ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு இன்று (மே 24, 2022) பழைய நண்பர்களை சந்திக்க வாய்ப்புள்ளது..

தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு இன்று (மே 24, 2022) பழைய நண்பர்களை சந்திக்க வாய்ப்புள்ளது..

தெய்வீக வாக்கு

தெய்வீக வாக்கு

Rasi Palan | மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான இன்றைய தினசரி ராசிபலன்...

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

மேஷம் :

நிலுவையில் இருக்கும் வேலைகளை தொடரவும், பழைய கடன்களை திருப்பிச் செலுத்தவும் நல்ல நாள். லேசான தொற்று அல்லது தலைவலி இருந்தாலும் உடனே கவனம் செலுத்துங்கள். வாக்குவாதத்தின் போது அமைதியாக இருக்க முயற்சியுங்கள், இது எதிர்காலத்திற்கு நல்லது.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - தோட்டம்

ரிஷபம்:

இன்றைய தினத்தின் ஆற்றல் சக்தி வாய்ந்தது, எனவே சில புதிய வேலைகளைத் தொடங்க வைக்கும். யாராவது கடன் கேட்டால் பணிவுடன் மறுக்கவும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - இரண்டு இறகுகள்

மிதுனம்:

உட்புறம் நீங்கள் வலுவாக இருந்தாலும், உங்கள் உணர்ச்சிகளை தூண்டி மற்றவர்கள் பலன் அனுபவிப்பார்கள். சமநிலையை அடைய பேச்சுவார்த்தை உத்திகள் தேவைப்படும். ஒரு சக ஊழியர் உதவி கேட்கலாம், அது உண்மையானதாக இருக்கும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - கூழாங்கற்கள்

கடகம்:

நன்கு அறிமுகமான பழைய நபரை மீண்டும் சந்திக்க வாய்ப்புள்ளது. வெளியே போய் யாரையாவது சந்திக்க வேண்டும் என திட்டமிட்டிருந்தால் அதற்கு வானிலை சாதகமாக அமையாது. நீங்கள் எதையாவது ஆதரிக்க நினைத்திருந்தால் அதற்கு இப்போது சரியான தருணம்

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - கைவினையால் செய்யப்பட்ட காகிதம்

சிம்மம்:

அறிவிக்கப்படாமல் விருந்தாளிகள் வீட்டிற்கு திடீரென வரலாம். நல்ல செய்தி நிறைந்த நாள். நிலுவையில் உள்ள பாக்கிகள் செலுத்தப்படலாம். உங்களுடன் பணியாற்றும் ஊழியர் ஒருவர் வேலை சம்பந்தமான குறையை உங்களிடம் கொண்டு வரலாம், அதற்கு முன்னுரிமை அளித்து தீர்த்து வையுங்கள்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - முத்துக்கள்

கன்னி:

பணியிடத்தில் சூழ்நிலை சாதகமாக இருக்கும். வீட்டிலும், அலுவலகத்திலும் ஆவணங்களை சரியான இடங்களில் வைத்திருங்கள். தூக்கம் இல்லாமல் தவித்து வருகிறீர்கள், இன்றிரவு நல்ல ஆழ்ந்த தூக்கம் பெறுவதில் கவனம் செலுத்துங்கள்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - வீட்டு வாசல்

துலாம்:

அக்கறையுடன் இருப்பது உங்களை பலவீனமாக்காது. உங்கள் வலுவான புள்ளிகளை முன் வைக்கவும். புதிய செய்முறையை முயற்சிக்க இது ஒரு சிறந்த நாள். உங்கள் உடல்நிலையில் கூடுதல் கவனம் செலுத்துங்கள்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ரெட் ஸ்கார்ப்

விருச்சிகம்:

கனவுகள் அல்லது கெட்ட கனவுகள் ஆழ் மனதின் பயம் மட்டுமே, அவற்றை பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம். எதிர் பாலினத்தைச் சேர்ந்த ஒருவர் உங்கள் கவனத்தை ஈர்க்கலாம். இன்றைய தினம் பழைய நண்பர்களை சந்திக்க வாய்ப்புள்ளது.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - செங்கல் சுவர்

தனுசு:

நெருங்கிய ஒருவர் உங்களை மிகவும் மிஸ் செய்வார். இன்று உங்கள் அன்புக்குரியவர்களுக்காக நேரம் ஒதுக்க தவறாதீர்கள். மாலையில் ஒரு வெளியூர் பயணம் காத்திருக்கிறது. ரெகுலர் மெடிக்கல் செக்அப் செய்வது பலனுள்ளதாக இருக்கும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - நியான் சைன்

மகரம்:

இன்றைய தினத்தை உங்களுடைய பழைய நினைவுகள் ஆட்கொள்ளும். உங்கள் தாயைப் பாருங்கள், அவர் உங்கள் கவனத்தை ஈர்க்க விரும்பலாம். பழைய அணுகுமுறைக்கு புதிய திட்டத்தை உருவாக்கவும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - கண்ணாடி பாட்டில்

கும்பம்:

உங்கள் பயம் இப்போது கட்டுப்பாட்டில் உள்ளது. இனி கெட்ட கனவுகள் இல்லை, காலம் மாறிவிட்டது. சமீபத்திய மாதங்களில் உங்களுக்கு நடந்த நல்ல விஷயங்களுக்கு நன்றியுள்ளவர்களாக இருப்பீர்கள். உங்களுக்கு கூடுதல் பொறுப்பு கிடைக்க வாய்ப்பு உள்ளது.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஆலமரம்

மீனம்:

உணர்ச்சி ரீதியாக உங்கள் குடும்பத்திடம் இருந்து ஆதரவு கிடைக்கும், நீங்கள் அவர்களுடன் அதிக நேரம் செலவிட வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள். புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும் வாய்ப்பு உள்ளது. மருத்துவ நிபுணர்களுக்கு வழக்கத்தை விட அதிக வேலையாக நாள் உள்ளது. அரசு அதிகாரிகளுக்கு இடையூறுகள் ஏற்படும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - பறவைகள் கூட்டம்

First published:

Tags: Astrology, Oracle Speaks