ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு இன்று (டிசம்பர் 29, 2022) பணியிடத்தில் திறமைக்கான பாராட்டு கிடைக்கும்.!

தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு இன்று (டிசம்பர் 29, 2022) பணியிடத்தில் திறமைக்கான பாராட்டு கிடைக்கும்.!

தெய்வீக வாக்கு

தெய்வீக வாக்கு

Oracle Speaks | மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான தினசரி ராசி பலன் இதோ...

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  மேஷம்:

  நீங்கள் ஏற்கனவே செய்த முடிவை இப்போது மறுபரிசீலனை செய்ய வேண்டியிருக்கும். மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் திடீரென்று தோன்றும். உங்களிடம் உதவி பெற்றவர் அதற்கு நன்றிக்கடன் செலுத்துவார்.

  உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஆப்ரிகாட்

  ரிஷபம்:

  உங்கள் ஆழ்மன உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கான அழகிய தருணம் இது. இதற்கு முன்பும் இதேபோன்ற வாய்ப்பு உங்களுக்கு கிடைத்திருக்கும். எல்லாவற்றையும் புரிந்து கொள்ள உங்கள் மனதை தயார் செய்யவும்.

  உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - கருப்பு அப்சிடியன் கிளாஸ்

  மிதுனம்:

  உங்கள் மனப் பக்குவத்தால் சிக்கலான விஷயங்களை நீங்கள் கையாளுவீர்கள். உங்கள் நன்மைக்கான விஷயங்கள் இப்போது மேம்பட்டிருக்கும். இந்த வாரத்தில் உடல்நலன் குறித்த கவலைகள் எழும்.

  உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - சணல் பை

  கடகம்:

  உங்களிடம் ஒரு பொறுப்பு ஒப்படைக்கப்பட்டிருக்கும். ஆனால், அது உங்கள் விருப்பத்திற்கு மாறானதாக இருக்கும். பணியிடத்தில் சாதகமான சூழல் தென்படும். ஆனால், சற்று மந்தமாக இருக்கும்.

  உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - பத்திரிகை

  சிம்மம்:

  ஆழமான, அர்த்தமுள்ள விவாதங்களை முன்வைக்க சிறப்பான நாளாகும். இதை நீங்கள் உணரும் தருணம் இது. உங்கள் நோக்கத்தின் மீது நீங்கள் கவனமாக இருந்தால் அதற்கான பலனை அறுவடை செய்யலாம்.

  உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - மயில் இறகு

  கன்னி:

  கடந்த காலங்களில் உங்கள் மனம் புண்பட்டிருந்தாலும், அதை மறக்கவும், மன்னிக்கவும் இப்போது சரியான தருணம். உங்கள் பழைய நண்பரிடம் இருந்து ஆச்சரியமான விஷயம் நடக்கும். உங்கள் மனதில் உள்ள குழப்பத்திற்கு தெளிவு கிடைக்கும்.

  உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - மஞ்சள் நிற ராசிக்கல்

  துலாம்:

  இதுவரையிலும் நீங்கள் சந்திக்க விரும்பிய, அதற்கு வாய்ப்பு கிடைக்காத நபரை சந்திக்க உள்ளீர்கள். உங்களை பற்றி அக்கறை செலுத்தும் நபருக்காக நேரம் ஒதுக்கவும். வணிகத்தில் பணியாளர் பற்றாக்குறை ஏற்படும்.

  உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - பிரமீடு

  விருச்சிகம்:

  தற்போதைய மந்தமான வாழ்க்கை சூழலுக்கு இடையே புதிய வாழ்க்கை தொடங்க இருக்கிறது. பணியிடத்தில் உங்கள் திறமைக்கான பாராட்டு கிடைக்கும். குறுகிய பயணத்தை மேற்கொள்ள இருக்கிறீர்கள்.

  உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - கருப்பு மரகதக்கல்

  தனுசு:

  உங்களால் தீர்வு காண முடியாத விஷயங்களை மறக்க முயற்சி செய்யவும். பணியிடத்தில் நீங்கள் இணைந்து பணியாற்றுவதற்கான துணை ஒருவர் கிடைப்பார். புத்தாக்க சிந்தனைகள் உங்கள் மனதில் நிரம்பியிருக்கும்.

  உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - தண்டு

  மகரம்:

  நீண்ட காலத்திற்கு பிறகு நீங்கள் ரிலாக்ஸாக உணருவீர்கள் மற்றும் உங்களுக்கான நேரத்தை ஒதுக்குவீர்கள். புதிய பணி வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். உடன் பிறந்தவர்களுக்கு நிதி நெருக்கடி ஏற்படும்.

  உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - பட்டு நூல்

  கும்பம்:

  புதிய வாய்ப்பு உங்களுக்கு இறுதியாக கிடைக்க இருக்கிறது. அதை நீங்கள் தீவிரத்தன்மையுடன் பரிசீலனை செய்யவும். விருந்தினர்களை நீங்கள் எதிர்பார்க்கலாம். பணவரவு மேம்படும்.

  உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - டிசைனர் வாட்ச்

  மீனம்:

  உங்கள் எளிமையான அணுகுமுறை காரணமாக பணிகள் எளிமையாகும். சிலரிடம் நீங்கள் காட்டும் சில எதிர்பார்ப்புகள் காரணமாக மனம் சங்கடம் உருவாகலாம். விழா ஒன்றில் சிறப்பு விருந்தினராக பங்கு பெறுவீர்கள்.

  உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - புறா

  First published:

  Tags: Oracle Speaks, Tamil News