#எண் 1 (நீங்கள் 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):
உங்களின் முந்தைய தகுதி மற்றும் பயிற்சி ஆகியவை நேர்காணல்கள் அல்லது தேர்வுகளில் வெற்றி பெற உதவிகரமாக இருக்கும். பெரும் சொத்து ஒன்றை விற்பனை செய்து பணம் திரட்டுவதற்கான நேரம் இது. விளையாட்டு மற்றும் போட்டிகளில் வெற்றி பெற அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. உங்கள் பொறுப்புகளை சூரிய அஸ்தமனத்திற்குள் முடித்து விடுங்கள்.
அதிர்ஷ்ட நிறம் - பிரவுன்
அதிர்ஷ்டமான நாள் - ஞாயிற்றுக்கிழமை
அதிர்ஷ்ட எண் - 1
தானம் - பிச்சைக்காரர்களுக்கு பிரவுன் அரிசி தானமாக வழங்கவும்.
#எண் 2 (நீங்கள் 2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):
உங்கள் உணவில் பால் சேர்த்துக் கொள்ளுங்கள். சக மக்களிடம் இருந்து பாராட்டு மற்றும் அன்பு கிடைக்கும் நாள் இது. உங்கள் அப்பாவித்தனத்தை சிலர் தவறாகப் பயன்படுத்தக் கூடும். ஆகவே ஜாக்கிரதையாக இருக்கவும். பெண்கள் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பிரபலம் அடையலாம். அரசியல் தலைவர்கள் புதிய உச்சம் அடைவர்.
அதிர்ஷ்ட நிறம் - வான் நீலம்
அதிர்ஷ்டமான நாள் - திங்கள்கிழமை
அதிர்ஷ்ட எண் - 2
தானம் - கோவிலில் பால் அல்லது எண்ணெய் தானம் செய்யவும்.
#எண் 3 (நீங்கள் 3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):
உங்களை சுற்றியுள்ள நபர்கள் பொறாமை மிகுந்தவர்களாக இருப்பதால் கவனமுடன் இருக்கவும். குறிப்பாக உங்கள் உணர்ச்சிகளை பகிர்ந்து கொள்ள வேண்டாம். மன அழுத்தத்தை போக்குவதற்கு மாலையில் பால் கலந்த தண்ணீரில் குளிக்கவும். பணியிடத்தில் உங்களுக்கான பதவி உயர்வு அல்லது ஊதிய உயர்வு தேடி வரும். உங்கள் அறிவு மற்றவர்களை ஈர்க்கும்.
அதிர்ஷ்ட நிறம் - ஆரஞ்சு
அதிர்ஷ்டமான நாள் - வியாழக்கிழமை
அதிர்ஷ்ட எண் - 3
தானம் - குழந்தைகளுக்கு மஞ்சள் நிற பேனா கொடுக்கவும்.
#எண் 4 (நீங்கள் 4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):
பிறரைக் காட்டிலும் நீங்கள் சாதூர்யமாக செயல்பட்டுக் கொண்டிருப்பதால் வெற்றி வெகு தொலைவில் இல்லை. ஓய்வெடுக்க நேரமில்லை. எதிர்கால பலன்களுக்கு தேவையானவற்றை இன்றே விதைக்கவும். விளையாட்டு, அரசியல் மற்றும் பொழுதுபோக்கு துறைகளில் இருப்பவர்கள் பயணம் செய்ய சிறப்பான நாளாகும். இன்றைக்கு அசைவத்தை தவிர்க்கவும்.
அதிர்ஷ்ட நிறம் - ப்ளூ மற்றும் வயலெட்
அதிர்ஷ்டமான நாள் - சனிக்கிழமை
அதிர்ஷ்ட எண் - 9
தானம் - பிச்சைக்காரருக்கு கட்டாயம் துணி தானம் செய்யவும்.
#எண் 5 (நீங்கள் 5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):
இன்றைய பொழுதை கணபதி மந்திரத்துடன் தொடங்கவும். பணி அல்லது தனி வாழ்க்கையில் இன்று ஒரு முன்னேற்றம் காணப்படும். திருமணமான தம்பதியர்களுக்கு இன்று கொண்டாட்டம் மிகுந்த நாளாகும். தனியாக இருப்பவர்களும் கூட தங்கள் காதலை வெளிப்படுத்தலாம். பழைய நண்பர் அல்லது உறவினர் உங்கள் உதவியை நாடக் கூடும். செய்து கொடுங்கள்.
அதிர்ஷ்ட நிறம் - பீச் மற்றும் பச்சை
அதிர்ஷ்டமான நாள் - புதன்கிழமை
அதிர்ஷ்ட எண் - 5 மற்றும் 7
தானம் - ஏழைகளுக்கு சர்க்கரை தானம் செய்யவும்.
#எண் 6 (நீங்கள் 6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):
உங்கள் நன்றியை வெளிப்படுத்தும் விதமாக வீட்டுப் பணியாளருக்கு இனிப்புகள் வழங்கவும். உணர்வுகளை வெளிப்படுத்த, குடும்ப நிகழ்ச்சிகளில் பங்கேற்க, காதலை வெளிப்படுத்த மிகவும் சிறப்பான நாளாகும். வாழ்க்கை துணை மற்றும் குழந்தைகளுடன் நேரத்தை செலவிடுங்கள். நடிகர்கள் மற்றும் ஊடகத்துறையினருக்கு வெற்றி கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம் - டீல் மற்றும் பீச்
அதிர்ஷ்டமான நாள் - வெள்ளிக்கிழமை
அதிர்ஷ்ட எண் - 6 மற்றும் 9
தானம் - ஏழைகளுக்கு இனிப்பு தானம் செய்யவும்.
#எண் 7 (நீங்கள் 7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):
இன்று வெற்றி உங்கள் கைகளில் தவழும். ஆகவே, நீங்கள் தான் எல்லோருக்கும் ஹீரோவாக தென்படுவீர்கள். ஆகவே, வணிகத்தில் தைரியமாக சவால்களை எதிர்கொள்ளலாம். சட்ட வழக்குகளை எதிர்கொள்ள உங்கள் சாதுர்யம் மற்றும் கணிப்புத் திறன் ஆகியவை பயன்படும். புதிய உறவு மலரும். எதிர் பாலினத்தவர் மூலமாக அதிர்ஷ்டம் கை கூடும்.
அதிர்ஷ்ட நிறம் - மஞ்சள்
அதிர்ஷ்டமான நாள் - திங்கள்கிழமை
அதிர்ஷ்ட எண் - 7
தானம் - கோவிலில் எண்ணெய் தானம் செய்யவும்.
#எண் 8 ( நீங்கள் 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):
இன்று மூத்தவர்களின் ஆசிர்வாதம் உங்களுக்கு கிடைக்கும். கடின உழைப்பு தேவைப்படும் இடங்களில் அதிர்ஷ்டம் மற்றும் நிலைத்தன்மை ஆகியவை தேவைப்படுகிறது. உங்களைச் சுற்றியுள்ள நல்லெண்ணம் படைத்தவர்கள் உதவியுடன் உங்களுக்கு இன்று வெற்றி கிடைக்கும். குடும்ப நிகழ்ச்சிகளில் பங்கேற்பதாக வாக்குறுதி கொடுக்க வேண்டாம், அதற்கான நேரம் இருக்காது.
அதிர்ஷ்ட நிறம் - கடல் நீலம் மற்றும் பர்பிள்
அதிர்ஷ்டமான நாள் - வெள்ளிக்கிழமை
அதிர்ஷ்ட எண் - 6
தானம் - பிச்சைக்காரர்களுக்கு வாழைப்பழம் தானம் செய்யவும்.
#எண் 9 (நீங்கள் 9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):
பணிபுரியும் பெண்கள் மற்றும் பணி செய்யாத பெண்கள் என எவராக இருப்பினும் இன்று மற்றவர்களை ஈர்த்து, தனித்துவ அடையாளத்துடன் காணப்படுவீர்கள். இன்றைய நாள் முழுவதும் பாராட்டுக்கள் நிறைந்து காணப்படும். திடீர் வெற்றியை எதிர்பார்க்கலாம். மாணவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம் - சிவப்பு மற்றும் ஆரஞ்சு
அதிர்ஷ்டமான நாள் - செவ்வாய்க்கிழமை
அதிர்ஷ்ட எண் - 3 மற்றும் 9
தானம் - வீட்டுப் பணியாளர்களுக்கு மாதுளம்பழம் கொடுக்கவும்.
ஆகஸ்ட் 21 அன்று பிறந்த பிரபலங்கள் : கனிகா கபூர், அஹமது படேல், மான் சிங், பூமிகா சாவ்லா, மினி மாத்தூர், மந்த்ரா,
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Numerology, Rasi Palan