முகப்பு /செய்தி /ஆன்மிகம் / எண் கணித பலன் : இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று (17 செப்டம்பர் 2022) கால்நடைகளுக்கு தண்ணீர் தானம் செய்யுங்கள்!

எண் கணித பலன் : இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று (17 செப்டம்பர் 2022) கால்நடைகளுக்கு தண்ணீர் தானம் செய்யுங்கள்!

எண்கணித பலன்கள்

எண்கணித பலன்கள்

செப்டம்பர் 17-ஆம் தேதியான இன்று, உங்கள் பிறந்த தேதி சார்ந்த எண் கணிதப் பலன்கள் என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்.

  • News18 Tamil
  • 3-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

# எண் 1: (நீங்கள் 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்று தன்னம்பிக்கை நிறைந்த நாளாக இருக்கும். இன்று உங்களது பெரும்பாலான பிரச்சனைகள் கிட்டத்தட்ட முடிவை நோக்கிச் செல்லும். வாழ்க்கையில் புதிய ஒரு தொடக்கம் விரைவில் தொடங்கலாம். இன்று புதிய இடம், பதவி, நண்பர் அல்லது வணிகத்தில் புதிய முதலீடு, புதிய வேலை, புதிய வீடு ஆகியவை கிடைக்க பெறலாம். சொத்து சம்பந்தமான விஷயங்களில் தாமதம் ஏற்பட கூடும். மன ஆரோக்கியத்தை நல்ல முறையில் வைத்திருக்க வேண்டியது அவசியம். இன்று தாமதமாக வேலைகள் நடக்கும் என்பதை நினைவில் கொண்டு திறனுடன் செயல்படுங்கள். மருத்துவ பயிற்சியாளர்களுக்கு இன்று சிறப்பு சலுகை கிடைக்கலாம். விவசாயம் மற்றும் கல்வித் தொழில் லாபத்தில் நடக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: அக்வா

அதிர்ஷ்ட நாள்: புதன்

அதிர்ஷ்ட எண்: 9

தானம்: ஆசிரமத்தில் கோதுமையை தானம் செய்யுங்கள்

# எண் 2: (நீங்கள் 2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

காலையில் நன்றாக குளித்து விட்டு உங்களின் நாளை தொடங்குங்கள். உங்கள் கடின உழைப்பும் நேர்மையும் தான் இன்றைய வெற்றிக்கு காரணம். உங்கள் அப்பாவித்தனத்தை மற்றவர்கள் தவறாகப் பயன்படுத்த முயற்சிப்பதால், உங்களின் அறிவை பயன்படுத்தி திறன்பட செயல்பட வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஏற்றுமதி இறக்குமதி, மருத்துவர்கள், பொறியாளர்கள், தரகர்கள், டிராவல் ஏஜென்சிகள், பங்குச் சந்தை மற்றும் கூட்டாண்மை நிறுவனங்கள் இன்று வெற்றியை காணுவார்கள். விசுவாசமின்மை காரணமாக நண்பர்களால் உங்களுக்கு மனச்சோர்வு அல்லது உணர்ச்சிவசப்பட வாய்ப்புள்ளது. எனவே எதையும் நிதானமாக செய்து பழகுங்கள். உங்களின் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். இல்லையேல் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

அதிர்ஷ்ட நாள்: திங்கள்

அதிர்ஷ்ட எண்: 6

தானம்: கால்நடைகளுக்கு தண்ணீர் தானம் செய்யுங்கள்

# எண் 3: ( நீங்கள் 3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்)

ஆக்கப்பூர்வமான எண்ணங்கள் மற்றும் மாயாஜால பேச்சு உங்கள் முதலாளியை வேலையிலும், குடும்பத்தினரையும் வீட்டில் ஈர்க்க செய்யும். எல்லா சூழ்நிலைகளிலும் வேலை செய்யும் அளவுக்கு நீங்கள் நெகிழ்வாக இருப்பீர்கள், அதனால் வெற்றி உங்களை தேடி வரும். பணத்தைக் கையாள்வதில் கவனமாக இருக்க வேண்டும். படைப்பாற்றல் மிக்கவர்களும், பொதுப் பிரமுகர்களும் இன்று அதிக புகழைப் பெறுவார்கள். விளையாட்டுப் பயிற்சியாளர்கள் வெற்றியையும் பண வெகுமதியையும் பெற வாய்ப்புண்டு. கட்டுமானம் மற்றும் விவசாயத்தில் முதலீடு செய்வதற்கு இன்று சிறந்த நாள். காலையில் சந்தனத்தை நெற்றியில் அணிந்து செல்வது பல நன்மைகளை தரும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் நீலம்

அதிர்ஷ்ட நாள்: வியாழன்

அதிர்ஷ்ட எண்: 3 மற்றும் 9

தானம்: சூரியகாந்தி எண்ணெயை ஏழைகளுக்கு தானம் செய்யுங்கள்

# எண் 4: (நீங்கள் 4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

உயர் பதவியில் இருப்பவர்கள் மேலும் மேலும் உயர இன்று வாய்ப்புண்டு. உங்கள் பண விஷயங்களில் யாருடனும் திட்டங்களைப் பகிர வேண்டாம். மாணவர்கள் அரசு வேலைக்குச் இன்று விண்ணப்பிக்க வேண்டும். பச்சை இலைக் காய்கறிகளை தானம் செய்வது உங்களுக்கான அதிர்ஷ்டத்தை அதிகரிக்க உதவும். விளையாட்டு வீரர்களுக்கு இன்று பல வாய்ப்புகள் வந்து சேரும். மேலும் செயல்திறனுக்காகவும் பாராட்டுகளை பெறுவீர்கள். குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் இன்று உங்களின் நேரத்தைச் செலவிட முடியாத அளவுக்கு நீங்கள் பரபரப்பாக இருப்பீர்கள், எனவே அவர்களின் குறைகளை அமைதியாகக் கேளுங்கள். தொண்டு செய்வது இன்று நல்ல பலனை தரும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம் மற்றும் சாம்பல்

அதிர்ஷ்ட நாள்: செவ்வாய்

அதிர்ஷ்ட எண்: 9

தானம்: பிச்சைக்காரர்களுக்கு காலணிகளை தானம் செய்யுங்கள்

# எண் 5: (நீங்கள் 5, 14 , 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

அலுவலக மேஜையில் ஒரு படிக தாமரையை வைத்து கொள்வது நல்லது. முந்தைய தடைகளை குறைக்க அதிர்ஷ்டம் இன்று உங்களுக்கு முக்கிய பங்கு வகிக்கும். இயந்திரங்கள் வாங்க, சொத்துக்களை விற்க, உத்தியோகபூர்வ ஆவணங்களில் கையொப்பமிட மற்றும் பயணத்திற்கு செல்ல இன்று சிறந்த நாள். செய்தி அறிவிப்பாளர்கள், நடிகர்கள், கைவினை கலைஞர்கள், பொறியாளர்கள் ஆகியோர்களுக்கு அதிக பாராட்டுக்கள் கிடைக்கும். இன்று உங்கள் எதிரிகளால் சில பிரச்சனைகள் ஏற்படலாம். எனவே ஜாக்கிரதையாக இருப்பது அவசியம். எப்போதும் உங்கள் திறமையின் மீது நம்பிக்கை வைத்து செயல்பட்டால் வெற்றி நிச்சயம்.

அதிர்ஷ்ட நிறம்: டீல்

அதிர்ஷ்ட நாள்: புதன்

அதிர்ஷ்ட எண்: 5

தானம்: அனாதை இல்லத்தில் உள்ள குழந்தைகளுக்கு பச்சை பழங்களை தானம் செய்யுங்கள்

# எண் 6: (நீங்கள் 6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்)

இன்று மதிய உணவிற்குப் பிறகு உங்களுக்கு பல மகிழ்ச்சியான முடிவுகள் வந்து சேரும். இன்று உங்கள் செயலுக்கு நேரம் துணைபுரிவதால், உங்கள் கனவுகளை நிறைவேற்ற தயாராக இருங்கள். இந்த நாளில் நீங்கள் அனைத்து வகையான பிரச்சனைகளும் தீரும். இன்று ஏராளமான பாராட்டுக்கள் உங்களை தேடி வரும். குடும்ப பாசமும் ஆதரவும் உங்களுக்கு எப்போதும் செழிப்பை தரும். இன்றைய நாள் ஆடம்பரமானதாக இருக்கும். வடிவமைப்பாளர்கள், வழக்கறிஞர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், அரசியல்வாதிகள் மற்றும் நடிகர்கள் பெருமையாக உணர்வீர்கள். இன்று முழுக்க நம்பிக்கை நிறைந்த நாளாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: ஸ்கை ப்ளூ

அதிர்ஷ்ட நாள்: வெள்ளிக்கிழமை

அதிர்ஷ்ட எண்: 6 மற்றும் 9

தானம்: ஏழைகளுக்கு தயிர் சாதம் கொடுங்கள்

# எண் 7:(நீங்கள் 7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

தொழில்முறை வளர்ச்சியும் வெற்றியும் அதிக பண வரவை கொடுக்கும். முன்னதாக நீங்கள் பெற்ற நம்பிக்கை துரோகம் உங்கள் இதயத்தை மேலும் கடினமாக்கும். விரைவில் அதிலிருந்து வெளிவர முயற்சி செய்ய வேண்டும். உறவுகள், செயல்திறன் மற்றும் பண வளர்ச்சியை அனுபவிக்கும் நேரம் விரைவில் வருகிறது. இன்று வியாபாரத்தில் உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் ஜாக்கிரதையாக இருக்கவும், மேலும் சச்சரவுகளைத் தவிர்க்க போட்டியாளர்களிடமிருந்து விலகி இருக்க வேண்டும். உங்களின் மனைவியின் மூலம் உங்களுக்கான அதிர்ஷ்டத்தை அதிகரிக்க கூடும். கடவுளின் ஆசீர்வாதத்தைப் பெற சிவன் கோவிலுக்கு சென்று வரலாம்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

அதிர்ஷ்ட நாள்: திங்கள்

அதிர்ஷ்ட எண்: 6

தானம்: அனாதை இல்லத்திற்கு பாலை தானம் செய்யுங்கள்

# எண் 8: ( நீங்கள் 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

முதியோர் இல்லங்களில் மக்களுக்குச் சேவை செய்யுங்கள். இது பல வழிகள் உங்களுக்கு நன்மைகளை கொண்டு வந்து சேர்க்கும். நேர்மறையான எண்ணங்களை கொண்டு உங்களது நாளை தொடங்க வேண்டியது அவசியம். சுற்றியுள்ள அனைவரும் உங்களை விசுவாசமாக பின்பற்றுபவர்கள் என்பதால் தலைமைத்துவத்தை உணர வேண்டிய நேரம் இது. எப்போதும் நிதானமாக இருந்து செயல்களை செய்வது பலன்களை தரும். வரவு செலவு கணக்குகளை சரியான முறையில் கவனித்து குடும்பத்துடன் நேரத்தை செலவிட வேண்டும். தயவு செய்து இன்று உங்களுக்காக சிறிது நேரம் செலவிடுங்கள்

அதிர்ஷ்ட நிறம்: ஊதா

அதிர்ஷ்ட நாள்: வெள்ளிக்கிழமை

அதிர்ஷ்ட எண்: 6

தானம்: ஏழைகளுக்கு குடையை தானம் செய்யுங்கள்

# எண் 9: (நீங்கள் 9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

அதிர்ஷ்டத்தின் சக்கரம் இன்று உங்களை நோக்கி நேர்மறையான திருப்பத்துடன் காத்திருக்கிறது. மருத்துவர்கள், அறுவை சிகிச்சை நிபுணர்கள், அரசியல்வாதிகள் மற்றும் விளையாட்டு வீரர்கள் பல வெகுமதிகளையும் அங்கீகாரத்தையும் இன்று பெற கூடிய நாள். மேலும் இன்று புகழ், ஆற்றல் மற்றும் உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கும். உங்கள் நண்பர்களுடன் நேரம் செலவிடுவதால் பல நன்மைகள் கிடைக்கும். உங்கள் இலக்கை நோக்கி ஒரு திசையில் செல்ல மனவுறுதியை பயன்படுத்தவும். இன்று நிதி ஆதாயம் மற்றும் சொத்து பதிவுகள் சுமூகமாக நடக்கும். நம்பிக்கையுடனும் செழுமையுடனும் உங்கள் உறவுகள் மலரும்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

அதிர்ஷ்ட நாள்: செவ்வாய்

அதிர்ஷ்ட எண்: 9

தானம்: சிவப்பு கைக்குட்டையை தானம் செய்யுங்கள்

செப்டம்பர் 17 ஆம் தேதி பிறந்த பிரபலங்கள்: நரேந்திர மோடி, ரவிச்சந்திரன் அஸ்வின், டி சுப்பராமி ரெட்டி, பெரியார் ஈ வி ராமசுவாமி, எம் எஃப் ஹுசைன்

First published:

Tags: Astrology, Rasi Palan