Home /News /spiritual /

தெய்வீக வாக்கு: மருத்துவ துறையில் உள்ள இந்த ராசியினருக்கு இன்று (01 ஜூலை 2022) சாதகமான நாளாக அமையும்..!

தெய்வீக வாக்கு: மருத்துவ துறையில் உள்ள இந்த ராசியினருக்கு இன்று (01 ஜூலை 2022) சாதகமான நாளாக அமையும்..!

Deiviga Vaakku

Deiviga Vaakku

Rasi Palan | மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான தினசரி ராசி பலன் இதோ...

மேஷம்:

பாராட்டுக்கள் மற்றும் வெகுமதிகள் இன்று உங்கள் வழியில் வரலாம். உங்கள் ஆற்றல் இன்று மிகவும் நேர்மறையாக இருக்கலாம். இன்று நேரத்தை சிறப்பாக நிர்வகிக்க முயற்சிக்கவும். பணியிடத்தில் நல்லிணக்கத்தை உருவாக்குங்கள்.

உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு சிவப்பு ரோஜா இதழ்

ரிஷபம்:

உங்கள் மனைவியிடமிருந்து நிபந்தனையற்ற ஆதரவை பெறுவீர்கள். இன்று உங்களுக்கு சிறுசிறு உடல்நலப் பிரச்சினைகள் வரலாம். வேலையில் ஏற்படும் குழப்பத்திலிருந்து விலகி இருக்க முயற்சி செய்யுங்கள். வங்கி வேலை மற்றும் புதிய முதலீடுகளில் கவனமாக இருங்கள்.

உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு இலவங்கப்பட்டை

மிதுனம்:

உங்கள் எல்லா கவலைகளையும் மறந்து விடுங்கள் ஏனென்றால் இன்று உங்களுக்கு வெற்றிக்கான நாள். நெருங்கிய நண்பர் கூட உங்களை பார்த்து பொறாமைப்படலாம். வெளியே சாப்பிடும் உணவுகளில் கொஞ்சம் கவனம் தேவை.

உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - காய்ந்த மிளகு

கடகம்:

உங்கள் கருத்துக்களை முன் வைக்கும் வாய்ப்பு இன்று கிடைக்கும். வெளிநாட்டில் இருக்கும் ஒரு நபர் உங்கள் முயற்சியை அங்கீகரித்து பாராட்டலாம். ஒருவருக்கு சர்ப்ரைஸ் கொடுக்க நீங்கள் இன்று திட்டமிட்டால் அது சரியாக வொர்கவுட் ஆகும்.

உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு ஸ்பின்னிங் டிஸ்க்

சிம்மம்:

இன்று உங்களுக்கு வேலை குறைவாக இருக்கும், ஆனால் ஏற்கனவே நிலுவையில் உள்ள வேலைகளை முடிக்க நேரம் ஒதுக்க வேண்டியிருக்கும். நீங்கள் ஓய்வெடுக்க இன்று ஒரு சிறந்த நாள் என்பதை கருத்தில் கொண்டு வேலைகளை திட்டமிட்டு முடித்து கொள்ளுங்கள்.

உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு தங்கக் குடுவை

கன்னி:

இன்று உங்களுக்கு ஒரு பரபரப்பான நாளாக இருக்கலாம். உங்கள் வாழ்க்கைத் துணை வீட்டில் விஷயங்களை நிர்வகிப்பதில் உங்களுக்கு உதவியாக இருக்கலாம். பரபரப்புகளுக்கிடையில் சில நேர்மறை விஷயங்கள் உங்களை உற்சாகமாக வைத்திருக்கலாம்.

உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு நியான் சைன்

துலாம்:

இன்று உங்கள் திட்டங்கள் நிறைவேறவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம், விரைவில் நீங்கள் வெற்றி காண்பீர்கள். இன்று உங்களை சந்திக்க வருவார் என நீங்கள் எதிர்ப்பார்த்து காத்திருக்கும் முன்னாள் வாழ்க்கை அல்லது காதல் துணை திரும்பி வர வாய்ப்பில்லை.

உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - மஞ்சள் நிற மாணிக்கம்

விருச்சிகம்:

தன்னலமற்ற மற்றும் ஒருவருக்கு உதவும் செயலை இன்று செய்தாலும் கூட நீங்கள் அமைதியாக இருப்பீர்கள். சிறிய வாதங்களை கண்டுகொள்ளாமல் அப்படியே விட்டுவிடுங்கள். மாணவர்களுக்கு இன்று கற்றல் அனுபவம் சிறப்பாக இருக்கலாம்.

உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு மைல்கல்

தனுசு:

உங்களை சுற்றியுள்ளவர்கள் உங்களை இன்று தெளிவாகப் புரிந்து கொள்ளத் தொடங்குவார்கள். உங்களது எளிமையான அணுகுமுறை இன்று பயனுள்ளதாக இருக்கும். மருத்துவர்கள் மற்றும் மருந்து துறையில் இருப்போருக்கு இன்று நல்ல நாள்.

உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - மின்னும் காலணிகள்

மகரம்:

உங்கள் உள்ளுணர்வு முக்கியமான ஒன்றை நோக்கி உங்களை இன்று வழிநடத்த கூடும். எனவே உங்கள் உள்ளுணர்வு சொல்வதில் கவனம் செலுத்துங்கள். நீண்ட நாளுக்கு பிறகு நெருங்கிய ஒரு நண்பர் உங்களை மொபைலில் அழைத்து உங்களுடன் பேசி மகிழலாம்.

உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு யூகலிப்டஸ் மரம்

கும்பம்:

ஒரு தவறான கருத்து எதிர்காலத்தில் தவறான புரிதலுக்கு வழிவகுக்கும். உங்களால் முடிந்தவரை விஷயங்களைத் தெளிவுபடுத்துங்கள். பிற்பகலில் நீங்கள் எரிச்சலடைய கூடிய சூழல் ஏற்படலாம். உங்கள் சீனியருக்கு உங்களின் உதவி தேவைப்படலாம்.

உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - கிரே கலர் பெயிண்ட் அல்லது கோட்டிங்

மீனம்:

இன்று நீங்கள் குடும்பத்துடன் வெளியூர் செல்வதற்கான திட்டம் இருக்கலாம். உங்கள் பெற்றோர் ஒரு பயண திட்டத்தை உருவாக்கலாம். உங்கள் மீதான தவறான புரிதல் யாருக்கேனும் இருந்தால் அது இன்று விலகும்.

உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு நீல நிற பை
Published by:Selvi M
First published:

Tags: Oracle Speaks

அடுத்த செய்தி