Home /News /spiritual /

எண் கணித பலன்கள் : இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று (26 ஜூலை 2022) புகழை பெறுவார்கள்

எண் கணித பலன்கள் : இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று (26 ஜூலை 2022) புகழை பெறுவார்கள்

எண் கணித பலன்

எண் கணித பலன்

Numerology | ஜூலை 26-ஆம் தேதியான இன்று, உங்கள் பிறந்த தேதி சார்ந்த எண் கணிதப் பலன்கள் என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்.

    #எண் 1 (நீங்கள் 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

    இன்று கடின உழைப்பும் பொறுமையும் உங்களுக்கு தேவை. தாய் மற்றும் ஆசிரியர்களின் ஆசி உங்களுக்கு மன அமைதியை தரும். மற்றவர்கள் வெற்றியால் உங்கள் செயல்திறன் தடைபடும். வியாபாரத்தில் புதிய முதலீடு, புதிய வேலை, புதிய வீடு போன்றவற்றை விரும்பினால் மூத்த குடும்ப உறுப்பினர்களின் ஆதரவை வழிகாட்டியாக பெறுங்கள். விவசாயம் மற்றும் கல்வித் தொழிலில் இன்று லாபம் கிடைக்கும்.

    அதிர்ஷ்ட நிறம் - நீலம் மற்றும் ஆரஞ்சு

    அதிர்ஷ்டமான நாள் - ஞாயிறு

    அதிர்ஷ்ட எண் - 3

    தானம் - ஏழைகளுக்கு மஞ்சள் பருப்புகளை தானம் செய்யுங்கள்

    #எண் 2 (நீங்கள் 2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

    உங்கள் கண்ணீர் அல்லது சோகத்தை யாரிடம் சொல்ல வேண்டும், சொல்ல கூடாது என்பதை புரிந்து நடந்து கொள்ளுங்கள். உங்கள் அர்ப்பணிப்பும் நேர்மையும் தான் வெற்றிக்கு காரணம். உங்கள் அப்பாவித்தனத்தை பயன்படுத்த சிலர் முயற்சிப்பார்கள் என்பதால் கவனமாக இருங்கள். ஆசிரியர்கள், ஏற்றுமதி இறக்குமதி, மருத்துவர்கள், பொறியாளர்கள், தரகர்கள், டிராவல் ஏஜென்சிகள், பங்குச் சந்தையில் உள்ளோர் இன்று வெற்றியை கொண்டாடலாம்.

    அதிர்ஷ்ட நிறம் - ஸ்கை ப்ளூ மற்றும் பீஜ்

    அதிர்ஷ்டமான நாள் - திங்கள்

    அதிர்ஷ்ட எண் - 2

    தானம் - கால்நடைகளுக்கு தேவையான உணவுகளை வழங்குங்கள்

    #எண் 3 (நீங்கள் 3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

    உங்கள் திறன்களை அதிகபட்சமாகப் பயன்படுத்தி சுற்றத்தாரை ஈர்த்து, தலைவனாக மாறுவீர்கள். காதல் உறவுகளில் இருப்பவர்களுக்கு இன்று தனித்துவமான நாள். உடமைகளைக் கையாள்வதில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். வடிவமைப்பாளர்கள், எழுத்தாளர்கள், நடிகர்கள் மற்றும் இசைக்கலைஞர்கள் மற்றும் ஊக்கமளிக்கும் பேச்சாளர்கள் போன்ற ஆக்கப்பூர்வமான நபர்கள் இன்று பெயரையும் புகழையும் பெறுவார்கள்.

    அதிர்ஷ்ட நிறம் - ஆரஞ்சு மற்றும் பிரவுன்

    அதிர்ஷ்டமான நாள் - வியாழன்

    அதிர்ஷ்ட எண் - 3 மற்றும் 9

    தானம் - கோவிலில் மரப் பொருளை தானம் செய்யுங்கள்

    #எண் 4 (நீங்கள் 4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

    இன்று நீங்கள் கோவிலுக்கு சென்று ஏழைகள் மற்றும் விலங்குகளுக்கு சேவை செய்ய வேண்டும். இன்று நீங்கள் நிறைய பணம் சம்பாதிப்பீர்கள். உற்பத்தியாளர் மற்றும் மருத்துவரின் நிதி ஆதாயங்கள் அதிகமாக உள்ளன. உங்களது செயல்திறனுக்காக நீங்கள் பாராட்டப்படுவீர்கள். இன்று அசைவம் மற்றும் மதுபானங்களை தவிர்க்கவும்.

    அதிர்ஷ்ட நிறம் - நீலம்

    அதிர்ஷ்டமான நாள் - செவ்வாய்

    அதிர்ஷ்ட எண் - 9

    தானம் - கோவிலில் மூங்கில் செடிகளை நன்கொடையாக கொடுங்கள்

    #எண் 5 (நீங்கள் 5,14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

    தொழிலில் மாற்றத்திற்காக காத்திருந்தவர்கள் இன்று அற்புதமான வாய்ப்புகளை பெறுவார்கள். இன்று அதிர்ஷ்டம் முக்கிய பங்கு வகிக்கும். உங்கள் உணர்வுகளை வாழ்க்கை துணையிடம் முன்மொழிய சிறந்த நாள். சொத்துக்களை வாங்க மற்றும் விற்க, அதிகாரப்பூர்வ ஆவணங்களில் கையொப்பமிட சிறந்த நாள். இன்று பேச்சைக் கட்டுப்படுத்த நினைவில் கொள்ளுங்கள், ஏனெனில் அது உங்கள் நன்னடத்தைக்கு தீங்கு விளைவிக்கும்.

    அதிர்ஷ்ட நிறம் - டீல்

    அதிர்ஷ்டமான நாள் - புதன்

    அதிர்ஷ்ட எண் - 6

    தானம் - ஆதரவற்றோர் இல்லத்தில் உள்ள குழந்தைகளுக்கு பச்சை பழங்களை தானம் செய்யுங்கள்

    #எண் 6 (நீங்கள் 6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

    உங்களுக்கு இன்று ஒரு செழிப்பான நாள், இது தொழிலில் புதிய வாய்ப்புகளை தருகிறது. குழுவாக வேலை செய்தால் மகிழ்ச்சியான முடிவுகளை பெறுவீர்கள். இன்று உங்கள் கனவுகளை நிறைவேற்றி கொள்ள தயாராக இருங்கள். வடிவமைப்பாளர்கள், வழக்கறிஞர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், அரசியல்வாதிகள் மற்றும் நடிகர்கள் சிறப்பான பாராட்டு மற்றும் அதிர்ஷ்டத்தை அனுபவிப்பார்கள்.

    அதிர்ஷ்ட நிறம் - ஸ்கை ப்ளூ

    அதிர்ஷ்டமான நாள் - வெள்ளி

    அதிர்ஷ்ட எண் - 6 மற்றும் 9

    தானம் - : வீட்டு உதவியாளருக்கு தேவைப்படும் உதவிகளை செய்யுங்கள்

    #எண் 7 (நீங்கள் 7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

    இன்று வரும் புதிய வாய்ப்புகளை நீங்கள் இன்று நிராகரிக்க வேண்டும். ஏனெனில் அவை பயனற்றதாக இருக்கும். ஆரோக்கியமற்ற உணவுகளை சாப்பிடுவதை தவிர்த்து விடுங்கள் குறிப்பாக இரவு விருந்துகளில் இருந்து விலகி இருங்கள். இன்று வணிகத்தில் வெற்றி மற்றும் புகழை பெறுவீர்கள். எதிர்ப்பாலினத்தவரால் உங்களுக்கு நன்மை கிடைக்கும்.

    அதிர்ஷ்ட நிறம் - பச்சை மற்றும் மஞ்சள்

    அதிர்ஷ்டமான நாள் - திங்கள்

    அதிர்ஷ்ட எண் - 3

    தானம் - தெரு விலங்குகளுக்கு உணவு வழங்குங்கள்

    #எண் 8 ( நீங்கள் 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

    அதிக பணம் சம்பாதிப்பது இன்று சாத்தியம் என்றாலும் உங்கள் கொள்கைகளை விட்டு கொடுக்காதீர்கள். இன்று ஒரு நாள் விரதத்தை கடைபிடிப்பது உங்கள் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவும். வணிகத்தில் பெரிய பிராண்டுகளுடன் இணைந்து செயல்பட முயற்சியுங்கள். உயர் பதவியை அனுபவிக்கும் நேரம். உங்களின் மென்மையான பேச்சு இன்றைய நாளை சிறப்பானதாக்கும்.

    அதிர்ஷ்ட நிறம் - ஊதா

    அதிர்ஷ்டமான நாள் - வெள்ளி

    அதிர்ஷ்ட எண் - 6

    தானம் - ஏழைகளுக்கு கருப்பு நிற பொருட்களை தானம் செய்யுங்கள்

    #எண் 9 (நீங்கள் 9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

    இன்று நீங்கள் சுறுசுறுப்பாகவும் கனிவாகவும் இருங்கள். இசைக்கலைஞர்கள், நடன கலைஞர்கள் நடிகர்கள், பயிற்சியாளர்கள், நகைக்கடைக்காரர்கள், ஆலோசகர்கள், அறுவை சிகிச்சை நிபுணர்கள், அரசியல்வாதிகளுக்கு வெகுமதிகள் மற்றும் அங்கீகாரம் கிடைக்கும். இன்று நிதி ஆதாயம் மற்றும் சொத்து பதிவுகள் சுமூகமாக நடக்கும்.

    அதிர்ஷ்ட நிறம் - சிவப்பு

    அதிர்ஷ்டமான நாள் - செவ்வாய்

    அதிர்ஷ்ட எண் - 9

    தானம் - கோவிலில் குங்குமம் தானம் செய்யுங்கள்

    ஜூலை 26-ஆம் தேதி பிறந்த பிரபலங்கள்: முகதா கோட்சே, ஐஸ்வர்யா லட்சுமி, பங்கஜா முண்டே, ஜுகல் ஹன்ஸ்ராஜ், சுமன் ரங்கநாதன், ஜகதீஷ் பகவதி
    Published by:Murugesh M
    First published:

    Tags: Numerology

    அடுத்த செய்தி