Home /News /spiritual /

தெய்வீக வாக்கு: இன்றைக்கு இந்த ராசியினர் மிகுந்த உற்சாகத்துடன் செயல்படுவீர்கள்... (மே 19, 2022)

தெய்வீக வாக்கு: இன்றைக்கு இந்த ராசியினர் மிகுந்த உற்சாகத்துடன் செயல்படுவீர்கள்... (மே 19, 2022)

தெய்வீக வாக்கு

தெய்வீக வாக்கு

முழுமையான ஆற்றல் நிரம்பியுள்ளதால் இன்றைய நாளை உங்கள் வசம் மாற்றிக் கொள்ளுங்கள்

மேஷம்:

இன்றைக்கு நீங்கள் மிகுந்த உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். இலக்கை நோக்கி ஆற்றல் முழுவதையும் செலவிடுவீர்கள். மாலையில் வெளியிடங்களுக்கு செல்ல வாய்ப்பு இருக்கிறது. பணிச்சுமை அதிகரித்தாலும் கட்டுப்பாட்டிற்குள் வரும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - மாணிக்கம்

ரிஷபம்:

சிலரை சந்திப்பதை நீங்கள் ஒத்திவைத்து வந்தீர்கள் என்றால், அந்த சந்திப்பை மேற்கொள்ள இன்று சிறந்த நாளாகும். தினசரி உடற்பயிற்சி இப்போது அவசியம், இல்லையெனில் மருத்துவரை சந்திக்க நேரிடும். வணிகம் சார்ந்து புதிய வாய்ப்பு வரும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - நீலமாணிக்கம்

மிதுனம்:

முழுமையான ஆற்றல் நிரம்பியுள்ளதால் இன்றைய நாளை உங்கள் வசம் மாற்றிக் கொள்ளுங்கள். புத்தாக்க சிந்தனைகள் உடனடியாக செயல்பாட்டுக்கு வரும். அதைச் செய்வதற்கு உங்களுக்கு முழுமையான ஒப்புதல் கிடைக்கும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - கருப்புக்கல்

கடகம்:

புதிய நண்பர் ஒருவர் உங்கள் வாழ்வில் கடந்து செல்லக் கூடியவராக இருப்பார். அவருக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம். வீட்டுப் பிரச்னைகளில் உடனடி கவனம் செலுத்தவும். வெளிநபர்களின் தலையீடு உங்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - விளக்குத்திரை

சிம்மம்:

உங்களை சுற்றியுள்ள விஷயங்களை ஏற்றுக் கொள்ளுங்கள். புதிய வழியை தேர்வு செய்ய நீங்கள் முயற்சி செய்தால் அது உங்களுக்கு பிரச்னையை கொடுக்கும். உங்கள் உரிமையாளரிடம் இருந்து சலுகைகள் கிடைக்கலாம்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - அடைக்கப்பட்ட பெட்டி

கன்னி:

உங்கள் அன்புக்குரியவர்களுக்கு உங்கள் கவனம் தேவைப்படும். கருத்து வேறுபாடுகள் இருந்தால் தீர்வு காணவும். புத்தாக்கம், வளர்ச்சியை நோக்கி உங்கள் மனது புத்துணர்ச்சி பெற வேண்டும். வாய்ப்புகளை நோக்கி திட்டமிடுங்கள்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - தோட்டம்

துலாம்:

பணியிடத்தில் முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னைகளில் உங்கள் தலையீடு தேவைப்படுகிறது. நன்றாக தூங்கவும். தூங்காமல் ஓய்வின்றி இருப்பதை தவிர்க்கவும். மாலையில் நண்பர் ஒருவர் உங்களை சந்திக்க கூடும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - அணில்

விருச்சிகம்:

குடும்ப விழாவிற்காக நீங்கள் செய்யும் சிறப்பான ஏற்பாடுகளுக்கு பாராட்டு கிடைக்கலாம். நாள் முழுவதும் என்ன செய்ய வேண்டும் என்பதை திட்டமிட்டு நேரத்தை சேமியுங்கள். நீங்கள் செய்யும் காரியம் நல்லதாகவே இருக்கும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - கிளி

தனுசு:

உங்கள் மன கவலைக்கு பல காரணங்கள் இருந்தாலும், விரைவில் நல்ல செய்தி கிடைக்கும். உங்களில் புத்தம் புதிய ஒருவரை உருவாக்குவதற்கான ஆற்றல் செயல்படத் தொடங்கியுள்ளது. முக்கிய முடிவு எடுக்கும் முன்பாக குடும்பத்தினர் உங்களை ஆலோசனை செய்வார்கள்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - சிவப்பு நிற ஆடை

மகரம்:

இன்னும் நன்றாக பயிற்சி செய்தால் நேரத்தை சேமிக்கலாம். புதிய திறனை கற்றுக் கொள்ளும்போது அது உங்களுக்கு உதவிகரமாக இருக்கும். உங்கள் இடத்தைப் பிடிக்க சுற்றியுள்ள பலர் போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றனர்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - நீலக்கல்

கும்பம்:

உங்கள் தனி வாழ்க்கையில் தாமதம் ஏற்படுவதற்கு முன், பின் அறியாத சில விஷயங்கள் காரணமாக இருக்கும். ஆழமாக சிந்தித்து செயல்பட்டால் ஆச்சரியம் மிகுந்த பலன்கள் கிடைக்கும். ஏதேச்சையான முடிவு மூலமாக நற்பலன் உண்டு.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - பச்சை நிறக்கல்

மீனம்:

உங்களை வெளிப்படுத்துவதற்கு இன்று சிறப்பான நாள் ஆகும். கடந்த ஆண்டு நீங்கள் செய்த சாதனைகளை நினைத்துப் பார்க்க வேண்டும். இன்றைய நாளிலும் உங்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - மரகதக்கல்
Published by:Vaijayanthi S
First published:

Tags: Oracle Speaks

அடுத்த செய்தி