகாரம்: உங்கள் தாய்க்கு இனிப்புகளை வழங்குங்கள்

விருச்சிகம்:

முக்கிய முடிவுகளை எடுப்பதில் தாமதம் வேண்டாம். நலம் விரும்பிகளின் அறிவுரைகளை பின்பற்றுங்கள், பொருளாதார விஷயங்களில் சுறுசுறுப்பாக செயல்பட வேண்டிய நாள். ஒற்றுமையாக செயல்பட்டால் எதிர்பாராத லாபம் கிடைக்கும். பட்ஜெட்டுக்கு ஏற்ப செலவு செய்யும் பழக்கத்தை கடைபிடியுங்கள்.

ராசியான எண்: 7, ராசியான நிறம்: கிரே

பரிகாரம்: விநாயகப் பெருமானுக்கு அருகம்புல் மாலை சாத்துங்கள்

தனுசு:

உங்களுக்கு இன்று அதிர்ஷ்டம் வலுவாக இருப்பதால் தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். லாபம், செல்வாக்கு அதிகரிக்கும். சிறந்த தலைமை மற்றும் மேலாண்மை பண்புகளை வெளிப்படுத்துவீர்கள். சக ஊழியர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். பெரிய முயற்சிகளை மேற்கொள்ளும் நாளாக அமையும்.

ராசியான எண்: 5, ராசியான நிறம்: லைட் ரெட்

பரிகாரம்: 108 முறை காயத்ரி மந்திரம் உச்சரிக்கவும்

மகரம்:

இன்று பரிவர்தனைகளில் கவனமாக இருக்கவும் இல்லையெனில் நிதி இழப்பு ஏற்படும். வியாபாரத்தில் லாபம் நன்றாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்புடன் பணியிடத்தில் உங்களுக்கான இடத்தை தக்க வைப்பீர்கள்.

ராசியான எண்:3, ராசியான நிறம்: நீலம்

பரிகாரம்: அனுமனுக்கு தேங்காய் வைத்து படைக்கவும்

கும்பம்:

இன்று எளிதில் யாரையும் நம்பாதீர்கள், இல்லையெனில் நஷ்டம் ஏற்படும். பொருளாதார பரிவர்த்தனைகளில் கவனமாக இருக்க வேண்டும். எந்தவொரு முக்கியமான வேலையையும் செய்வதற்கு முன் உங்கள் அன்புக்குரியவர்களிடம் கலந்து பேசுங்கள்.

ராசியான எண்: 1, ராசியான நிறம்: பச்சை

பரிகாரம்: துர்கை அம்மனுக்கு சிவப்பு புடவை சாத்துங்கள்

மீனம்:

உங்களது தொழில், வியாபாரம் இன்று வலுவடையும். அன்புக்குரியவர்கள் மற்றும் மேலதிகாரிகளுடனான சந்திப்பால் ஆதாயம் கிடைக்கலாம். வருமான ஆதாரங்களை அதிகரித்து கொள்ள வாய்ப்புகள் கிடைக்கும். பெரிய முயற்சிக்கு குடும்பத்தினர் பக்கபலமாக இருப்பார்கள்.

ராசியான எண்: 9, ராசியான நிறம்: சிவப்பு

பரிகாரம்: சிறிய குழந்தைகளுக்கு இனிப்புகளை வழங்கவும்
Published by:Selvi M
First published:

Tags: Astrology, Rasi Palan

அடுத்த செய்தி