Home /News /spiritual /

தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு இன்று சர்பிரைஸ் நிறைந்த நாளாக இருக்கும்... (மே14, 2022)

தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு இன்று சர்பிரைஸ் நிறைந்த நாளாக இருக்கும்... (மே14, 2022)

தெய்வீக வாக்கு

தெய்வீக வாக்கு

Rasi Palan | மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான தினசரி ராசி பலன்...

மேஷம்:

இன்று உங்களுக்கு புதிய வேலைகள் அதிகமாக இருக்க கூடும் அல்லது நிலுவையில் உள்ள வேலைகளை இன்று முடிக்க வேண்டிய சூழல் ஏற்படலாம். வேலைப்பளு காரணமாக இன்று நீங்கள் கொஞ்சம் சோர்வாக இருக்கலாம். திட்டமிட்டு செயல்பட்டால் வேலைகளை எளிதாக முடிக்கலாம்.

உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு டூர்மலைன் (கருநிற கனிமம்)

ரிஷபம்:

நீங்கள் ஒரு விஷயத்தில் இறங்குவதற்கு முன்பே இது இப்படி தான் இருக்கும் என ஒருபோதும் யூகிக்க வேண்டாம். பல வேலைகள் காரணமாக நீங்கள் இன்று குழப்பமாக உணர்வீர்கள். இதற்கு மத்தியில் உங்கள் ஆரோக்கியத்தை கவனித்து கொள்வது முக்கியம்.

உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு செங்கல் சுவர்

மிதுனம்:

வெளிநாட்டிலிருந்து உங்கள் காதுகளுக்கு வரும் ஒரு நேர்மறை செய்தி இன்றைய உங்களது நாளை சிறப்பாகிடும். உங்களுள் இலக்குகளை அடைவதற்கான புதிய உறுதியை மனதில் உருவாக்கி கொள்ளவும், அதற்கான காலக்கெடுவை அமைக்கவும் இன்று உகந்த நாள்.

உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு சணல் பை

கடகம்:

தம்பதிகள் இடையிலான உறவு வலுவாக இருக்கும் என்றாலும், பிற்பகலுக்கு மேல் பிறருடன் ஏற்படும் வாக்குவாதங்கள் உங்களது நாளில் இடையூறை ஏற்படுத்தும். எனவே முடிந்த வரை வீண் வாக்குவாதங்களை தவிர்த்து கொள்வது நலம். சிக்கலாகத் தோன்றும் விஷயங்களில் கருத்து சொல்வதை தவிர்த்து விடுங்கள்.

உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு கிஃப்ட்

சிம்மம்:

இன்று உங்கள் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக நாளை செலவிடுவார்கள். இது நாள் வரையில் நிலுவையில் இருந்த சில சட்ட விஷயங்கள் இப்போது வேகம் பெற்று உங்களுக்கு சாதகமாக முடிய கூடும். உங்களது வேறு சில பணிகள் இழுபறியாக இருந்தாலும், ஒருகட்டத்தில் முடிவு பெறும்.

உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு டெக்கரேட் செய்யப்பட்ட கடை

கன்னி:

உங்கள் வேலையில் ஏற்படும் திடீர் முன்னேற்றம் உங்களது இன்றைய நாளை ஒளிமயமானதாக மாற்றும். பல வேலைகள் இருந்தாலும் உங்கள் உடல்நலனில் சிறிது அக்கறை காட்ட வேண்டிய நாள் இது. குறிப்பாக செரிமான கோளாறு ஏற்படும் வாய்ப்பு இருப்பதால் ஆரோக்கியமான உணவுகளாக இருந்தாலும் கூட அளவாக சாப்பிடுங்கள்.

உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு லேம்ப்

துலாம்:

குடும்பம் மற்றும் நண்பர்களுக்குள் கருத்து வேறுபாடுகள் நிலவி வந்தால் அதை பேசி தீர்க்க வேண்டிய நாள் இன்று. இன்று உங்களது பேச்சு எடுபடும் என்பதால் கருத்து வேறுபாடு ஏற்பட்ட நெருக்கமானவரை சந்தித்து பேசுங்கள். இனியும் ஒத்தி வைக்க தேவை இல்லை. நாளின் முடிவு உங்களை மிகவும் நிதானமாகவும், ரிலாக்ஸாக உணர வைக்கும்.

உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - தெளிவான வானம்

விருச்சிகம்:

இன்று நீங்கள் மிகுந்த தன்னம்பிக்கையுடன் இருப்பீர்கள். உங்களது வேலையில் உங்களுக்கான ஒரு புதிய பங்கு அழைப்பது பற்றி அலுவலகத்தில் இன்று விவாதிக்கப்படலாம். உங்களது குடும்ப நண்பர் மூலம் உதவிகளை நீங்கள் பெற கூடும்.

உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு பிரகாசமான குடை

தனுசு:

பழைய புகைப்படங்களை பார்த்து நீங்கள் பழைய நினைவுகளில் மூழ்கி விட கூடும். நீண்ட காலமாக நீங்கள் மறந்திருந்த பல விஷயங்கள் உங்களது நினைவில் நிழலாடும். எனினும் நீங்கள் தெளிவான மனநிலையில் இருந்தால் பல விஷயங்களுக்கு இன்று தீர்வு கிடைக்கும் என்பதை மறக்காதீர்கள். பணப்புழக்கம் சீராக இருக்கும்.

உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு புறா இறகு

மகரம்:

சிக்கலான விஷயங்களில் உங்கள் அணுகுமுறையை தீவிரமாக காட்டாமல் எளிதாக கையாளுங்கள். இன்று ஒரு பணியை முன்னெடுத்துச் செல்லும் சக்தி மற்றும் ஆற்றல் உங்களுக்கு உள்ளது. எனவே வரும் வாய்ப்புகளை தயங்காமல் ஏற்று கொள்ளுங்கள். உங்களது நாளை சிறப்பாக்க தியானம் உதவும்.

உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு காஃபி  கோப்பை

கும்பம்:

இந்த நாள் நீங்கள் மகிழ்ச்சியை அனுபவிக்க கூடிய இனிமையான நாளாகும். நண்பர்களுடன் ஷாப்பிங் அல்லது ஊர் சுற்றும் தருணம் உங்களை உற்சாகமாக வைக்கும். எனினும் வெளியே சென்றால் சாப்பிடுவதில் உங்கள் ஆர்வத்தை கட்டுப்படுத்துங்கள்.

உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு செராமிக் பவுல்

மீனம்:

இன்று நீங்கள் பொறுமையை கடைபிடிக்க வேண்டும். புதிய தகவல் தொடர்புகளைத் தொடங்க இது ஒரு நல்ல நாள். உங்களுக்கு சம்பந்தம் இல்லாத விஷயங்களில் அதிகம் தலையிடாமல் இருக்க முயற்சி செய்யுங்கள். உங்கள் கோபத்தையும் கட்டுக்குள் வைத்திருக்க முயற்சி செய்யுங்கள்.

உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு பழங்கால கடிகாரம்
Published by:Vaijayanthi S
First published:

Tags: Oracle Speaks

அடுத்த செய்தி