Home /News /spiritual /

தெய்வீக வாக்கு: இந்த ராசியினர் இன்று யாரிடம் பேசினாலும் கவனம் தேவை... (மே 22, 2022)

தெய்வீக வாக்கு: இந்த ராசியினர் இன்று யாரிடம் பேசினாலும் கவனம் தேவை... (மே 22, 2022)

தெய்வீக வாக்கு

தெய்வீக வாக்கு

Rasi Palan | மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான தினசரி ராசி பலன்...

மேஷம்:

உங்களைச் சுற்றி இருக்கும் ஆற்றல் நிலையாக இல்லாமல் சற்று குழப்பமாக இருக்கும். எனவே நீங்கள் எதை செய்ய விரும்பினாலும் அது நடக்காமல் போகலாம். பிறரது கவனத்தை ஈர்க்க நீங்கள் புதிய வழிகளை கண்டுபிடிக்க வேண்டியிருக்கலாம். பொது வர்த்தகத்தில் உள்ளவர்கள் பிறரை தொடர்பு கொள்ளும் போது கவனம் தேவை.

உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு டெக்னிகலர் புகைப்படம்

ரிஷபம்:

உங்கள் மீது ஆதிக்கம் செலுத்தி கொண்டிருப்பவர்களுக்கு நீங்கள் யார் என்பதை காட்டுவது பற்றி சிந்திப்பீர்கள். நீங்கள் புதிய வேலைகளை எதிர்பார்த்து காத்திருந்தால் அதற்கான முயற்சிகளை இன்று துவக்கலாம். உங்களது உணர்ச்சிகளை சம்பந்தப்பட்டவர்களுக்கு தெரியப்படுத்துவது முக்கியம்.

உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு கார்ட்போர்ட்

மிதுனம்:

நீங்கள் இன்று அதிக நம்பிக்கையுடனும், நட்புணர்வுடனும் இருப்பதை போல உணர்வீர்கள். கடந்த சில நாட்களாக இருந்து வந்த சில சிக்கல்கள் இன்றோடு தீரும் வாய்ப்புகள் அதிகம். நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டிய முக்கிய ஆலோசனை ஒன்று உங்கள் மனைவியால் சொல்லப்படலாம். உங்களுக்கான வாய்ப்பை அல்லது ஆர்வத்தை தொடர நீங்கள் திட்டமிட்திருந்தால் அதற்கான முயற்சி இன்று தேவைப்படுகிறது.

உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு சோலோ பர்ஃபாமென்ஸ்

கடகம்:

இன்று உங்கள் மனதில் பல புதிய எண்ணங்கள் அலைமோதலாம். உங்களது துறை சார்ந்த சீனியர் ஒருவரை இன்று சந்திக்க நேரிடலாம். அவர் வழங்கும் ஆலோசனை உங்களுக்கு பலனளிக்கும். உங்கள் வாழ்க்கை அல்லது காதல் துணையுடன் வாக்குவாதம் ஏற்படுவதற்கான சாத்தியம் இருக்கிறது.

உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு பழமையான பொருள்

சிம்மம்:

உங்கள் எண்ணம் நேர்மறையானதாக இருந்தாலும், தொடர்பு கொள்ளும் முறையில் மாற்றம் தேவை. கடந்த சில மாதங்களாக நஷ்டத்தில் இருந்த உங்கள் வியாபாரத்தில் இன்று முன்னேற்றம் காணப்படும். மருந்து வியாபாரம் செய்பவர்களுக்கு இன்று நல்ல லாபம் கிடைக்கும். உங்கள் முதல் அபிப்ராயம் இப்போது யூகிக்க கூடியதாக மாறியிருக்கலாம்.

உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு ரோலர்

கன்னி:

உங்கள் எதிர்காலம் குறித்து திட்டமிட இன்று நீங்கள் சில வெளிப்புற ஆதாரங்களை அணுகினால் பலன் கிடைக்கும். சில விஷயங்களில் உங்களால் தெளிவாக முடிவெடுக்க முடியாமல் திணறலாம். ஒரு பயணத்தை திட்டமிட நினைத்தால் தயங்காமல் திட்டமிடுங்கள். இன்று உங்களது நிதி நிலைமை சீராக இருக்கும்.

உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு தேனீ

துலாம்:

உங்கள் திறமையை ஏற்று கொண்டு பலரும் உங்களை இன்று பாராட்ட கூடும். அதே போல இதுநாள் வரை மந்தமாக சென்று கொண்டிருந்த உங்களது சில வேலைகள் இன்று பரபரப்பாக செல்லலாம். உங்கள் ஆளுமையில் இன்று நேர்மறை மாற்றம் தெரியும். அது உங்களை சிறந்த நபராக அடையாளம் காட்டும்.

உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு சிவப்பு மலர்

விருச்சிகம்:

கடந்த காலத்தில் உங்களால் எடுக்கப்பட்ட சில முடிவுகள் இன்று நேர்மறை பலன்களை அளிப்பதை பார்ப்பீர்கள். நீங்கள் உறுதியாக இருக்கும் விஷயங்களை உங்களை சுற்றி உள்ளவர்களும் ஏற்று கொள்வார்கள். வேலைகளில் கவனம் செலுத்த விடாமல் பல வேண்டாத விஷயங்கள் நினைவிற்கு வரலாம். எனினும் அதை தூக்கி போட்டு விட்டு உங்கள் வேலைகளை கவனிக்க வேண்டும்.

உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - உங்களுக்கு மிகவும் பிடித்த இனிப்பு

தனுசு:

நீங்கள் ஒரு சட்ட வழக்கு விவகாரத்தில் ஈடுபட்டிருந்தால் உங்கள் ஆதாரங்கள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்யவும். இன்று பரபரப்பாக பல வேளைகளில் ஈடுபடலாம். உங்களை சுற்றி உள்ளவர்கள் உங்கள் ரகசியத்தை வெளியே சொல்ல கூடும் என்பதால், யாரிடம் பேசினாலும் கவனம் தேவை.

உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் – ஒரு சேஜ் தாவரம்

மகரம்:

நீங்கள் செய்து முடித்துள்ள விஷயங்களில் இன்று வெற்றியை காணலாம். உங்கள் கடின உழைப்புக்கு இன்று சரியான பலன்கள் கிடைக்கும். உங்கள் மனம் தெளிவாகவும் சீராகவும் இருப்பதை போல உணர்வீர்கள். உங்களுக்கு நெருக்கமான நண்பர்களுடன் பேசுவது மன அமைதியை தரும்.

உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் – ப்ளுபெர்ரிக்கள்

கும்பம்:

கல்வி மற்றும் வாழ்க்கையில் முன்னேற்றம் காண்பதற்கான நேரம் இன்று சாதகமாக இருக்கலாம். எதிர்பார்த்த இடங்களில் இருந்து உங்களுக்கு தேவையான நிதி உதவிகளை பெறுவீர்கள். நீங்கள் மிகவும் நேசிப்பவரின் சில நடைத்தைகள் காரணமாக நீங்கள் எரிச்சலடைவீர்கள்.

உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் – ஒரு மஞ்சள் மண் பானை

மீனம்:

குடும்ப நண்பரிடமிருந்து ஒரு வேலை வாய்ப்புக்கான பரிந்துரை வரலாம். உங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணியில் கவனம் செலுத்துவது நீங்கள் எதிர்பார்க்கும் பலனைத் தரும். இன்று உங்களுக்கு கவன சிதறல்கள் இருக்கலாம். பயணத்தை பொறுத்த வரை ஒரு சிறிய வெளியூர் பயண அனுபவம் உங்களுக்கு ஒரு புதிய கண்ணோட்டத்தை கொடுக்க கூடும்.

உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் – ஒரு பட்டு துணி
Published by:Vaijayanthi S
First published:

Tags: Oracle Speaks

அடுத்த செய்தி