நெருங்கிய ஒருவருக்கு உங்கள் ஆதரவு தேவைப்படலாம், அது சில விஷயங்களில் கருத்து வேறுபாடுகளுக்கு வழிவகுக்கும். ஆனால் அதைத் தீர்ப்பது உங்களுடைய மதிப்பை அதிகரிக்கும். பார்ட்னர்ஷிப் விவகாரம் தொடர்பாக அதிகாரத்தில் இருக்கும் ஒருவரை அணுகும்போது நீங்கள் தயங்கலாம் அல்லது சிறு ஏமாற்றத்தை சந்திக்கலாம்
உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - மணி பிளான்ட்
ரிஷபம் :
நீங்கள் பங்கேற்க விரும்பினால், நாள் கொண்டாட்டமும் மகிழ்ச்சியும் நிறைந்ததாக இருக்கலாம், ஆனால் நீங்கள் பங்கேற்கவில்லை என்றால், அது சாதாரணமாகவும் சலிப்பாகவும் இருக்கலாம். நிதி விஷயத்தில் அவசர முடிவுகளை எடுக்க வேண்டாம்.
உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - சிவப்பு நிற அலங்கார பொருள்
மிதுனம் :
பணவரவு அதிகரிப்பது உங்கள் நம்பிக்கையை அதிகரிக்கும். நீங்கள் எந்த பழக்கத்திற்காகவது அடிமையாக இருந்தால், அதிலிருந்து மீள்வதற்கான விஷயத்தில் முன்னேற்றம் காணலாம். இல்லத்தரசிகளுக்கு பிஸியான நாள் மற்றும் புதிய வேலைகளை உங்களது வழக்கமான பட்டியலில் சேர்க்க மிகுந்த சிரமப்பட வேண்டியிருக்கும்.
உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - மென்மையான பொம்மை
கடகம் :
குழப்பமான மனநிலையில் இல்லை என்றாலும், எண்ண ஓட்டங்களால் சில இடையூறுகள் ஏற்படலாம். உங்களுக்குள்ளேயே வைத்து சில விஷயங்களை அமைதியாக யோசிக்க நேரம் எடுத்துக்கொள்ளுங்கள். ஆடை வணிகத்தில் உள்ளவர்கள் தேவை அதிகரிப்பின் காரணமாக ஒரு குறிப்பிட்ட அளவு முன்னேற்றம் அடைய வாய்ப்புள்ளது.
உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - சிக்னல்
சிம்மம் :
அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி உங்களுக்கு ஏற்கனவே சில குறிப்புகள் இருக்கும், ஆனால் அந்த யோசனைக்கு நீங்கள் இன்னும் 100 சதவீத வடிவம் கொடுக்கவில்லை. இப்போது சரியான முடிவை எடுக்க வேண்டிய நேரம் இது. நீங்கள் கடந்த காலத்தில் செய்த விஷயத்திற்காக வெகுமதி அல்லது அங்கீகாரம் பெற வாய்ப்பு உள்ளது.
உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - பைக்
கன்னி :
நீண்ட நாட்களாக கிடப்பில் இருந்த ஒன்றை விரிவாக்கம் செய்யும் பணி மீண்டும் கிடப்பில் போடப்பட்டுள்ளது. விதை அளவிற்கு தோன்றிய ஒரு யோசனை, இப்போது நாற்றாக மாறி, செடியாக வளரும் வாய்ப்பு உள்ளது. காதல் மீது ஆர்வமுள்ள நபரை பயணத்தில் சந்திக்க வாய்ப்புள்ளது.
உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - இறகுகள்
துலாம் :
ஒன்று கூடுவது அல்லது உல்லாசப் பயணம் அல்லது விருந்து ஆகியவற்றிற்கு வாய்ப்புள்ளது. நாளின் இரண்டாம் பாதியானது முதல் பாதியை விட புத்துணர்ச்சியூட்டும் வகையில் பொழுதுபோக்காக இருக்கும். அதிகாலை முதல் மதியம் வரை சில சோம்பேறித்தனமாக உணரலாம்.
உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - காரோக்கி
விருச்சிகம் :
நீங்கள் விடாப்பிடியாக நிற்கும் கருத்துக்களில் மற்றவர்களுக்கு சிக்கல் இருக்கலாம், ஆனால் நீங்கள் அவற்றைப் பற்றி மிகவும் உறுதியாக இருப்பதாகத் தெரிகிறது. உங்கள் உள்நெகிழ்வுத்தன்மையில் சிறிது வேலை செய்ய வேண்டியிருக்கும். சில மாதங்களுக்கு முன்பு உங்களுக்கு வந்த ஒரு நல்ல வாய்ப்பு, தற்போது மீண்டும் வரலாம்.
உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - புதிய புத்தகம்
தனுசு :
நீண்ட காலத்திற்குப் பிறகு, நீங்கள் மிகவும் சீரானதாக உணர்கிறீர்கள் மற்றும் உங்களைச் சுற்றி நடக்கும் பல முக்கியமான விஷயங்களைப் பற்றி தெளிவு பெறுகிறீர்கள். இப்போதே ஒழுங்கமைக்கவும், உற்சாகமாக முன்னேற ஒரு தெளிவான திட்டத்தை உருவாக்கவும். கடந்த காலத்தில் நீங்கள் ஒருவருக்கு கடனை கொடுத்திருந்தால், அது விரைவில் மீண்டும் வரலாம்.
உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - பியானோ
மகரம் :
ஒரு சிலர் உங்களின் அதிகாரப் பதவியைப் பயன்படுத்திக் கொள்ள முயற்சிப்பதால், அதனை பாதுகாப்புடன் நீங்கள் தக்க வைத்துக் கொள்ள வேண்டும். உள் விவகாரங்களில் யாராவது தலையிட முயற்சித்தால், அதில் உங்களுக்கு விருப்பம் இல்லை என்பதை உடனே வெளிப்படுத்தலாம். டீனேஜர்கள் குழப்பமான நேரத்தை சந்திக்க நேரிடும்.
உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - சதுர வடிவ பெட்டி
கும்பம் :
உங்கள் உணர்ச்சிகரமான சுயத்தை விட்டுவிட்டு, உங்கள் நடைமுறை சுயமாக மறுபிறவி எடுக்க வேண்டிய பெரும் தேவை உருவாகலாம். வாழ்க்கையில் சில முக்கியமான முடிவுகளை எடுக்க வேண்டியிருக்கும். உங்கள் வழியில் ஒரு புதிய வாய்ப்பு வருகிறது, இது சில மாற்றங்களை கொடுக்கலாம்.
உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - பரிசு பெட்டி
மீனம் :
புதியதை ஏற்றுக்கொள்வதற்கும், அடுத்து வரவிருப்பதை ஏற்றுக்கொள்வதற்கும் நீங்கள் தயாரான மனநிலையில் இருப்பதாகத் தெரிகிறது. ஆனால் உங்கள் மனம் அமைதியற்றது. அனைத்து விஷயங்களும் ஏற்கனவே திட்டமிட்டப்படி நடப்பதால், நீங்கள் உங்கள் அச்சங்களை நீக்கிவிட்டு முன்னேற வேண்டிய நேரம் இது.
உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - மணிக்கூண்டு
Published by:Selvi M
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.