Home /News /spiritual /

தெய்வீக வாக்கு: இன்று (28 ஜூன் 2022) இந்த ராசியினருக்கு கூடுதல் பொறுப்பு கிடைக்க வாய்ப்பு உள்ளது..!

தெய்வீக வாக்கு: இன்று (28 ஜூன் 2022) இந்த ராசியினருக்கு கூடுதல் பொறுப்பு கிடைக்க வாய்ப்பு உள்ளது..!

Deiviga Vaakku

Deiviga Vaakku

Rasi Palan | மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான தினசரி ராசி பலன் இதோ...

மேஷம் :

இன்றைய தினம் முடிக்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ள வேலைகளை விரைவாக முடிக்கவும், அதேபோல் கடந்த காலத்தில் பாக்கி வைத்துள்ள தொகையை செட்டில் செய்யவும் நல்ல நாள். லேசான நோய்த்தொற்றுகள் அல்லது வலிகள் இருந்தால் அதை கவனியுங்கள். வாக்குவாதத்தின் போது அமைதியாக இருக்க முயற்சி செய்யுங்கள். ஒரு சமநிலையான அணுகுமுறை எதிர்காலத்தில் உதவக்கூடும்.

உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - தோட்டம்

ரிஷபம் :

இன்றைக்கு உங்க எனர்ஜி லெவல் அதிகமாக இருப்பதால், சில புதிய வேலைகளை தொடங்க ஏற்றது. யாராவது கடன் கேட்டால், நீங்கள் பணிவுடன் மறுக்கலாம். உங்களையும் கவனித்துக் கொள்ள கொஞ்சம் நேரம் ஒதுக்குவது நல்லது.

உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - இரண்டு இறகுகள்

மிதுனம் :

இன்று நீங்கள் மனதளவில் வலுவாக இருந்தாலும், சிலரது நடவடிக்கைகள் உங்களை பாதிக்கலாம். வேலையை முடிக்க சில பேச்சுவார்த்தை யுக்திகள் தேவைப்படும். ஒரு சக ஊழியர் உதவி கேட்கலாம், அது உண்மையாக இருக்கலாம்.

உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஆற்றங்கரை

கடகம் :

ஏற்கனவே அறிமுகமான நபரை மீண்டும் சந்திக்கவோ அல்லது இணையவோ வாய்ப்பு கிடைக்கலாம். வெளிப்புற வேலைகள் ஏதேனும் இருந்தால் வானிலை இடையூறு ஏற்படுத்தும். நீங்கள் ஒரு காரணத்தை ஆதரிக்க திட்டமிட்டிருந்தால், இப்போது அதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.

உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - காகிதம்

சிம்மம் :

இன்று மகிழ்ச்சிக்கு குறைவில்லாத நாள். எவ்வித அறிவிப்பும் இன்றி விருந்தினர்கள் வீட்டிற்கு வரக்கூடும். நிலுவையில் உள்ள சில பாக்கிகள் விடுவிக்கப்படலாம். உங்கள் டீமில் உள்ள ஒரு ஊழியர் உங்கள் மீது ஒரு குறையை கொண்டு வரலாம், அதற்கு முன்னுரிமை கொடுத்து தீர்ப்பது நல்லது.

உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - முத்துக்கள்

கன்னி :

வேலையில் உள்ள சூழ்நிலை இப்போது சாதகமாகத் தோன்றலாம் மற்றும் உங்களுக்கு நிம்மதியாக இருக்கலாம். வீட்டிலும் அலுவலகத்திலும் ஆவணங்களை ஒழுங்கமைக்கவும். உங்களுக்கு தூக்கம் இல்லாமல் இருக்கலாம், இன்றிரவு கொஞ்சம் தரமான தூக்கத்தைப் பெற முயற்சி செய்யுங்கள்.

உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - வீட்டு வாசல்

துலாம் :

உணர்ச்சிவசப்படுவது உங்களை பலவீனப்படுத்தாது. உங்கள் பலத்தை முன்வைத்து செயல்படவும். புதிய செய்முறையை முயற்சிக்கவும் சில புதிய உறவுகளை உருவாக்கவும் இன்று ஒரு சிறந்த நாள். உங்கள் உடல்நிலையில் கூடுதல் கவனம் செலுத்துங்கள்.

உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - சிவப்பு ஸ்கார்ஃப்

விருச்சிகம் :

கனவுகள் அல்லது கெட்ட கனவுகள் ஆழ் மனதின் பயம் மட்டுமே, அவற்றை பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம். எதிர் பாலினத்தைச் சேர்ந்த ஒருவர் உங்கள் வழக்கத்திலிருந்து உங்களைத் திசை திருப்பலாம். பழைய நண்பரை சந்திப்பதன் மூலம் இன்றைய தினத்தை சிறப்பானதாக மாற்றுங்கள்.

உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - செங்கல் சுவர்

தனுசு :

நெருங்கிய ஒருவர் உங்கள் நினைவுகளுடன் போராடி வருகிறார். முக்கியமாக உங்கள் அன்புக்குரியவர்களுக்காக நேரத்தை ஒதுக்குங்கள். உங்கள் கால அட்டவணையில் மாத இறுதியில் ஒரு திட்டமிடப்படாத திடீர் பயணம் இணையலாம். ஒரு வழக்கமான மருத்துவ பரிசோதனை உதவியாக இருக்கும். தியானம் செய்வது நல்லது.

உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - நியான் சைன்

மகரம் :

பழைய நினைவுகள் நாளை ஆட்சி செய்ய வாய்ப்புள்ளது. உங்கள் உடன்பிறந்தவர்கள் எங்காவது உங்கள் அதிகாரத்தை பயன்படுத்த விரும்பலாம். பழைய அணுகுமுறைக்கு புதிய திட்டத்தை உருவாக்கவும்.

உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - கண்ணாடி பாட்டில்

கும்பம் :

உங்கள் பயம் இப்போது கட்டுப்பாட்டில் உள்ளது. காலங்கள் மாறுவதால் கெட்ட கனவுகள் குறையும். சமீபத்திய மாதங்களில் உங்களுக்கு கிடைத்த விஷயங்களுக்காக நீங்கள் நன்றியுள்ளவர்களாக உணர்கிறீர்கள். உங்களுக்கு கூடுதல் பொறுப்பு கிடைக்க வாய்ப்பு உள்ளது.

உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஆலமரம்

மீனம் :

நீங்கள் தான் உங்கள் குடும்பத்தினரின் உணர்ச்சிக்கான ஆதரவு அமைப்பாக இருக்கிறீர்கள், எனவே அவர்களுக்கு உங்களிடமிருந்து அதிக நேரம் தேவை. புதிய பார்ட்னர்ஷிப் கையெழுத்தாகும் வாய்ப்பு உள்ளது. மருத்துவ நிபுணர்களுக்கு இன்று பிசியான நாள், வேலை அதிகமிருக்கும். உயர் அதிகாரிகளுக்கு இடையூறுகள் ஏற்படும்.

உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - பறவைகள் கூட்டம்
Published by:Selvi M
First published:

Tags: Oracle Speaks

அடுத்த செய்தி