Home /News /spiritual /

தெய்வீக வாக்கு: இந்த ராசியினர் இன்று (15 ஜூன் 2022) புதிய தொழிலில் முதலீடு செய்ய சாதகமான சூழ்நிலை உருவாகும்..!

தெய்வீக வாக்கு: இந்த ராசியினர் இன்று (15 ஜூன் 2022) புதிய தொழிலில் முதலீடு செய்ய சாதகமான சூழ்நிலை உருவாகும்..!

Deiviga Vaakku

Deiviga Vaakku

Rasi Palan | மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான தினசரி ராசி பலன் இதோ...

மேஷம்:

இன்றைய தினம் நிதியையும், ஆவணங்களையும் ஒழுங்கமைக்க வேண்டும். நீங்கள் ஒத்திப்போட்ட விஷயங்கள் விரைவாக உங்களை தேடி வரலாம். கடந்த காலத்தில் கைநழுவிய விஷயத்தில் நன்மை பெறுவதற்காக அதே விஷயத்தில் மீண்டும் இணைய முயற்சிக்கலாம்.

உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - பிங்க் கலர் ரோஜா ரத்தினக்கல்

ரிஷபம்:

இன்று உங்கள் மன அழுத்திற்கு மருந்தாக அமையும் வகையில், ஒரு சில மகிழ்ச்சியான செய்திகள் வரக்கூடும். மூத்தவர்கள் சொல்லும் அறிவுரைகளை அலட்சியப்படுத்தாதீர்கள், அது பிற்காலத்தில் உங்களுக்கே சிக்கலாக வரலாம். உங்களுக்காக கொஞ்ச நேரம் ஒதுக்கி ரிலாக்ஸ் செய்து கொள்ள ஏற்ற நாள்.

உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - மரப் பெட்டி

மிதுனம்:

இன்று நீங்கள் எதை திட்டமிட்டாலும் அதில் வெற்றி நிச்சயம். உங்கள் கணவன் / மனைவி உங்களிடமிருந்து சில விஷயங்களை நேரடியாகக் கேட்க வேண்டும், எந்த புரிதலும் அதற்கு ஈடுகொடுக்க முடியாது. உங்கள் பட்டியலில் தினம் வழக்கமான சோதனை மற்றும் மதிப்பாய்வு ஆகியவை இருப்பது போல் தெரிகிறது.

உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - பிரகாசமான நிறம் கொண்ட டை

கடகம் :

உங்களுக்கு நம்பகமான ஒருவர் அவரின் சப்போர்ட்டை உங்களுக்கு தெரியப்படுத்தலாம். நீங்கள் வியாபாரம் செய்யும் நபராக இருந்தால் பண வரவுக்கு வாய்ப்புள்ளது. சமீபத்தில் நீங்கள் எடுத்த சில முடிவுகளை ரிவ்யூ செய்து பார்ப்பது நல்லது.

உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - நோட்டு

சிம்மம் :

இன்று சாக்குபோக்கு சொல்லிவிட்டு, வேறு ஒருவரிடம் இருந்து நீங்கள் தப்பிக்கலாம். இறுதி முடிவை எடுக்க வேண்டும் என்பதற்காகவே சில விஷயங்களை நீங்கள் தள்ளிப்போட்டிருக்கலாம். தொலைந்து போன பொருள் திரும்பக் கிடைக்கும்.

உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - வெள்ளி தட்டு

கன்னி:

உங்களுக்குத் தெரியாமல் ஏதாவது ஒரு முடிவை எடுக்க முடிவு செய்திருந்தால், நீங்கள் ஆச்சரியப்படலாம். உங்களின் தற்போதைய பணியை விரிவுபடுத்தும் வகையில் புதிய வாய்ப்பு ஒன்று வர உள்ளது. உங்களுக்குப் பிடித்த ஒரு பொழுபோக்கில் நீங்கள் மீண்டும் கவனம் செலுத்த ஆரம்பிக்கலாம்.

உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - வெண்கல பொருள்

துலாம்:

நீங்கள் எதிர்பார்த்து காத்திருந்த மகிழ்ச்சியான செய்தி முன்னதாகவே கிடைக்க கூடும். குடும்பத்தில் யாருடனாவது மனஸ்தாபம் ஏற்பட வாய்ப்புள்ளது, எனவே தெளிவாக பேசுவது நல்லது. அவசரப்பட்டு முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டாம், அது பின்விளைவுகள் ஏற்படுத்தக்கூடும்.

உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - புதிய அப்ஹோல்ஸ்டரி

விருச்சிகம்:

நெருங்கிய நண்பர் சில எதிர்மறை உணர்ச்சிகளை அனுபவிக்கலாம், அதிலிருந்து வெளிவர உங்கள் உதவி தேவைப்படலாம். இன்று நீங்கள் ஆற்றல் குறைவாக உணரலாம் ஆனால் அது தற்காலிகமானது. வெளிப்புற செயல்பாடு மீண்டும் செயலில் இறங்க உங்களுக்கு உதவக்கூடும்.

உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - சர்க்கரை பாகு

தனுசு :

நீங்கள் தேவையில்லாமல் மிகவும் உணர்ச்சிவசப்படுவதை உணரலாம். விரைவில் உங்கள் பணியிடத்தில் சாதகமான முன்னேற்றம் ஏற்படும். வெறுமனே பாசாங்கு செய்பவர்களை புறக்கணித்துவிட்டு, உண்மையிலேயே நல்லவர்கள் யார் என்பதை நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும்.

உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - சோலார் பேனல்

மகரம் :

நீங்கள் மிகவும் நம்பிக்கைக்குரியவர்களாகக் கருதும் சில நபர்கள் நம்பிக்கைக்கு தகுதியற்றவர்களாக இருக்க வாய்ப்புள்ளது. குடும்ப உறுப்பினர் ஒருவரிடமிருந்து வரும் செய்தி மன உளைச்சலை ஏற்படுத்தலாம். புதிய தொழிலில் முதலீடு செய்ய நீங்கள் திட்டமிட்டிருந்தால், அதற்கான சாதகமான சூழ்நிலை உருவாகும்.

உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஃபேஷன் லேபிள்

கும்பம்:

உங்கள் முடிவில் உறுதியாக இருக்க முயற்சி செய்யுங்கள். பணியில் இருக்கும் சீனியர்கள் உங்கள் செயல்திறனை நுட்பமாக பாராட்டலாம். கூடுதல் பொறுப்பு உங்களுக்கு வரக்கூடும். உங்களை தெளிவாக வெளிப்படுத்துங்கள்.

உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - வண்ண கண்ணாடி

மீனம் :

முன் கூட்டியே திட்டமிட்டு, ஒரு வேலையைச் செய்து முடிப்பதற்குத் தேவையான திறமையைப் பெற வேண்டிய நாள். உங்கள் முதலாளிக்கு சில உறுதிப்பாடு தேவைப்படலாம். உங்கள் கனவு நெருங்கி வருவதை நீங்கள் உணரலாம். உங்களை விட வயதில் மூத்தவர்களிடம் ஆலோசனை பெறுவது நல்லது.

உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - நீல படிகம்
Published by:Selvi M
First published:

Tags: Oracle Speaks

அடுத்த செய்தி