Home /News /spiritual /

தெய்வீக வாக்கு: இந்த ராசியினர் இன்று (13 ஜூன் 2022) தங்கள் முயற்சிகளை அதிகப்படுத்த வேண்டிய நாள்..!

தெய்வீக வாக்கு: இந்த ராசியினர் இன்று (13 ஜூன் 2022) தங்கள் முயற்சிகளை அதிகப்படுத்த வேண்டிய நாள்..!

Deiviga Vaakku

Deiviga Vaakku

Rasi Palan | மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான தினசரி ராசி பலன் இதோ...

மேஷம்: உங்கள் வாழ்க்கையில் இன்று அதிக வேகத்துடன் செயல்படுவீர்கள். இருப்பினும் சில விஷயங்களை கவனமாக செய்ய வேண்டியது அவசியம். உங்கள் திட்டத்தில் யாரோ ஒருவர் திடீரென ஆர்வம் காட்டலாம். இன்னொரு வழியில் சம்பாதிக்க கூடிய வாய்ப்பு உங்களை தேடி வரும்.

உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - விண்மீன்

ரிஷபம்: உங்கள் ஆர்வத்திற்கு முக்கிய காரணம் நீங்கள் நினைக்கிற சில விஷயங்கள் அல்ல. உங்களின் கனவுகள் தான் அவற்றிற்கு முக்கிய காரணமாக இருக்கும். உங்கள் கனவுகளை நோக்கி செல்லுங்கள். நீங்கள் ஒரு பழக்கத்திலிருந்து விடுபட முயற்சிக்கிறீர்கள் என்றால், அதில் உங்களுக்கு வெற்றி கிடைக்கும்.

உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம்- தொப்பி

மிதுனம்: யாரோ ஒருவர் உங்களை உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருக்கலாம். உங்கள் புத்திசாலித்தனம் மற்றும் தந்திரங்களால் நீங்கள் அதை சமாளிக்க முடியும். உங்களின் தனிப்பட்ட பிரச்சனைகளை வேலையில் இருப்பவர்களுடன் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது நல்லது.

உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - வெதுவெதுப்பான நீர்

கடகம்: உங்களது திட்டமானது, மாஸ்டர் பிளானாக இருந்திருந்தால் இந்நேரம் பலன் அதிகம் கிடைத்திருக்கும். உங்களின் உத்தியை மாற்ற இது ஒரு நல்ல நேரம். உங்களின் புதிய யோசனை அலுவலகத்தில் உள்ளவர்களை ஈர்க்கும். வாழ்க்கையில் சில பிரச்சனைகள் வரலாம். ஆனால் அவை தற்காலிகமான ஒன்றாக இருக்கலாம்.

உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - புதிய ஷூ

சிம்மம்: கடந்த காலத்தைச் சேர்ந்த ஒருவர் இப்போது உங்கள் வாழ்வில் நுழையலாம். உங்கள் முடிவில் எப்போதும் தீர்க்கமாக இருங்கள். இன்று நீங்கள் தனிமையாக உணரலாம். உங்களை மகிழ்ச்சியாக வைத்து கொள்ளும் செயல்களில் ஈடுபடுங்கள்.

உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - வைர மோதிரம்

கன்னி: இன்று ஓய்வுக்கான நாளாக அமையும். அது பயணம் செய்யும் இடத்திலோ அல்லது வழியில் இருக்கும் இடத்திலோ ஏற்படலாம். உங்கள் பணியிடத்தில் உள்ள ஒருவர் உங்களைத் தொடர்பு கொள்ள ஆசைப்படலாம். ஒரு எளிய அணுகுமுறை பெரிய தாக்கத்தை உருவாக்கலாம்.

உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - கிரகணம்

துலாம்: உங்கள் வீட்டில் யாராவது புறக்கணிக்கப்பட்டதாக உணரலாம். பழைய புகைப்படம் அல்லது நினைவுகள் மறைக்கப்பட்ட உணர்ச்சியை மீண்டும் தூண்டலாம். உங்கள் யோசனைகள் தனித்துவமானது, அவற்றை வெளிப்படுத்த உங்களுக்கும் இன்று வாய்ப்பு கிடைக்கும். எனவே உங்களுக்கான உரையாடல்களைத் தொடங்கவும்.

உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஹெட்ஃபோன்

விருச்சிகம்: உங்கள் குரல் விரைவில் வெளிப்படும். நீங்கள் ஏற்கனவே திட்டமிட்ட விஷயங்களை இப்போது மீண்டும் மறுபரிசீலனை செய்ய வேண்டியது அவசியம். வெளியூர் பயணங்கள் புதிய புரிதலை ஏற்படுத்தலாம். உங்களுக்கான வழக்கத்தைத் தொடர்ந்து செய்யுங்கள்.
.
உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - டெரகோட்டா பேசின்

தனுசு: இன்று உங்கள் முயற்சிகளை அதிகப்படுத்த வேண்டிய நாள். உங்களின் வீட்டு பிரச்சனைகள் தொடர்பாக ஒரு புதிய நம்பிக்கைக் முளைக்கும். ஒரு இளைஞனின் உத்தி இன்று உங்கள் இலக்குகளை அடைய ஊக்குவிக்கும். எனவே நம்பிக்கையுடன் இன்றைய நாளை தொடங்குங்கள்.

உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - சிலிக்கான் தட்டு

மகரம்: யாரோ ஒருவர் பொறாமைப்பட்டு உங்களுடன் அன்பாக இருக்கலாம். நீங்கள் கவனமாக இருக்க வேண்டிய நேரம் இது. ஒப்பீட்டளவில் புதிய பழக்கங்கள் பல நன்மைகளை உருவாக்க ஆரம்பிக்கலாம். இன்று சில விஷயங்களில் நீங்கள் நெகிழ்வாக இருக்க வேண்டும். அப்போது தான் நினைத்ததை சாதிக்க முடியும்.

உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - மெழுகுவர்த்தி

கும்பம்: சட்ட விஷயங்களில் சிறிது ஓய்வு தேவை. வேலையில் உங்களுக்குக் கீழ் பணிபுரிபவர் உங்கள் ஆளுமையைப் புகழலாம். நீங்கள் எந்த முக்கிய முடிவையும் அறிவிக்க வேண்டும் என்றால், அதை இப்போதைக்கு நிறுத்தி வைக்க வேண்டும். சில நல்லவர்களிடம் இருந்து உங்களுக்கு உதவி கிடைக்கும்.

உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - மிட்டாய்

மீனம்: உங்களைச் சுற்றியுள்ள நிகழ்வுகளில் உள்ள தனித்துவமான ஒன்று உங்கள் கவனத்தை ஈர்க்கும். இன்று, உங்கள் இலக்கை நெருங்கிவிட்டதாக நீங்கள் உணரலாம், ஆனால் இன்னும் அதற்கான நேரம் இருக்கிறது. நீங்கள் நினைக்காதபோது ஒரு வாய்ப்பு, உங்கள் கதவைத் தட்டும்.

உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - மஞ்சள் படிகம்
Published by:Selvi M
First published:

Tags: Oracle Speaks

அடுத்த செய்தி