Home /News /spiritual /

தெய்வீக வாக்கு: இந்த ராசியினர் இன்று(மே 26, 2022) ஒரு செல்வாக்கு மிக்க பிரபல நபரை சந்திக்க நேரிடலாம்..

தெய்வீக வாக்கு: இந்த ராசியினர் இன்று(மே 26, 2022) ஒரு செல்வாக்கு மிக்க பிரபல நபரை சந்திக்க நேரிடலாம்..

தெய்வீக வாக்கு

தெய்வீக வாக்கு

Rasi Palan | மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான தினசரி ராசி பலன் இதோ...

மேஷம்:

நீங்கள் ஒரு புதிய உறவை தேடுகிறீர்கள் என்றால் உங்கள் உணர்வுகளை ஏற்க தயாராக இருக்கும் ஒருவர் உங்களை சுற்றி ஏற்கனவே இருக்கலாம். ஒரு புத்திசாலித்தனமான நபரின் ஆலோசனை உங்கள் நாளை மதிப்புக்குரியதாக மாற்றும்.

உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு கிளி

ரிஷபம்:

உங்களுக்குள் இருக்கும் சக்தி உங்களை தனித்துவமாக்குகிறது மற்றும் உங்கள் வசீகரமும் இணைந்து இன்று செயல்பட கூடும். இன்று உங்களுக்கு புதிய மற்றும் பயனுள்ள நண்பர்கள் கிடைப்பார்கள். பழைய விஷயங்களை மறந்து விட்டு நிகழ்காலத்திற்குள் வருவது தான் உங்களுக்கு நல்லது.

உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு அட்டை பெட்டி

மிதுனம்:

ஒரு புதிய வாய்ப்புக்காக நீங்கள் காத்திருக்கிறீர்கள் என்றால் அந்த காத்திருப்பு இன்று பயனுள்ளதாக இருக்கும். நீங்கள் உங்களை சிறப்பாக வெளிப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படலாம். உங்கள் பெற்றோர்களில் ஒருவரின் வாழ்க்கை உங்களை ஆழ்மனதில் பாதிப்பை ஏற்படலாம்.

உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு வண்ண கண்ணாடி

கடகம்:

ஒப்பீட்டளவில் இன்று உங்களுக்கு எளிமையான நாள். உங்களுக்கு நெருக்கமான ஒருவர், உங்களை தீவிரமாக சிந்திக்கத் தூண்டும் வகையில் ஏதாவது ஒன்றை சொல்ல கூடும். இன்று உங்களுக்கு வெளிப்புற அனுபவம் புத்துணர்ச்சியூட்டுவதாக இருக்கலாம்.

உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - உலர்ந்த மலர்கள்

சிம்மம்:

வேலையில் சில புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வர கூடும். குடும்ப சூழலை பற்றி நீங்கள் கவலை கொண்டிருந்தால் இன்று அதற்கு தீர்வு கிடைக்கலாம். உங்களது சுய ஒழுக்கத்திற்காக நீங்கள் சில புதிய விதிகளை கடைபிடிக்க வேண்டியிருக்கும்.

உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு உண்டியல்

கன்னி:

நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த காரியம் இன்று நிறைவேறும். நீங்கள் சொந்த வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தால் திடீரென்று இன்று அதிக லாபம் பெறலாம். வெளியாட்களில் சிலர் உங்களை பயன்படுத்தி கொள்ள நினைக்கலாம். எச்சரிக்கையாக இருங்கள்.

உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - வாசனை மெழுகுவர்த்திகள்

துலாம்:

தெளிவான உள்ளம் கொண்ட ஒருவர் உங்களுடன் இன்று பார்ட்னராகும் விருப்பத்தை வெளிப்படுத்தலாம். நீங்கள் இன்று ஒரு செல்வாக்கு மிக்க நபரை சந்திக்க நேரிடலாம், அவர் பிரபலமாகவும் இருக்கலாம். முதலீடு செய்வதற்கு முன் உங்கள் அபாயங்களை கணக்கிட வேண்டும்.

உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு மண்பானை

விருச்சிகம்:

இன்று நீங்கள் மதிப்பு மிக்க வாய்ப்புகளை தவற விட நேரிடும். நீங்கள் நேசிப்பவரை பற்றிய உங்களுக்கு தெரிந்த சில செய்திகள் முழுமையடையாமல் இருக்கலாம். நீங்கள் பேசவே யோசித்த நபரிடம் இன்று நீங்கள் சென்று பேச கூடும்.

உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு தீப்பந்தம்

தனுசு:

உங்களுக்கு வரும் சீரற்ற பணிகள் அல்லது பொறுப்புகளை நீங்கள் தவிர்த்து கொள்வது நல்லது. புதிதாக நீங்கள் ஏற்று கொள்ளும் பொறுப்புகள் உங்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தலாம். உங்கள் எண்ணங்களை மிகவும் பொருத்தமான நேரத்திற்கு ஒதுக்கலாம்.

உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு நட்சத்திரக் கூட்டம்

மகரம்:

வேலையில் நிலவும் குழப்பங்களை தீர்ப்பதே இன்று உங்களுக்கு முதன்மையான நோக்கமாக இருக்கும். உங்களுக்கு யாருடனாவது பிரச்சனைகள் இருந்தால் அதை சுமுகமாக பேசி தீர்த்து கொள்ள வேண்டிய வாய்ப்புகள் வந்தால் ஏற்று கொள்ளுங்கள்.

உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு செல்ல பிராணி

கும்பம்:

உங்கள் வாழ்க்கையில் ஒரு புதிய பேட்டர்ன் உருவாகி வருகிறது, இது பழைய மற்றும் மறக்கப்பட்டதை மீண்டும் உங்கள் வாழ்வில் அல்லது நினைவில் கொண்டு வரக்கூடும். உங்கள் பழைய தொடர்புகளுடன் இன்று நீங்கள் மீண்டும் இணைய கூடும்.

உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு சூரியகாந்தி

மீனம்:

உங்களது தனிப்பட்ட காரணங்களுக்காக இன்று அல்லது விரைவில் வெளியூர் பயணம் செய்யும் வாய்ப்பு உங்களுக்கு ஏற்படலாம். வங்கி கடனுக்கு விண்ணப்பித்து விட்டு நீண்ட நாட்களாக காத்திருந்தால் இன்று நீங்கள் வங்கியிடமிருந்து ஒப்புதல் பெறலாம்.

உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு அலமாரி
Published by:Selvi M
First published:

Tags: Astrology, Oracle Speaks

அடுத்த செய்தி