Home /News /spiritual /

தெய்வீக வாக்கு: இன்று (27 ஜூன் 2022) இந்த ராசியினருக்கு உழைப்பிற்கான வெற்றி கிடைக்கும்..!

தெய்வீக வாக்கு: இன்று (27 ஜூன் 2022) இந்த ராசியினருக்கு உழைப்பிற்கான வெற்றி கிடைக்கும்..!

Deiviga Vaakku

Deiviga Vaakku

Rasi Palan | மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான தினசரி ராசி பலன் இதோ...

மேஷம்:

இதுவரையில் நீங்கள் என்னென்ன முயற்சிகளை செயல்படுத்தி இருக்கிறீர்கள் என்பதைப் பொறுத்து வெற்றி கணக்கிடப்பட்டது. இனி புதிய பாடத்தை கற்றுக் கொள்ள வேண்டியுள்ளது. தினசரி காலையில் செய்யும் வேலைகளில் சிறு மாற்றம் தேவை.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - கார்னிலியன்

ரிஷபம்:

புதிய பொறுப்புகளுக்கான உண்மை நிலையை நீங்கள் அறிய விரும்பினால் தற்போது அதன் தன்மையை அறிந்து கொள்வீர்கள். உண்மைக்கும், உங்கள் கற்பனைக்கும் இடையே பெரும் இடைவெளி இருக்கிறது. மூத்தவர்கள் நல்ல அறிவுரை வழங்குவார்கள்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - கருப்பு ஓனிக்ஸ்

மிதுனம்:

இன்றைக்கு ஆற்றல் முழுவதும் உங்கள் இலக்குகளை நோக்கி இருக்கும். புத்தாக்க சிந்தனைகள் பிறக்கும். விலை அதிகம் கொண்ட ஒரு செயலை முன்னெடுத்துச் செல்வீர்கள். உடன் பிறந்தவர்களுக்கு உங்கள் உதவி தேவைப்படும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - புளோரைட்

கடகம்:

ஒவ்வொரு விஷயத்திலும் ஒளிந்திருக்கும் உண்மையை நீங்கள் இப்போது புரிந்து கொள்ளலாம். நீங்கள் இதை ஒப்புக் கொள்ளலாம் அல்லது ஒப்புக் கொள்ளாமல் போகலாம். பணப் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - செலனைட்

சிம்மம்:

பிறர் உங்களிடம் உதவி கோரி வந்தால், அது ஏதேச்சையான விஷயம் கிடையாது. அதை நீங்கள் செய்து கொடுக்க வேண்டியிருக்கும். உங்களுக்கு சிறு பதற்றம் இருந்தாலும் அதற்கு விரைவில் தீர்வு கிடைக்கும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - நீல கால்சைட்

கன்னி:

எதையும் மிக உறுதியாக செய்ய வேண்டிய நேரம் இது. உங்கள் மனநலன் நன்றாக இருக்கும். நீங்கள் திடமான முடிவுகளை எடுக்க வேண்டியிருக்கும். நெருங்கிய நண்பன் மூலமாக நஷ்டம் ஏற்படும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - சன்ஸ்டோன்

துலாம்:

பணியிடத்தில் புதிய நபரை நீங்கள் சந்திக்க இருக்கிறீர்கள். அவர்களை பார்த்த உடனே எடை போடுவதற்கு முன்னால் சற்று நேரம் ஒதுக்கி சிந்தியுங்கள். வார இறுதியின் புத்தாக்க திட்டம் பலன் தரும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - சாகச சாதனம்

விருச்சிகம்:

இன்றைக்கு குதூகலமான சூழல் நிலவும். தொடர்ச்சியாக கடும் உழைப்பு கொண்ட நாள்களை கடந்து வருவீர்கள். வாரத்தின் முதல் நாளாக இது இருந்தாலும் இன்று உங்கள் ஓய்வுக்குரிய நாளாகும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ரோஸ்

தனுசு:

உங்களுக்கான கடைசி வாய்ப்பு வரவில்லை என்றால், உங்களுக்கான வெள்ளி வாய்ப்பு விரைவில் வர இருக்கிறது என்று பொருளாகும். குழந்தைகள் உங்களுடன் நேரம் செலவழிக்க விரும்புவார்கள்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - சோடலைட்

மகரம்:

நீங்கள் ஏற்கனவே முடிவு செய்தபடி அடுத்தகட்ட நகர்வை முன்னெடுக்க வேண்டும். நேரம் இதில் முக்கியமானது. இனி தாமதம் கூடாது. உங்கள் உழைப்பிற்கு வெற்றி கிடைக்கும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - படிகக் கல்

கும்பம்:

பெரும் பாரம் நீங்கிவிட்டதால் இப்போது நீங்கள் மிக இலகுவாக உணருவீர்கள். அடுத்தகட்ட முன்னுரிமை எதுவென்று முடிவு செய்து அதை நோக்கி புறப்படுங்கள். புதிய விஷயங்களை திட்டமிட வேண்டாம்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - சிவப்பு ஜாஸ்பர்

மீனம்:

கடந்த வாரத்தில் இருந்து ஒவ்வொரு விஷயமும் மந்தமாக நடக்கும். ஆனால், அது தற்காலிகமானது. புதிய சிந்தனைகளை முன்னெடுத்துச் செல்லுங்கள். தவறான தகவல் தொடர்பு காரணமாக குழப்பம் ஏற்படும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஆம்சோனைட்
Published by:Selvi M
First published:

Tags: Oracle Speaks

அடுத்த செய்தி