Home /News /spiritual /

தெய்வீக வாக்கு: இன்று இந்த ராசியினருக்கு எதிர்பார்த்த ஒன்று கிடைக்கும்...(பிப்ரவரி 28,2022)

தெய்வீக வாக்கு: இன்று இந்த ராசியினருக்கு எதிர்பார்த்த ஒன்று கிடைக்கும்...(பிப்ரவரி 28,2022)

தெய்வீக வாக்கு

தெய்வீக வாக்கு

Rasi Palan | நீங்கள் இப்போது பல நுட்பங்களில் தேர்ச்சி பெற்றிருக்கலாம், ஆனால் உங்களுக்கு இன்னும் தேவைப்படுவது பணிவான அணுகுமுறை

மேஷம் 

இந்த ராசி மாணவர்கள் தற்போது படிப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக பரீட்சை எழுதக் காத்திருக்கும் மாணவர்கள் கவனம் சிதறாமல் படிக்க வேண்டும். உங்களுடைய நண்பர்கள் உங்களை தவறான வழியில் செல்ல வைக்கலாம். அலுவலகப் பணிகளில் இருப்பவர்களுக்கு இவ்வளவு நாள் கிடைக்காத பாராட்டுக்கள் இனி கிடைக்கும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – தெய்வீகமான ஒலி

ரிஷபம் 

நீண்ட காலத்திற்கு கோபத்தை கட்டுப்படுத்தி வைப்பது உங்களை மனரீதியாக பாதிக்கலாம். எனவே அதை நீங்கள் தவிர்க்க வேண்டும். அது மட்டுமின்றி எதோ ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் உடனடியாக நீங்கள் விட்டு கொடுத்து செல்வதும் பின்விளைவுகளை ஏற்படுத்தலாம். எதிர்த்து போராடுவது மட்டும்தான் உங்களுக்கு இருக்கும் ஒரே ஒரு வாய்ப்பு.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – புதிய ஆடை

மிதுனம்

ஒவ்வொரு விஷயத்தையும் நீங்கள் மிகவும் துல்லியமாக கணிப்பது உங்களுடைய தனித்திறமையாக இருந்து வருகிறது. அதற்காகவே உங்களுக்கு அதிகமான பாராட்டுக்கள் கிடைக்கும். உங்களுக்கு நெருக்கமான உறவில் இருப்பவர்கள் வழக்கத்தை விட உங்களிடம் கூடுதலாக நெருங்கி பழகுவார்கள். நடனம் வந்து தெரபியாக பலன் தரும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – வெள்ளை நிறப் பூக்கள்

கடகம்

நிதி ரீதியாக உங்களுக்கு எந்தவித முன்னேற்றமும் இல்லாமல் இருப்பது உங்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தலாம். இதனால் நீங்கள் அவசரமாக முடிவை எடுக்கும் சூழலுக்கு தள்ளப்படுவீர்கள். ஆனால் கொஞ்சம் பொறுமையை கடைப்பிடிக்க வேண்டும். சில நாட்களில் இந்த நிலைமை மாறும். காலத்தில் நடந்த நிகழ்வுகள் மீண்டும் அதே போல நிகழ தொடங்கும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – சில்வர்வேர்

சிம்மம்

ஒரே ஒரு குறிப்பிட்ட வேலையில் மட்டுமே உங்களுடைய மொத்த முயற்சியையும் நீங்கள் செலுத்த விரும்ப மாட்டீர்கள், ஆனால் அப்படி நீங்கள் செய்தால் உங்களுக்குக் கணிசமான வெகுமதிகள் கிடைக்கும். நீங்கள் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவீர்கள். வெகு தூரத்தில் இருக்கும் ஒரு உறவினர் உங்களை விரைவில் சந்திக்கலாம்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – ரோமானிய கடிகாரம்

மேலும் படிக்க... Today Rasi Palan : இன்று உங்கள் ராசிபலன் எப்படி இருக்கு? (பிப்ரவரி 28)

கன்னி 

தற்போது நிலவும் சூழல் மர்மமானதாகக் காணப்படும். ஆனால் வெகு விரைவில் உங்களுக்கு எல்லாமே தெளிவாகப் புரியத் துவங்கும். இன்று உங்களுக்கு கிடைக்கும் விலை உயர்ந்த பொருள் இன்றைய நாளின் சிறப்பாக அமையும். எல்லா விஷயத்திற்கும் நீங்கள் உடனடியாகவே பதில் அளிப்பது உங்கள் மீது நல்ல இம்ப்ரஷனை ஏற்படுத்தும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – விண்டேஜ் ஃபர்னிச்சர்

துலாம் 

இன்று உங்களுக்கு மகிழ்ச்சி, எதிர்பார்ப்பு, ஏமாற்றம் என்று எல்லாவற்றின் கலவையாக இருக்கும். அதுமட்டுமின்றி உங்கள் வாழ்க்கைக்கான மிக முக்கியமான ஒரு பாடத்தை இன்று கற்றுக் கொள்வீர்கள். இனி வருங்காலத்தில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். உங்கள் உடல்நிலை மீதும் கூடுதல் கவனமும் அக்கறையும் செலுத்த வேண்டும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – அப்ஸ்டிராக்ட் ஆர்ட்

விருச்சிகம்

உங்களுடைய செயல்பாடுகள் எல்லாமே மிகவும் தனித்துவமாக, ஒரு குறிப்பிட்ட முறையில் செய்யப்படுவதாகக் காணப்படுவதால் மற்றவர்கள் உங்களுடைய உங்களைப் பற்றி சரியாக புரிந்து கொள்ள முடியாமல் இருப்பார்கள். நீங்கள் அவர்களை ஏமாற்றுவது போல தற்போது தெரியலாம்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – பிரேஸ்லெட் சாரம்

தனுசு

நீங்கள் விரும்பாத ஒரு விஷயத்துக்காக உங்களுடைய மேலதிகாரிகள் உங்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் அதை நீங்கள் எப்படி கையாள்கிறீர்கள் என்பது என்பதில்தான் உங்கள் புத்திசாலித்தனம் இருக்கிறது. வீட்டிலும் ஒருவரால் உங்களுக்கு சவால்கள் ஏற்படும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – வேப்பமரம்

மகரம்

குடும்பத் தலைவிகளுக்கு நெருக்கடியாக இருப்பது போன்ற சூழல் ஏற்படும். எனவே தங்கள் வழக்கமான செயல்களிலிருந்து மாறுதல் வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். சமூக சேவைகளில் ஈடுபடுபவர்களுக்கு உரிய மதிப்பும் மரியாதையும் கிடைக்கும். எதிர்பார்க்கக்கூடிய பண வரவு கிடைக்கும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – மரத்தாலான தரை

கும்பம்

எந்த பிரச்சனையும் செய்யாத உங்களுடைய அணுகுமுறை, எல்லா வேலைகளையும் சீக்கிரமாக முடிப்பதற்கு உதவும். அதேபோல எந்த சூழ்நிலையையும் சரியாக கையாள்வதற்கு நீங்கள் எளிமையான அணுகுமுறையைப் பின்பற்றவேண்டும். இதனால் மற்றவர்களுக்கும் பலன் கிடைக்கும். உங்கள் தேர்வுகளை பலரும் விரும்ப மாட்டார்கள் என்றாலும் அவை மிகவும் தனித்துவமானவையாக இருக்கும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – தங்க மோதிரம்

மீனம் 

நீங்கள் எழுத்துப்பூர்வமாக ஏதேனும் உறுதிமொழி கொடுத்து அதை இன்னும் செயல்படுத்தாமல் இருந்தால் அது உங்களை மிகப்பெரிய பிரச்சனையில் சிக்க வைக்கும். எனவே உங்களுடைய அனைத்து கம்யூனிக்கேஷன்களிலும் கவனமாக இருக்கவும். உங்கள் மீது அல்லது உங்கள் வேலையின் மீது பிரச்சனைகளை ஏற்படுத்த யாரோ சூழ்ச்சி செய்து கொண்டிருக்கிறார்கள், எச்சரிக்கையாக இருக்கவும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – LED ஹோர்டிங்
Published by:Vaijayanthi S
First published:

Tags: Oracle Speaks

அடுத்த செய்தி