ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

தெய்வீக வாக்கு: இந்த ராசியினரின் பணிக்கு அங்கீகாரம் கிடைக்கும் நாள் இன்று (2 ஜூன் 2022)

தெய்வீக வாக்கு: இந்த ராசியினரின் பணிக்கு அங்கீகாரம் கிடைக்கும் நாள் இன்று (2 ஜூன் 2022)

தெய்வீக வாக்கு

தெய்வீக வாக்கு

Rasi Palan | மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான தினசரி ராசி பலன் இதோ...

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

மேஷம்:

இன்று செய்ய வேண்டிய வேலைகள் நிறைய இருக்கிறது, எனவே அதற்கு உங்களை தயார்ப்படுத்திக்கொள்ளுங்கள். இன்று உங்கள் ஆற்றல் வேற லெவலுக்கு உயர்த்திருக்கும், இதனால் நீங்கள் பரிசோதனை முயற்சிகளை மேற்கொள்ள தயாராக இருக்கலாம். மனதில் தேவையில்லாத விஷயங்களை குப்பையைப் போல் சேகரித்து வைப்பதை கைவிடுங்கள்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - குவளை

ரிஷபம்:

உங்கள் மனதில் மறைத்து வைத்துள்ள உண்மையான உணர்வுகளை பகிர்ந்து கொள்ள யாராவது கிடைக்க மாட்டார்களா? என எதிர்பார்த்து காத்திருக்கிறீர்கள். உங்களைச் சுற்றி நீங்கள் உருவாக்கிய பாசிட்டிவ் அலைகள் இப்போது பயனுள்ளதாக மாறலாம்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ரோஜாக்கள்

மிதுனம்:

உங்களுக்கு வேலை அல்லது தொழிலை கூட்டாளருடன் பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தால், நழுவவிட்டு விடாதீர்கள். காலை வேளை கொஞ்சம் பிரஷராக இருந்தாலும், மாலை நேரம் இதமானதாக இருக்கும். உங்கள் மனதில் உதித்த ஒரு யோசனை செயல் வடிவம் பெற கொஞ்ச காலம் ஆகலாம்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - பரிசு பெட்டி

கடகம்:

உங்கள் பணிக்கு அங்கீகாரம் கிடைக்கும். இது எதிர்காலத்தில் அதிக வேலை வாய்ப்புகளுக்கு வழிவகுக்கும் அல்லது வணிக யோசனையையும் அதிகரிக்கும். யாருடனாவது தொடர்பு கொள்ள வேண்டியது நிலுவையில் இருந்தால், அதை உடனே முடிக்கவும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - குருவி

சிம்மம்:

உங்களை கவர்ந்த நல்ல ஆசிரியர் அல்லது ரோல் மாடல் போல் நினைத்த நபரை இன்று சந்திப்பீர்கள். நாள் முழுவதும் மனதில் வீட்டு விசேஷம் பற்றிய எண்ணம் ஒரு குதூகலத்தை கொடுக்கும். டைம் மேனேஜ்மெண்ட் என்பது மிகப்பெரிய சவாலாக இருக்கும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - தோட்டம்

கன்னி:

சில நாட்கள் மற்ற நாட்களை விட சவாலாக இருக்கும், அப்படி ஒரு நாளாக இன்றைய தினம் உணர வைக்கும். ஆற்றல் வேகம் சற்று கடினமாக இருக்கும், ஆனால் இந்த நிலை மதியம் சரியாகிவிடும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - செலினைட் படிகம்

துலாம்:

சின்ன விஷயத்திற்கு கூட தேவையற்ற மன அழுத்தத்திற்கு ஆளாக வேண்டாம். ஏனெனில் முக்கியத்துவம் வாய்ந்த சில விஷயங்களுக்கு நீங்கள் யோசித்து முடிவெடிக்க வேண்டியுள்ளது. உங்கள் மனைவி நீங்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய அட்வைஸ் பகிர்ந்து கொள்ள காத்திருக்கலாம்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - கார்பெட்

விருச்சிகம்:

உங்களால் ஈர்க்கப்பட்ட ஒரு நபர், விரைவில் உங்களை சந்திக்க வாய்ப்புள்ளது. வரும் நாட்களில் உங்களின் வேலை மிகவும் பரபரப்பாக இருக்கும். ஒரு தெய்வீக அனுபவம் பல நாட்களுக்கு உங்களை மகிழ்விக்கும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - கடிகாரம்

தனுசு:

உங்களிடம் எட்டிப்பார்க்கும் சோம்பேறித்தனத்தை சரி செய்யாவிட்டால் எதிர்வினைகள் உண்டாகும். முதலில் உங்களை செளகரியமான இடத்தில் இருந்து வெளியே கொண்டு வர முயற்சி செய்யுங்கள். உங்களுடன் பணியாற்றும் ஒருவர் நாளின் கணிசமான நேரத்தை எடுத்துக்கொள்ளலாம்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - நல்ல அச்சு

மகரம்:

இன்றைய நாளை தாமதங்கள் மற்றும் ஒத்திவைப்புகள் ஆளும். நீங்கள் இரண்டு முக்கியமான பணிகளை மீண்டும் திட்டமிட வேண்டியிருக்கலாம். புதிய விதிகளைப் பின்பற்றுவது லாபகரமானதாக தெரியவில்லை.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - சணல் கூடை

கும்பம்:

இன்றைய தினம் ஆரம்பத்தில் மெதுவாக தெரிந்தாலும், பிற்பகலில் இருந்து படிப்படியாக சூடு பிடிக்க தொடங்கும். சில விசேஷ நிகழ்வுகளுக்கு ஒரு இடத்தை முன்பதிவு செய்ய நீங்கள் திட்டமிட்டிருந்தால், இப்போது நேரம் வந்துவிட்டது.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - கண்ணாடி

மீனம்:

ஏக்கம் மற்றும் பழைய சம்பவத்தில் தொடர்புள்ளவர்களை சந்திப்பது உங்களை உணர்ச்சிவசப்படுத்தலாம். விரைவில் நண்பர்களுடன் சாலைப் பயணத்தைத் திட்டமிடுவதற்கான ஐடியா உங்களிடம் உள்ளது. வேலை விஷயத்தில் உள்நாட்டில் தெளிவான தகவல்தொடர்புகளை வைத்திருப்பது நல்லது.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - புகைப்படம்

Published by:Selvi M
First published:

Tags: Astrology, Oracle Speaks