முகப்பு /செய்தி /ஆன்மிகம் / தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு இன்று (பிப்ரவரி 28, 2023) புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.!

தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு இன்று (பிப்ரவரி 28, 2023) புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.!

தெய்வீக வாக்கு

தெய்வீக வாக்கு

Oracle Speaks | மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான தினசரி ராசி பலன் இதோ...

  • News18 Tamil
  • 2-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

    மேஷம்:

    நீங்கள் மன்னிப்பு கோருவதற்கான வாய்ப்புகள் மிக குறைவாக இருக்கிறது. உங்கள் ஆழ்மன சிந்தனையானது ஆறுதலாக அமையலாம் மற்றும் உங்களுக்கு எது தேவை என்பதை புரிந்து கொள்ளுங்கள். தேவையானதை நோக்கி முயற்சிக்கவும்.

    உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - படம்

    ரிஷபம்:

    இன்றைய தினம் நெருக்கடி மிகுந்ததாக இருந்தாலும், உங்களுக்கான இலக்குகளை செய்து முடிப்பீர்கள். உங்களுக்கான பணிச்சுமைகள் அதிகரிக்கும். நெருங்கிய நண்பர் குறித்த நேர்மறையான செய்தி நம்பிக்கையை தரும்.

    உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - வெள்ளிக்கம்பி

    மிதுனம்:

    அடுத்து வரும் மாதங்களுக்கான புதிய யோசனைகளை நீங்கள் சிந்திக்க வேண்டும். ஒரே சமயத்தில் பல வேலைகளை நீங்கள் செய்து வருகிறீர்கள் என்றால் சிலவற்றை குறைத்துக் கொள்வது நல்லது. ரியல் எஸ்டேட் தொழிலில் நிலையான வளர்ச்சி கிடைக்கும்.

    உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - பட்டம்

    கடகம்:

    உங்கள் ஆழ்மன திறமைக்கு தகுந்த புதிய வாய்ப்புகள் கிடைக்கும். அதே சமயம், அதீத நம்பிக்கை தவறானதாக இருக்கலாம். உங்கள் சாதனைகள் குறித்து சுற்றியுள்ள சிலர் கிசுகிசு பேசக் கூடும். அவர்களிடம் எச்சரிக்கையாக இருக்கவும்.

    உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - வீணை

    சிம்மம்:

    இன்றைய நாளின் தொடக்கத்தில் உங்களுக்கு கவலைகள் வரலாம். ஆனால், அதற்கு வெகு விரைவில் தீர்வு காண்பீர்கள். வழக்கத்திற்கு மாறான ஏதோ ஒரு விஷயம் உங்கள் மனதில் குழப்பத்தை ஏற்படுத்தும். பழைய நண்பர் திடீரென்று வருவார்.

    உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - விலங்கின் நிழல்

    கன்னி:

    மதிய வேளையில் நண்பர்களுடன் வெளியிடங்களுக்கு செல்லவும், புத்துணர்ச்சி தருகின்ற சாப்பாடு சாப்பிடவும் வாய்ப்பு உள்ளது. அதற்குப் பிறகு உங்கள் மனம் மிகுந்த கவனத்துடன் இருக்கும். உங்கள் சந்தேகங்களுக்கு யாரோ ஒருவர் தீர்வு அளிப்பார்.

    உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - கார்டூன்

    துலாம்:

    நீங்கள் எதிர்பார்த்த வேலையில் கொஞ்சம் வளர்ச்சி காணப்படுவது ஆறுதலாக அமையும். தோராயமாக

    மேற்கொள்ளப்படும் பயணங்கள் மனதிற்கு புத்துணர்ச்சி தரும். யாரோ சிலர் உங்களை பழிவாங்குவதற்கு காத்திருக்கின்றனர்.

    உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - சிவப்பு கல்

    விருச்சிகம்:

    உங்களைப் பற்றிய ரகசியம் வெளியுலகிற்கு தெரிய இருக்கிறது. பூர்த்தி அடையாத பொறுப்புகள் உங்கள் வசம் இருக்கின்றன. அதற்கு உங்கள் கவனம் தேவைப்படுகிறது. உங்கள் மருந்துகள் குறித்து கவனமாக இருக்கவும்.

    உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - பெட்டி

    தனுசு:

    இன்றைய தினம் நீங்கள் மிகுந்த அமைதியை உணருவீர்கள். இது வழக்கத்திற்கு மாறானதாக இருக்கும். புதிய பணி செய்ய உத்திகளை வகுப்பீர்கள். பணியிடத்தில் வேலையை செய்து முடிக்க திறன்வாய்ந்த சக ஊழியர் உதவியாக இருப்பார்.

    உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - விண்மீன் கூட்டம்

    மகரம்:

    தற்போது உங்களை சூழ்ந்துள்ள கவலைகளில் இருந்து ஆறுதல் விஷயமாக பணி சார்ந்த பயணம் அமையும். உங்கள் நண்பர் தற்போது உதவியாக இருப்பார். அதே சமயம், சக ஊழியர் ஏதோ ஒரு பிரச்சினையை முன்வைப்பார்.

    உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஆறு

    கும்பம்:

    உங்கள் மனதிற்குள் நீங்களே பேசிக் கொள்வது நற்பலனாக அமையும். சின்ன, சின்ன சந்தோஷங்கள் போதுமானதாக இருக்கும். அதே சமயம் கொஞ்சம் எரிச்சல் உணர்வு ஏற்படலாம். உங்கள் உடல் நலன் குறித்து அக்கறை கொள்ளவும்.

    உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - விளம்பரப் பலகை

    மீனம்:

    உங்கள் பணியை சிலர் பாராட்டுகிறார்கள் என்றால், அதை நீங்கள் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டாம். ஏனென்றால், அவர்கள் உண்மையை சொல்லவில்லை. உங்கள் பணித் திறனுக்கும், வேலைக்கும் உள்ள இடைவெளியை நீங்களே எடைபோட்டு பாருங்கள்.

    உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - பட்டு தலைப்பாகை

    First published:

    Tags: Oracle Speaks, Tamil News