ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு இன்று அலுவலகத்தில் புதிய வாய்ப்பு கிடைக்கும்... (ஏப்ரல் 23, 2022)

தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு இன்று அலுவலகத்தில் புதிய வாய்ப்பு கிடைக்கும்... (ஏப்ரல் 23, 2022)

தெய்வீக வாக்கு

தெய்வீக வாக்கு

Oracle Speaks | உங்கள் இலக்கை நெருங்கி விட்டீர்கள். ஆகவே, சற்று நிவாரணம் கிடைக்கலாம். பணம் சார்ந்த விஷயங்களில் நல்ல செய்தி காத்திருக்கிறது.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :

மேஷம்:

தற்போது உங்களைத் தேடி வரும் எதுவும் நல்ல செய்தியாக இருக்காது. தேவையின்றி எதையும் படிக்காதீர்கள். வீட்டில் வெகு விரைவில் கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெறலாம். எதிர்பார்த்த ஒப்புதல் கிடைக்கக் கூடும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - நட்சத்திரங்கள்

ரிஷபம்:

உடனடி தொடர்புடைய விஷயம் ஒன்றில் உங்களுக்கு பங்களிப்பு குறைவாக இருக்கிறது என உங்களுக்கு தோன்றலாம். நீங்கள் சொல்லும் ஆலோசனைகளுக்கு உள்ளேயும், வெளியேயும் பாராட்டு கிடைக்கும். வயிறு நலன் குறித்து எச்சரிக்கையாக இருக்கவும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - விளம்பரப் பலகை

மிதுனம்:

புதிய சலுகை மற்றும் வாய்ப்புகள் கிடைக்கும் நேரம் இது. இதற்காக நீங்கள் காத்திருக்கவில்லை என்றாலும், அதை நீங்கள் பயன்படுத்தக் கூடும். வீட்டில் தீர்வு காண வேண்டிய சிறிய பிரச்சினைகள் தோன்றலாம்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - முயல்

கடகம் :

செலவுக்குத் தேவையான வளம் வந்து சேரும். ஒரு நிகழ்ச்சி அல்லது நிகழ்வு ஒன்றை நீங்கள் ஒருங்கிணைக்க வேண்டியிருக்கும். சமூகம் சார்ந்த பணிகளில் நீங்கள் உள்ளீர்கள் என்றால், பாராட்டு கிடைக்கும் நேரம் இது.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - பார்சல்

சிம்மம்:

உங்கள் சொந்த வாழ்க்கைப் பயணத்திற்கு சில நாட்களில் நீங்களே கதை எழுத வேண்டியிருக்கும். அப்படியொரு நாள் இது. இலக்கு ஒன்றை செய்து முடித்து, அதற்கான பலன்களை பெறுங்கள். உங்கள் முயற்சிகளை சிலர் உன்னிப்பாக கவனிக்கின்றனர்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - சிலிகான் மோல்டு

கன்னி:

சீரான மனநிலையில் நீங்கள் காணப்பட்டாலும் கூட, மனதின் உள்ளே கவலைகள் அதிகரிக்கும். மீடியா, மார்க்கெட்டிங் போன்ற துறைகளில் இருப்பவர் என்றால் உங்களுக்கான வாய்ப்பு தேடி வருகிறது. உங்கள் உடமைகளை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - மாமரம்

துலாம்:

உங்களால் என்ன செய்ய முடியுமோ, அதைத் தாண்டி நீங்கள் ஆசைப்படுவதால் சற்று சோர்வு ஏற்படக் கூடும். நிறைய விஷயங்கள் வெகுவிரைவில் உங்களை சோர்வடைய வைக்கும். புத்துணர்ச்சிக்கான நேரம் எடுத்துக் கொண்டு, புது உறுதியோடு மீண்டு வாருங்கள்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - சுவர் கண்ணாடி

விருச்சிகம்:

பணம் ஈட்ட வேண்டும் என்ற உங்கள் பிரதான நோக்கம் வெற்றிகரமாக நிறைவேறலாம். முகம் தெரியாத ஒரு நபரின் உதவி உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். பொது இடத்தில் பேசும்போது கவனமுடன் இருக்கவும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - உள் அரங்கு செடி

தனுசு:

வெவ்வேறு துருவங்களை இணைக்க கடந்த காலத்தில் நீங்கள் மேற்கொண்ட முயற்சிகளுக்கு பலன் கிடைக்கும். வீட்டில் சில சண்டைகள் ஏற்படலாம். நீங்கள் சமாதானம் செய்து வைக்க வேண்டியிருக்கலாம்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - அம்பர் கல்

மகரம்:

சிறு எதிர்ப்பு அல்லது ஆட்சேபம் என்பதே பெரும் வாதத்திற்கு வழிவகை செய்யும். ஆகவே, எதிர் கருத்துகளை தவிர்க்கவும். தனி முயற்சியைக் காட்டிலும் குழுவாக செயல்பட்டால் வெற்றி நிச்சயம். எழுதுவதை இருமுறை சரிபார்க்கவும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - மல்லிகைப்பூ

கும்பம்:

உங்கள் இலக்கை நெருங்கி விட்டீர்கள். ஆகவே, சற்று நிவாரணம் கிடைக்கலாம். பணம் சார்ந்த விஷயங்களில் நல்ல செய்தி காத்திருக்கிறது. உங்கள் திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - நோட்புக்

மீனம்:

காதல் உணர்ச்சியோடு இருப்பதை நீங்கள் விரும்புவீர்கள். ஆனால், அது உங்களுக்கு சிக்கலைத் தரும். உங்கள் எதிர்பார்ப்பு மற்றும் நடவடிக்கைகளில் இன்னும் யதார்த்தமாக நீங்கள் இருக்க வேண்டும். சரியான நேரத்தில் மூத்தவர்களின் ஆலோசனை தேடி வரும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - தங்க கடிகாரம்

Published by:Vaijayanthi S
First published:

Tags: Oracle Speaks