முகப்பு /செய்தி /ஆன்மிகம் / தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு இன்று (29 ஜூன் 2022) முதலீடுகளிலிருந்து லாபம் கிடைக்கும்..!

தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு இன்று (29 ஜூன் 2022) முதலீடுகளிலிருந்து லாபம் கிடைக்கும்..!

Deiviga Vaakku

Deiviga Vaakku

Rasi Palan | மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான தினசரி ராசி பலன் இதோ...

  • 1-MIN READ
  • Last Updated :

மேஷம்:

சமீபத்தில் நீங்கள் கற்றுக் கொண்ட திறன் பயிற்சி இப்போது உங்களுக்கு கை கொடுக்கும். கூடுதல் பணிச் சுமை காரணமாக உங்களுக்கு லேசான சோர்வு ஏற்படக் கூடும். புதிய சவாலை ஏற்க தயாராக இருங்கள்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - சிறகு

ரிஷபம்:

புதிதாக நீங்கள் ஏற்றுக் கொண்ட பொறுப்பு உங்களை புதிய உச்சத்திற்கு கொண்டு செல்லும். பழைய நண்பருடன் உங்களுக்கு தொடர்பு கிடைக்கும். எதேச்சையாக முடிவு செய்யப்படும் பயண திட்டம் நல்லதல்ல.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - பறவை

மிதுனம்:

இன்றைய நாள் உங்களுக்கு சாதகமானதாக இருப்பதால் அதை பயன்படுத்திக் கொள்ளுங்கள். புத்தாக்க சிந்தனை என்பது பயனுள்ளதாக அமையும். உங்களுக்கு தொடர்பு இல்லாத ஒரு விஷயத்தை நீங்கள் செய்ய நேரிடும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - சிலந்தி

கடகம்:

உண்மையை நீங்கள் வெகு சீக்கிரமாக புரிந்து கொண்டு அதனுடன் வாழுவதற்கு கற்றுக் கொள்வீர்கள். இருப்பினும் அதுகுறித்து மேலும் விவாதம் செய்ய தயக்கமாக இருக்கும். பிறருக்கு இரண்டாம் வாய்ப்பை வழங்கவும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - சிட்டுக்குருவிகள்

சிம்மம்:

உங்களுக்கு என்று முடிவு செய்யப்பட்ட ஒரு விஷயம் உங்கள் பாதையின் குறுக்கே வருகிறது என்றால் அது ஏதேச்சையான விஷயம் அல்ல. சில தொந்தரவுகள் இருந்தாலும் அதற்கு வெகு விரைவில் தீர்வு கிடைக்கும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - செராமிக் பாத்திரம்

கன்னி:

உங்களுக்கான சரியான பாதையை தேர்வு செய்து கொள்ளும் மனநிலை உங்களுக்கு இல்லாமல் போகலாம். அதாவது, நீங்கள் இன்னும் சில காலம் காத்திருக்க வேண்டியிருக்கும். விரைவாக முடிவு செய்ய இயலாது.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - நீல நிற பானை

துலாம்:

பணியிடத்தில் புதிய நபர் ஒருவரை நீங்கள் சந்திக்க இருக்கிறீர்கள். அவரைப் பற்றி உடனடியாக ஒரு முடிவுக்கு வரும் முன்பாக சற்று நேரம் ஒதுக்கி பரிசீலனை செய்யவும். வீட்டில் உங்களுக்கு எரிச்சல் ஏற்படக் கூடும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - கழுகு

விருச்சிகம்:

நல்ல குதூகலமான சூழலில் மனதுக்கு பிடித்தமான உணவு உண்ணும் வாய்ப்பு கிடைக்கும். தொடர்ச்சியாக கடின உழைப்பு நாட்கள் வந்து கொண்டே இருக்கும். பழைய முதலீடுகளில் லாபத்திற்கான அறிகுறி தென்படுகிறது.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - அணில்

தனுசு:

உங்களுக்கான கடைசி வாய்ப்பு வரவில்லை என்றால், உங்களுக்கான வெள்ளி வாய்ப்பு காத்துக் கொண்டிருக்கிறது என்று அர்த்தம். நீங்கள் நேரம் ஒதுக்க வேண்டும் என்று பிள்ளைகள் வலியுறுத்தலாம். வீட்டில் மூத்தவர்களுக்கு உடல்நிலை சரியில்லாமல் போகலாம்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - தோட்டம்

மகரம்:

நீங்கள் முடிவு செய்தபடி அடுத்தகட்ட நடவடிக்கையை முன்னெடுத்துச் செல்லுங்கள். இது மிகவும் சிக்கலான நேரம். இனியும் தாமதம் இருக்கக் கூடாது. உங்கள் வாழ்க்கை துணை சிறப்பான அனுபவத்தை தரக் கூடும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - கிளி

கும்பம்:

பெரிய சுமை ஒன்று விலகிச் செல்வதால் உங்களுக்கான ரிலாக்ஸ் கிடைக்க இருக்கிறது. எந்தவொரு விஷயத்திலும் கவனமுடன் செயல்பட வேண்டும். உங்களுக்கு நெருக்கமான ஒன்றை நீங்கள் தொலைக்க நேரிடும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - கூடு

மீனம்:

இன்றைய நாள் கொஞ்சம் மந்தமாக இருக்கலாம். அடுத்தகட்ட முடிவுகளை எடுப்பது எப்படி என்பது குறித்து நீங்கள் தான் தெளிவாக முடிவு செய்ய வேண்டும். குழப்பங்கள் ஏற்பட்டால் தகவல் தொடர்பு பாழாகிவிடும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஆமை

First published:

Tags: Oracle Speaks