Home /News /spiritual /

தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு இன்று வேலையில் ஒரு புதிய நபரிடம் இருந்து பாராட்டு கிடைக்கும்..

தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு இன்று வேலையில் ஒரு புதிய நபரிடம் இருந்து பாராட்டு கிடைக்கும்..

தெய்வீக வாக்கு

தெய்வீக வாக்கு

Rasi Palan | மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான தினசரி ராசி பலன் இதோ...

மேஷம்:

பணம் சம்பந்தமாக இன்று உங்களுக்கு மிகவும் சாதகமான நாளாகவும், நல்ல செய்தியும் கிடைக்கும். சமீபமாக உங்களைச் சுற்றி நடக்கும் விஷயங்கள் உங்களுக்கு அயர்ச்சியை ஏற்படுத்தி இருக்கும். அதில் இருந்து விரைவில் விடுபட்டு விடுவீர்கள். உங்களுக்கு தெரிந்த நபர் ஏதேனும் சட்ட சிக்கலில் மாட்டிக்கொள்ளலாம்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – மஞ்சள் சஃபையர்

ரிஷபம்:

ஒரு புதிய நபர் உங்கள் வாழ்வில் ஆர்வத்தை ஏற்படுத்துவதோடு, கவனச் சிதறலையும் உண்டாக்கலாம். வழக்கத்தை விட தற்போது அதிக குழப்பத்தில் இருப்பதான சூழ்நிலை ஏற்படும். உங்களால் செய்யமுடியாத எந்த ஒரு வேலையையும் நீங்கள் கமிட் செய்து கொண்டு தடுமாற வேண்டாம்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – நீல நிற கிறிஸ்டல்

மிதுனம்:

நீங்கள் சமீபத்தில் முடித்துக் கொடுத்த ஒரு வேலையால் நீங்கள் மிகவும் சோர்வாக உணர்வீர்கள். எனவே நீங்கள் அடுத்த கட்டத்திற்கு செல்ல உங்களுக்கு கொஞ்சம் ஓய்வு தேவை. அது மட்டுமின்றி உங்களைத் தொடர்பு கொள்வதற்காக, நீண்ட நாட்களாக யாரோ ஒருவர் காத்திருக்கிறார்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – வெள்ளி நகை

கடகம்:

நீங்கள் இன்று ஷாப்பிங் செய்ய திட்டமிட்டிருந்தால். அதை செயல்படுத்தும் நாளாக இன்று அமையும். அதே நேரத்தில் நீங்கள் அலுவலகத்தில் முடிக்க வேண்டிய வேலைகளும் காத்திருக்கும். உங்கள் வழக்கமான வேலைக்கு, வீட்டில் உள்ள பணியாட்களால் பாதிப்பு வரும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – சாம்பல் பவுச்

சிம்மம்:

நீங்கள் கடந்த காலத்தில் மறுத்த ஒரு வாய்ப்பு தற்பொழுது மீண்டும் தேடி வரும். அதை பயன்படுத்திக் கொள்ள முயற்சி செய்யுங்கள். எந்த ஒரு விஷயத்தைப் பற்றியும் நீங்கள் அதிகமாக ஆய்வு செய்வது குழப்பத்தைத்தான் ஏற்படுத்தும், சாதகமான முடிவுகளைத் தராது.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – மரக்குச்சி

கன்னி:

ஒரு சவாலான பிரச்சினையில் நீங்கள் சிக்கிக் கொண்டிருக்கும் பொழுது, எதிர்பாராத இடத்தில் இருந்து ஆதரவு கிடைக்கும். யாரேனும் ஒருவரை சந்திக்க முடியுமா என்று நீங்கள் யோசித்துக் கொண்டிருக்கும் போது அந்த சந்திப்பு நிகழ்ந்து விட்டால் அது உங்களுக்கு மிகப்பெரிய அளவில் சாதகமாக மாறும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – மண் பானை

துலாம்:

ஒரு கெட்-டு-கெதரில் கலந்து கொள்வது ஓய்வாக உணரவும், சுவாரஸ்யமான உரையாடல்களில் ஈடுபடவும் வாய்ப்பு கிடைக்கும். உங்களை நீண்ட நாட்களாக ரசித்து வரும் ஒருவர் இப்பொழுது உங்களுடைய கவனத்தை ஈர்ப்பார். மேலும், நீங்கள் விரும்பும் ஓய்வு பெறுவதற்கு நீங்கள் நீண்ட நடைப்பயணம் மேற்கொள்ளலாம்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – தங்க ஆபரணம்

விருச்சிகம்:

நீங்கள் விரும்பிய அதிகாரம் இன்று உங்கள் கையில் இருக்கிறது. பணம் வரவு எந்த சிக்கலுமின்றி காணப்படுகிறது. நீங்க எந்த விஷயத்தை நடத்த வேண்டும் என்று விரும்புகிறீர்களோ அது உங்களுக்கு சாதகமாக நடக்கும். குடும்பத்தில் எந்தவிதமான பிரச்சனையிலும் ஈடுபட வேண்டாம்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – மர ஸ்பூன்

தனுசு:

உங்களுக்கு வழங்கப்பட்ட ஒரு வேலையை, நேரமின்மை காரணமாக நீங்கள் தள்ளி போடலாம். எனவே அதற்கு நீங்கள் முன்கூட்டியே தயாராக இருந்து கொள்ளுங்கள். உங்கள் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை சீரான நிலையில் வைத்திருப்பதில் கவனம் செலுத்த வேண்டும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – லெதர் பை

மகரம்:

வழக்கத்தை விட கொஞ்சம் வித்தியாசமான முறையில் உங்கள் வாழ்க்கை முறையை அமைத்துக் கொள்வது உங்களுக்கு மிகப்பெரிய அளவில் நிம்மதியை கொடுக்கும். உங்களின் பழைய நண்பர் உங்களை சந்திப்பதற்கு முயற்சி செய்யலாம். சிந்தனைகளை எல்லாம் ஒருமுகப்படுத்தி திட்டங்களை மேற்கொள்வது சாதகமாக அமையும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – பேப்பர் கப்

கும்பம்:

உங்கள் வேலைக்கு ஒரு புதிய நபரிடம் இருந்து பாராட்டு கிடைக்கும். உங்கள் நெருக்கமான உறவில் லேசான விரிசல் ஏற்பட்டு இருப்பதாக நீங்கள் உணர்ந்தால் அது விரைவில் சரியாகும். யாரோ ஒருவரின் இழப்பு உங்களுடைய லாபமாக மாறும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – ரோஜாக்கள்

மீனம்:

உடல் நலக் கோளாறு காரணமாக உங்களுடைய கவனம் சிதறலாம். உங்களுக்கு நெருக்கமாக இருப்பவர்கள், வீட்டில் சில பிரச்சனைகளை சந்திக்கக்கூடும். அதற்கு நீங்கள் ஆதரவாக செயல்படலாம். உங்கள் வாழ்வில் அடுத்த கட்டம் மிக விரைவில் தொடங்க இருக்கிறது. நீங்கள் இதுதான் நடக்கும் என்று எதிர்பார்த்து இருந்தால், அது நடக்காமல் போகவும் வாய்ப்பு இருக்கிறது

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – பச்சை கிறிஸ்டல்
Published by:Selvi M
First published:

Tags: Astrology, Oracle Speaks

அடுத்த செய்தி