Home /News /spiritual /

தெய்வீக வாக்கு: இந்த ராசியினர் தங்கள் முடிவுகளில் உறுதியாக இருக்க வேண்டிய நாள் இன்று (7 ஜூன் 2022)..!

தெய்வீக வாக்கு: இந்த ராசியினர் தங்கள் முடிவுகளில் உறுதியாக இருக்க வேண்டிய நாள் இன்று (7 ஜூன் 2022)..!

தெய்வீக வாக்கு

தெய்வீக வாக்கு

Rasi Palan | மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான தினசரி ராசி பலன் இதோ...

மேஷம்:

உங்கள் ஐடியாக்கள் அனைத்திற்கும் செயல்வடிவம் கொடுப்பது என்பது சுலபமான காரியம் அல்ல, அதற்கு முயற்சியும், அதிக அணுகுமுறையும் தேவை. எதிர்பாராத செயல்களால் உங்களுடைய வழக்கமான வேலைகளில் தடுமாற்றம் ஏற்படலாம். உங்களால் ஈர்க்கப்பட்ட நபர் ஒருவர், அவரே உங்களை தொடர்பு கொள்ள முயற்சிக்கலாம்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம்- இறகு

ரிஷபம்:

உங்கள் இலக்குகள் முன்பை விட இப்போது அதிக தெளிவை பெற்றுள்ளன. நீங்கள் முன்வைக்கப்போகும் விஷயத்திற்கு சரியான தேவை உருவாகியிருக்கலாம். நீங்கள் ஒரு சிறிய அளவிலான வணிகராக இருந்தால், ஒரு நல்ல திட்டம் உங்கள் வேலையை விரிவுபடுத்தலாம்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம்- பறவை

மிதுனம்:

உங்களுடைய இலக்கும் குறிக்கோளும் என்றுமே இல்லாத அளவிற்கு இன்று உங்கள் மனதை ஆக்கிரமித்து இருக்கலாம். முக்கியமான ஒரு விஷயத்தால் நீங்கள் திசை திருப்பப்படவோ, பதட்டமாக உணரவோ வாய்ப்புள்ளது. உங்கள் ரகசியங்கள் அனைத்தையும் அந்நியருடன் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது நல்லது.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம்- சிலந்தி

கடகம்:

சுதந்திரமாக உங்கள் பணிகளை செய்ய ஏதோ தடை உருவானது போல் உணரலாம். இதற்கு வேலையில் திடீரென உருவான சலிப்பும் ஒரு காரணமாக இருக்கலாம். நீங்கள் படிக்கும் இடம் அல்லது வேலை செய்யும் இடத்திலிருந்து ஒரு நல்ல செய்தி காத்திருக்கிறது.

நீங்கள் சுதந்திரமாக உங்கள் பணிகளைச் செய்வதற்கு உள்ளே இருந்து தடையாக உணரலாம். சலிப்பான வழக்கமும் அதைச் சேர்க்கலாம்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம்- இரண்டு குருவிகள்

சிம்மம்:

வாழ்க்கையில் தற்செயல் நிகழ்வு என்று எதுவும் கிடயாது. திடீரென ஏதாவது ஒரு விஷயம் உங்கள் வீட்டு வாசலுக்கு வந்தால், அது உங்களுக்கானது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். தொடக்கத்தில் சிறிது தயக்கம் இருக்கலாம். வசமாக சிக்கிய ஒரு விஷயத்தில் இருந்து வெளியே வரலாம்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம்- பீங்கான் குவளை

கன்னி:

இன்று சோம்பலாகவும், அனைத்து வேலைகளையும் பிறகு பார்த்துக்கொள்ளலாம் என தள்ளிப்போடக்கூடிய மன நிலையிலும் இருக்கலாம். ஆனால் இது உங்கள் வேலையை பாதிக்கக்கூடும். இந்த கட்டத்தை கடந்து செல்வதே சவால். உங்களுடன் உறவில் இருந்த ஒருவர் நிம்மதியை உணரலாம்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம்- நீல நிற மண்பாண்டங்கள்

துலாம்:

அடுத்த லெவலுக்குச் செல்ல நீங்கள் தயாராக இருக்கலாம், ஆனால் புதிய பொறுப்புக்களை ஏற்றுக்கொள்ள மனதை கட்டுப்படுத்த வேண்டும். கவனம் செலுத்த வேண்டிய சில விஷயங்கள் கண்டுகொள்ளப்படாமல் இருக்கலாம். ஒரு குறுகிய பயணம் தேவையான தெளிவைக் கொண்டுவரும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம்- கழுகு

விருச்சிகம்:

பழைய மற்றும் நம்பகமான நண்பர்களுடனான சந்திப்பு சில புதிய எனர்ஜியைக் கொண்டுவரும். நீங்கள் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்ய திட்டமிட்டால், இன்னும் சில காலம் தள்ளிப்போடலாம். பொழுதுபோக்கு துறையில் இருப்பவர்கள் நல்ல வெற்றியைக் காண்பார்கள்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம்- அணில்

தனுசு:

நீங்கள் எதிர்பார்த்த முடிவுகளைப் பெற விரும்பினால், பொறுமை முக்கியமானது. ஒரு மூத்தவரின் பரிந்துரை உங்களுக்கு அதிக வணிகத்தை பெற உதவும். உங்கள் தொழில்முறை பற்றி நல்ல விஷயங்கள் பிறருக்கு பரப்பப்பட்டு வருகிறது.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம்- தோட்டம்

மகரம்:

உங்கள் முடிவுகளில் நீங்கள் உறுதியாக இருக்க வேண்டும். நீங்கள் திட்டமிட்டபடி பல விஷயங்கள் நடக்காமல் போகலாம். ஒரு புதியவர் அல்லது உங்களுக்கு கீழே பணியாற்றிவருபவர் உங்களுக்கான அங்கீகாரம், பதவி போன்றவற்றை கைப்பற்றலாம்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம்- கிளி

கும்பம்:

பொறுமை பொன் போன்றது என்பார்கள், ஆனால் உங்கள் விஷயத்தில் இனி அது வேலைக்கு ஆகாது. உங்கள் வேலையை விரிவுபடுத்த தீயாய் களத்தில் இறங்கி வேலை செய்ய வேண்டிய நேரம் இது. காலக்கெடுவை வலியுறுத்தும் தெளிவான தகவல்தொடர்பு உங்களுக்கு வந்திருக்கலாம்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம்- கூடு

மீனம்:

உடனடி வெற்றி அல்லது முடிவுகளைத் துரத்திக் கொண்டிருந்தால், நீங்கள் ஏமாற்றத்திற்கு ஆளாகலாம். உங்கள் வாழ்க்கை துணை அவர்களின் வேலையில் மிகவும் கவனச்சிதறலாக இருக்கலாம் மற்றும் நீங்கள் இல்லாதது போல் அவர் உணரலாம்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம்- ஆமை
Published by:Selvi M
First published:

Tags: Astrology, Oracle Speaks

அடுத்த செய்தி