Home /News /spiritual /

தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு இன்று (6 ஜூன் 2022) வேலையில் பாராட்டு கிடைக்கும்..!

தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு இன்று (6 ஜூன் 2022) வேலையில் பாராட்டு கிடைக்கும்..!

தெய்வீக வாக்கு

தெய்வீக வாக்கு

Rasi Palan | மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான தினசரி ராசி பலன் இதோ...

மேஷம் :

உங்கள் மனதில் இருப்பதை வெளிப்படுத்தவும் தெளிவுப்படுத்தவும் இது சரியான நாள். இதற்கு முன் உங்களுக்கு இதுபோன்ற வாய்ப்பு கிடைத்திருக்க வாய்ப்பில்லை. இன்று உங்கள் இதயத்தில் இருப்பதை கொட்டி விடுங்கள். புதிய தொடக்கத்தை உருவாக்குங்கள்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – தேநீர் கோப்பை

ரிஷபம்:

நீங்கள் ஏற்கனவே எடுத்த முடிவைப் பற்றி மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று எப்போதுமே நீங்கள் நினைக்க மாட்டீர்கள். ஆனால் நீங்கள் அவ்வாறு சிந்திக்கலாம். அந்நியர்களுக்கு உதவுவதற்கும் அவர்களை அணுகுவதற்கும் உங்களுக்குள் உள்ளுணர்வு தோன்றலாம். நீங்கள் உதவிய யாரேனும் ஒருவர், உங்களுக்கு மீண்டும் உதவலாம்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – திரைச்சீலை

மிதுனம்:

நீங்கள் நிறைய முயற்சி செய்திருந்தாலும், எதுவுமே அவ்வளவு சுலபமாக ஏற்றுக்கொள்ளப்படாமல் போகலாம். பணியிடத்தில் ஒரு நேர்மறையான ஆனால் மெதுவான இயக்கம் காணப்படுகிறது. அது உங்களுக்கு நல்லது தான். உங்களின் வருகைக்கு யாரோ ஒருவர் காத்திருக்கலாம்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – பழைய கிளாசிக்

கடகம்:

நீங்கள் மிகவும் கவனமாக இருப்பது, சரியான நேரத்தில் வேலையை செய்து முடிப்பதில் உதவியாக இருக்கும். இப்போதைக்கு ஒரு நல்ல உடற்பயிற்சி தேவையான விஷயமாக இருக்கலாம்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – கண்ணாடி ஜார்

சிம்மம்:

உங்கள் கடந்த கால தவறு சில வடுக்களை ஏற்படுத்தியிருக்கலாம், ஆனால் மன்னித்து மறந்து கடந்து செல்ல வேண்டிய நேரம் இது. இன்று உங்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி ஏற்படும், அது பெரும்பாலும் பழைய நண்பரிடமிருந்து வரலாம். சமீபகாலமாக உங்கள் மனதில் இருந்த ஒரு குழப்பம் தெளிவு பெறும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – மயிலிறகு

கன்னி:

எதிர்பாராத நபர்கள் உங்களை சந்தித்து ஆச்சரியப்படுத்தலாம், அது வரவேற்கத்தக்க மாற்றமாக இருக்கும். ஒரு புதிய டயட் அல்லது வொர்க்அவுட் ரொட்டீன் உங்களை பிசியாக வைக்கும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – சிவப்பு பானம்

துலாம்:

ஒரே மாதிரியான வாழ்வின் மத்தியில் புதிய பாதை ஒன்று உருவாகிறது. உங்கள் வேலையில் பாராட்டுகளைப் பெற வாய்ப்புள்ளது. நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட ஒரு சிறிய பயணம் செல்வீர்கள். நீண்ட காலமாக நீங்கள் சந்திக்க விரும்பும் நபருடன் அதிக நேரம் செலவிடுவீர்கள்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – பூட்டிய கதவு

விருச்சிகம்:

கடந்த காலத்திலிருந்து ஒரு நிகழ்வு திடீரென்று புத்துயிர் பெறலாம், உங்களுக்கு நம்பிக்கையையும் தரலாம். வேலையில் புதிய முன்னேற்றங்கள் இப்போதைக்கு உங்களை உற்சாகப்படுத்தாமல் இருக்கலாம். உங்கள் வெற்றிடத்தை நிரப்ப நெருங்கிய நண்பர் வேறு யாரையாவது கண்டுபிடிப்பது உங்களைக் காயப்படுத்தலாம்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – நீல டார்மலின்

தனுசு:

நீண்ட காலத்திற்குப் பிறகு, உங்களுக்காக நேரத்தை ஒதுக்குவது போல் நீங்கள் உணரலாம். அதற்கு சாத்தியமான வழிகள் உள்ளன, ஆனால் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். உங்கள் கணவன் / மனைவி நிதி ரீதியான பிரச்சனைகளுக்கு உள்ளாகலாம், அதை சரி செய்யவும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – ஓனிக்ஸ்

மகரம்:

உங்களால் எதையேனும் தீர்க்கவோ அல்லது மறக்கவோ முடியாவிட்டால் குறைந்தபட்சம் தற்போது அதை அப்படியே விடுவது நல்லது. புதிய நபர்கள் உங்களைப் பற்றி மிகவும் சிறப்பாக உணரலாம். மனப் போராட்டம் நீண்ட நாட்களுக்குப் பிறகு முடிவுக்கு வர வாய்ப்புள்ளது.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – ரோசரி

கும்பம்:

பல நடைமுறை முடிவுகள் உங்கள் உணர்ச்சிகளை பாதிக்கலாம். உங்கள் வாழ்க்கையில் சில பழைய விஷயங்களையும் நீங்கள் அனுமதிக்கலாம். உங்களை சமூகக் கூட்டத்தில் சந்தித்த ஒருவர் உங்களைப் பாராட்ட முயற்சி செய்வார்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – டிசைனர் வாட்ச்

மீனம்:

நீங்கள் விரும்புவதையும் விரும்பப்படுவதையும் உணர முயற்சித்திருந்தால், நீங்கள் எப்படி வெற்றி பெற்றீர்கள் என்ற அணுகுமுறையையும் மதிப்பாய்வு செய்ய வேண்டியிருக்கும். முயற்சி செய்வதற்கு நல்ல முதலீட்டு வாய்ப்புகள் வரும். உங்களுக்கு ஏதேனும் தேவை இருந்தால் பக்கத்து வீட்டுக்காரர் வியக்கத்தக்க வகையில் உதவியாக இருப்பார்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – முயல் குட்டி
Published by:Selvi M
First published:

Tags: Astrology, Oracle Speaks

அடுத்த செய்தி