Home /News /spiritual /

தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு இன்று (16 ஜூன் 2022) புதிய வாய்ப்புகள் தேடிவரும்..!

தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு இன்று (16 ஜூன் 2022) புதிய வாய்ப்புகள் தேடிவரும்..!

Deiviga Vaakku

Deiviga Vaakku

Rasi Palan | மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான தினசரி ராசி பலன் இதோ...

மேஷம்:

நீங்கள் செய்ய போகிற புதிய விஷயம் குறித்து உங்களுக்கு சந்தேகம் இருக்கலாம். அது அனைத்தும் சரியான திசையில் செல்கிறது. அதை பற்றி பெரிதாக கவலை வேண்டாம். உங்களுடன் யாராவது ஒரு ரகசியத்தைப் பகிர்ந்து கொண்டால், அதை நீங்கள் இரகசியமாக வைத்து கொள்ளுங்கள். உங்கள் மனதை தெளிவுபடுத்த இன்று ஓய்வு எடுக்க வேண்டியது அவசியம்.

உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு கண்ணாடி டம்ளர்

ரிஷபம்:

கடந்த காலங்களில் கூறப்பட்ட சில கடுமையான குற்றச்சாட்டுகள் உங்களை பாதிக்கலாம். இருப்பினும் தைரியமாக இருங்கள். உங்கள் மீது நம்பிக்கை வைத்து செயல்பட வேண்டிய நேரம் இது. மேலும் செய்கின்ற செயல்களில் இன்று கவனம் தேவை.

உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் -மஞ்சள்

மிதுனம்:

சில சமயங்களில் உங்கள் உறவில் உள்ள அதிக எதிர்பார்ப்புகள் உங்களை காயப்படுத்தலாம். அது உங்களுக்கு சாதகமாக அமையவில்லை என்றால் அதை விட்டு விடுங்கள். இன்று நீங்கள் புதிதாக ஒன்றைக் கற்றுக்கொள்வதன் மூலம் மகிழ்ச்சியாக இருக்கலாம். சில குறுக்கீடுகள் சிக்கல்களை உருவாக்க காரணமாக இருக்கலாம்.

உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - மூலிகை

கடகம்:

நிலுவையில் உள்ள வீட்டு விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டிய நாள். வரவிருக்கும் வாய்ப்புகள் உங்களை நன்றாக மேம்படுத்தலாம். எனவே, அதிக உழைப்பை போடுங்கள். சில சமீபத்திய நண்பர்கள் உங்கள் மன உறுதியை உயர்வாக மதிப்பார்கள். அவர்களுடன் பழகுங்கள்.

உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - மணல் காகிதம்

சிம்மம்:

உங்களை நேசிப்பவரின் உணர்ச்சிகரமான செயல்கள் உங்களை ஆச்சரியப்படுத்தலாம். நிலுவையில் உள்ள வேலைகளை செய்து முடிப்பதற்கு ஏற்ற நாள். உங்களுக்கு நன்றாக தெரிந்த ஒருவர் புதிய வாய்ப்புகளை இன்று உங்களுக்கு வழங்கலாம். அதை கருத்தில் கொண்டு வேலைகளை பாருங்கள். உங்கள் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்வது மிக அவசியம்.

உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - அணில்

கன்னி:

சில விஷயங்களால் உங்களின் முதன்மையான வேலைகள் அடிபடும். பழைய பழக்கங்கள் சில உங்களை மாற்றி அமைக்கலாம். உங்களின் நாளை சிறப்பாக நடத்திட அதிக ஆர்வம் உள்ள செயல்களை செய்ய தொடங்குங்கள். மேலும் உங்களுக்கு பிடித்த விஷயங்களில் நேரம் செலவிடலாம்.

உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - கருப்பு படிகம்

துலாம்:

நீண்ட நாட்களாக நீங்கள் சந்திக்காத உங்கள் குடும்ப நபர்களை இன்று சந்திக்க வேண்டிய சிறந்த நாள். கடந்த கால நினைவுகளுடன் நேரத்தை செலவிடலாம். இன்றைய நாள் முழுக்க நீங்கள் பிஸியாக இருப்பீர்கள். எனவே சிறிது இடைவேளை எடுத்து கொண்டு ஓய்வெடுப்பது நல்லது.

உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ட்ரீம் கேட்சர்

விருச்சிகம்:

உங்கள் தனிப்பட்ட வேலைகளை முடிக்க இது ஒரு சக்திவாய்ந்த நாள். நீங்கள் இப்போது முடிவெடுக்கும் விஷயங்கள் நீண்ட காலத்திற்கு பலனைத் தரும். உங்கள் பணியிடத்தில் ஒரு புதிய செயல்முறையை நீங்கள் அறிமுகப்படுத்தலாம். சிலருக்கு இது பொருந்தாமலும் போகலாம். சிந்தித்து செயல்பட வேண்டிய நேரம் இது.

உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - தெளிவான வானம்

தனுசு:

பழைய குறிப்புகள், புகைப்படங்கள் அல்லது தொலைபேசி அழைப்புகள் மூலம் நினைவலைகளை தூண்டக் கூடிய நாள். சில சமயங்களில் நீங்கள் மன ரீதியாகவோ அல்லது உணர்ச்சி ரீதியாகவோ சோர்வடையலாம். ஒரு நல்ல சுற்றுலா உங்கள் மனதை சாந்தமாக்க உதவும்.

உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு புதிய பழக்கம்

மகரம்:

ஷாப்பிங் அல்லது வெளியே சாப்பிடுவதன் மூலம் சில பிரச்னைகள் உருவாகலாம். குடும்ப விஷயங்களுக்காக ஒரு சிறிய பயணம் மேற்கொள்ளுங்கள். சிறிதளவு உயர்ந்தாலும் குறைந்தாலும் பணப்புழக்கம் சீராக இருக்கும். நிதானமாக உங்கள் செயல்களை செய்ய தொடங்குங்கள்.

உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஸ்டெப்பர்

கும்பம்:

உங்கள் தற்போதைய இலக்கை பொறுப்புடன் முன்னெடுத்துச் செல்ல தயாராகுங்கள். ஒரு சில உணர்ச்சிகரமான தருணங்கள் உங்கள் ஆற்றலைக் குறைக்கலாம். இருப்பினும் நீங்கள் அவற்றையெல்லாம் தாண்டி முன்னேறி வ்ருவீர்கள்.உங்கள் நண்பர்களுடன் அடுத்த இலக்கு குறித்து பேச செய்யலாம்.

உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - காபி கப்

மீனம்:

சில நெருக்கடிகள் உங்களின் ஒட்டுமொத்த செயல்களை சிக்கலானதாக மாற்றும். நீங்கள் செய்கின்ற விஷயங்கள் மீது சிலர் எப்போதும் ஒரு கண் வைத்து கொண்டே இருப்பார்கள். உங்களின் வாழ்க்கை துணை குறித்து சில எண்ணங்களை உருவாக்க தொடங்குவீர்கள். நிம்மதியாக பயணம் கொள்ள வேண்டிய நேரம் இது.

உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - இறகு
Published by:Selvi M
First published:

Tags: Oracle Speaks

அடுத்த செய்தி