இன்று உங்களுக்கு ஒரு கொண்டாட்டம் நிறைந்த நாளாக இருக்கும். தேவையற்ற குழப்பங்களை தள்ளி வைக்க வேண்டிய நேரம் இது. தொலைபேசி உரையாடலின் போது எந்த பிரச்சனை வந்தாலும் அதை அமைதியாக சமாளியுங்கள். இன்று உங்களின் சுய பகுப்பாய்வில் அதிக நேரத்தை செலவிடுங்கள்.
உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு மேனெக்வின் பொம்மை
ரிஷபம்
கடந்த காலங்களில் நீங்கள் தேவையற்ற பிரச்சனைகளுக்கு ஆளாகி இருப்பீர்கள். ஆனால், அதில் இருந்து விடுபட்டு நிம்மதியாக இருக்க வேண்டிய காலம் வந்துவிட்டது. இப்போது நீங்கள் கொஞ்சம் நிம்மதியாக உணர ஆரம்பிக்கலாம். சில அதிகாரம் கொண்ட விஷயங்கள் உங்களை கட்டுப்படுத்தப்படுவதாக உணரலாம்.
மேலே இருந்து அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு முன்மாதிரி நபர்
மிதுனம்
திடீர் மாற்றங்கள் உங்களுக்கு வரவிருக்கும் வாரத்தை முற்றிலும் புதுமையானதாக மாற்றும். நீங்கள் ஒரு கலாச்சார நிகழ்வில் கலந்து கொள்ளலாம் மற்றும் செல்வாக்கு மிக்க ஒருவரை சந்திக்கலாம். இந்த அறிமுகம் உங்களுக்கு நன்றாக இருக்கும். பல வாய்ப்புகளையும் ஏற்படுத்த உதவும்.
உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு வெள்ளி சரம்
கடகம்
புதிதாக ஒன்றைத் தொடங்குவதற்கு முன் நீங்கள் கொஞ்சம் பதட்டமாக உணரலாம், ஆனால் உங்களிடம் உள்ள நல்ல ஆற்றல் தெளிவை தரும். ஒரு குறிப்பிட்ட முடிவை எடுப்பதில் உங்கள் மனதில் ஒரு குழப்பம் உள்ளது. எனவே அதை யோசித்து நிதானமாக முடிவெடுங்கள். வாய்ப்புகள் செல்வதற்கு முன் முடிவுகளை எடுங்கள்.
உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு ரோஜா செடி
சிம்மம்
முயற்சிகளை மேற்கொள்வதற்கும் உங்கள் சொந்த நிபந்தனைகளின்படி செல்ல வேண்டிய நாள் இது. வழக்கத்தை விட அதிக நம்பிக்கையுடன் இன்று இருக்கலாம். நீங்கள் முடிக்கும் காரியங்களுக்கு வெகுவிரைவில் வெகுமதிகளைப் பெறலாம். வெற்றிநடை போட வேண்டிய நேரம் வரும்.
உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - சூரிய உதயம்
கன்னி
இன்றைய நாள் மெதுவாகத் தொடங்கலாம், ஆனால் இரண்டாவது பாதியில் பல புது விஷயங்கள் நடக்கும். வேலையின் அழுத்தத்தை நீங்கள் இன்று உணரலாம். அதைத் சரி செய்ய உங்களுக்கு கொஞ்சம் நேரம் ஒதுக்குங்கள். இதனால் மன நிம்மதி கிடைக்கும். மாலை நேரத்தை நண்பர்களுடன் செலவு செய்யுங்கள். மகிழ்ச்சியை உருவாக்க வேண்டிய நேரம் இது.
உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு கட்டிடம்
துலாம்
உங்களின் முதிர்ச்சியான குணத்தால் எல்லா விஷயங்களையும் சிறப்பாக செய்ய முயற்சிப்பீர்கள். உங்களிடமிருந்து சிறப்பான செயல்முறைகள் எதிர்பார்க்கப்படுகிறது, எனவே அதை குறித்து நீங்கள் சிந்திக்க வேண்டும். உங்களின் நெருங்கிய நண்பர் ஒருவர் துன்பத்தில் இருக்கலாம். அவருக்கு இன்று உங்களின் உதவி அவசியம் தேவை.
உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு சிவப்பு பணப்பை
விருச்சிகம்
உங்கள் எண்ணம் உங்களை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல உதவும். ஆனால் நேரமின்மை உங்கள் குடும்ப உறவில் விரக்தியை ஏற்படுத்தலாம். நீங்கள் பொது வர்த்தகத்தில் இருந்தால், ஒரு சிறந்த வாய்ப்பை இன்று எதிர்பார்க்கலாம். வருகின்ற வாய்ப்புகளை சிறப்பாக பயன்படுத்தி கொள்ளுங்கள்.
உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு மரகத கல்
தனுசு
இன்றைய நாள் ஏராளமான வாய்ப்புகளுடன் இருக்கும். மேலும் இன்றைய நாள் சுவாரஸ்யமானதாக இருக்கும். நிலுவையில் உள்ள முடிவுகளை விரைவில் எடுத்து முடிக்க வேண்டும். நண்பர்களுடன் நேரம் செலவிடுவது உங்களுக்கு மன நிம்மதியை தரும். உங்களுக்கு பிடித்ததை இன்று செய்யுங்கள்.
உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு தங்க நிற எம்பிராய்டரி
மகரம்
இன்று ஒரு வழக்கமான நாளாக இருக்கும். இருப்பினும் இதை உற்சாகமான நாளாக மாற்ற உங்களால் முடியும். ஷாப்பிங் செல்வதன் மூலம் நீங்கள் மகிழ்வான நேரத்தை செலவிடலாம். உங்களின் நண்பர்கள் உங்களுக்கு இன்ப அதிர்ச்சியை தருவார்கள். இன்று உங்களின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டிய நாள்.
உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - உப்பு நீர் ஏரி
கும்பம்
நீங்கள் இன்று மிகவும் சோகமாக உணரலாம் மற்றும் உங்களுக்கு பிடித்தவரை மிஸ் செய்யலாம். இது போன்ற மன சோர்வுகளை கலைக்க அந்த நபருடன் தொடர்பு கொள்ள முயற்சிக்க வேண்டும். அப்போது தான் உங்களுக்கு மன அமைதி கிடைக்கும். உங்கள் வாழ்க்கையில் ஒரு புதிய கவனம் ஏற்படும். இன்றைய நாளின் முடிவு உங்களுக்கு சுவாரஸ்யமான மாற வாய்ப்பு வரக்கூடும்.
உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு வண்ணமயமான பை
மீனம்
உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தினால், நீங்கள் காயமடைவீர்களோ என்கிற பயம் உங்களுக்கு உள்ளது, ஆனால் நீங்கள் அவ்வாறு பயம்கொள்ள வேண்டியதில்லை. அது உங்களுக்கு கவலையை தர கூடும். உங்கள் சொந்த நலனுக்காக நீங்கள் எதையும் செய்து மகிழ்ச்சியாக இருங்கள். உங்கள் ரகசியத்தை அறிந்த மிக நெருங்கிய நண்பருடன் மன கஷ்டங்களை தெரியப்படுத்துங்கள்.
உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு நதி
Published by:Selvi M
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.