Home /News /spiritual /

தெய்வீக வாக்கு: இன்று இந்த ராசியினருக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும்... (26 ஜூன் 2022)

தெய்வீக வாக்கு: இன்று இந்த ராசியினருக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும்... (26 ஜூன் 2022)

தெய்வீக வாக்கு

தெய்வீக வாக்கு

Rasi Palan | மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான தினசரி ராசி பலன்

மேஷம்

நீங்கள் எவ்வளவு அமைதியாக இருக்கிறீர்களோ, அவ்வளவு அதிகமாக நீங்கள் மற்றவர்களின் நம்பிக்கையைப் பெற முடியும். இதை பின்பற்றினாலே போது, அதிக எதிர்பார்ப்பு இல்லாமல் காரியங்கள் கைகூடுவதை காணலாம். உங்கள் குழந்தையின் மகிழ்ச்சியே உங்களுடைய மூலாதாரம். வேலை விஷயமாக வெளியூர் செல்ல வேண்டி வரலாம். இப்போதைக்கு உங்கள் வழக்கத்திற்கு சிறிது ஓய்வு கொடுத்துவிட்டு மற்ற பொறுப்புகளில் ஈடுபடலாம். பணப்புழக்கம் நன்றாக இருக்கும் மற்றும் மனஅழுத்தம் கட்டுக்குள் இருக்கும்.

உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - கருப்பு டூர்மலைன்

ரிஷபம்

வாழ்க்கையின் சவால்கள் உங்களுக்கு போதுமானதாக இல்லாமல் இருக்கலாம், அதேபோல் உயரத்தை எட்டித்தொட நினைக்கும் உங்களுக்கு புது உத்வேகம் தேவைப்படலாம். ஒரு முன்னாள் சக பணியாளர் சில தனிப்பட்ட வேலைகளுக்காக உங்களைத் தொடர்பு கொள்ளலாம். வாய்ப்புகள் குறைவாகவே உள்ளன, ஆனால் அதிலும் உங்களுக்கான ஒன்று நிச்சயம் கிடைக்கும். அது கிடைக்கும் நேரம் நீங்கள் முழுமை அடைவீர்கள். உங்களுடைய அடக்கப்பட்ட உணர்ச்சிகள் மற்றவர்களை திசை திருப்பும் வகையில் பொது வெளியில் வெளிப்படலாம். கடந்த காலத்தில் ஏற்பட்டிருக்கக்கூடிய நிதி முன்னேற்றம் சில காலத்திற்கு நிலையானதாக இருக்கலாம்.

உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - தெளிவான படிகம்

மிதுனம்

உங்கள் தேவைகள் மற்றும் விருப்பங்களின் அடிப்படையில் பொருத்தமான மாற்றங்களைச் செய்ய பிரபஞ்சமே இப்போது சாதகமாக உள்ளது. குடும்பத்தில் ஒரு சிறிய சண்டை அல்லது கருத்து வேறுபாடு வெடிக்க வாய்ப்புள்ளது. உங்கள் மனைவி உங்களுடன் அடிப்படை புரிதல் இல்லாமல் எதையாவது கேட்கலாம். ஒரு ஆன்மீக பயணம் உங்களை அமைதியாக்கலாம்.

உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - மஞ்சள் நிற மணிக்கல்

கடகம்

நீங்கள் ஒரு விஷயத்தைப் பற்றி பலமுறை ஊகித்திருந்தால், நீங்கள் பயப்படும் வாய்ப்புகள் உண்மையாகிவிடும். இதைத் தவிர்ப்பதற்கான சிறந்த வழி, அதனை தொடராமல் நிறுத்துவது ஆகும். உங்கள் மன வலிமையில் நீங்கள் வேலை செய்யக்கூடிய ஆற்றலைப் பெற்றுள்ளது வழக்கத்தை விட ஒழுக்கமான நாளைக் குறிக்கிறது. உங்கள் நண்பர்கள் உங்களைத் தொடர்பு கொள்ள முயற்சி செய்யலாம் ஆனால் நீங்கள் அவர்களை சந்திக்க விரும்பாமல் போகலாம். பார்ட்னர்ஷிப் பற்றி ஏதாவது யோசனை இருந்தால், சரியான பார்ட்னரை தேர்வு செய்ய ஏற்ற நேரம் வந்துவிட்டது.

உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - நீல நிற மணிக்கல்

சிம்மம்

முக்கியமான ஒருவரை சந்திக்க நேர்ந்தால், அவர் உங்களுக்கு எவ்வளவு முக்கியமானவர் என்பதை அவருக்கு உறுதிப்படுத்துங்கள். உங்களால் செயல்படுத்த முடியாத யோசனைகளைப் பற்றி பேசுவதை தவிர்க்கவும். தற்போது நிலவி வரும் நிதி நெருக்கடி விரைவில் முடிவுக்கு வரும். பெரியவர்கள் உங்கள் மீது பெரிதும் நம்பிக்கையை வைத்துள்ளனர், அது வீண்போகாமல் இருக்கும் படி பார்த்துக்கொள்ளுங்கள். ஒரு வயதான நபர் உதவிக்காக உங்களைத் தேடிக்கொண்டிருக்கலாம். பெற்றோர்கள் முக்கியமான ஒன்றைத் திட்டமிடலாம் மற்றும் அதைப் பற்றி உங்கள் கருத்து தேவைப்படலாம். எனவே குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட முயற்சியுங்கள்.

உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - செவ்வந்தி

கன்னி

யாராவது வேண்டுமென்றே வாக்குவாதத்தில் ஈடுபட்டால் அதனை உடனே மறுத்துவிடுவது நல்லது. அலைபாய்ந்து கொண்டிருக்கும் மனதிற்கு இரண்டாவது பாதி அமைதிப்படுத்துவதற்கான மனோபாவத்தை உருவாக்கலாம். மற்றவர்களால் நீங்கள் வேலை மற்றும் மன அழுத்தத்தை உருவாக்கலாம். உங்கள் மனதில் நிறைய விஷயங்கள் இருக்கலாம், எல்லாவற்றையும் பற்றி பேசுவது முக்கியமல்ல. கடந்த கால பிரச்சினையை தீர்க்க உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். அதனை தவறவிடாமல் சரியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள். மனதை அமைதிப்படுத்த வெளியில் சென்று நேரத்தை செலவிடுவது முக்கியம்.

உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - கிரனைட் கல்

துலாம்

உங்கள் மனதில் ஒரு திட்டம் இருக்கலாம். ஆனால் அதனை நிறைவேற்றுவதற்கு இன்னும் கொஞ்சம் பொறுமை மற்றும் நேரம் தேவை. எளிய தினசரி பணிகள் தாமதத்திற்கு காரணமாக மாறலாம். நீங்கள் ஒரு நிறைவான நேரத்தை நோக்கிச் செல்கிறீர்கள், கடந்த காலத்தில் நீங்கள் செய்தவற்றின் பலனைப் பெறலாம். பல விஷயங்களைப் பற்றி யோசிப்பது குழப்பம் மற்றும் தேவையற்ற மன அழுத்தத்திற்கு வழிவகுக்கும் என்பதால் ஒரு நாளைக்கு ஒரு முறை எடுத்துக் கொள்வது நல்லது. ஒரு சிறிய மன இடைவெளி திட்டமிடப்படலாம்.

உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - மரகத கல்

விருச்சிகம்

பொது இடத்தில் தனிப்பட்ட உரையாடல்களைத் தவிர்க்கவும், குறிப்பாக அது உங்கள் வாழ்க்கைத் துணையுடன் இருக்கும் போது கட்டாயம் கூடாது. நீங்கள் சில தேவையற்ற விஷயங்களில் இன்று ஈடுபடாதீர்ககள். இன்று கலவையான உணர்வுகள் மற்றும் உணர்ச்சிகளை பெறுவீர்கள். கடந்த காலத்தில் நீங்கள் பழகிய ஒரு நபர் தற்போது உங்களை தொடர்பு கொள்ள முயற்சி செய்யலாம். நீங்கள் உணர்ச்சி ரீதியாகவும் பாதிக்கப்படலாம்.

உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - வைடூரியம்

தனுசு

உங்கள் மனம் புத்துணர்ச்சி பெற வேண்டும் எனவே, உங்களுக்காக சிறிது நேரம் ஒதுக்கிக்கொள்ளுங்கள். இதற்கு முன்பு உங்களைக் கண்டுகொள்ளாத ஒருவர், இப்போது மீண்டும் வரலாம். உங்கள் நண்பர்களுடன் குறைந்த நேரத்தையும் உங்களுடன் அதிக நேரத்தையும் செலவிட நீங்கள் விரும்பலாம். உங்கள் மீது சுமத்தப்பட்ட ஒரு குறிப்பிட்ட குடும்ப அழுத்தம் இப்போது தீர்க்கப்படலாம். தேவையற்ற உதவிகளைக் கேட்பதைத் தவிர்க்கவும்.

உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - புலியின் கண்

மகரம்

சமீபத்திய பிரசன்டேஷன் மீட்டிங் மூலம் பணியில் உள்ளவர்கள் மீது நல்ல அபிப்ராயத்தை உருவாக்கலாம். உங்களை கண்காணித்து கொண்டிருக்கும் ஒருவர், உங்களுக்கான ஒரு பாசிட்டிவ் பிளானை வைத்திருக்கலாம். உங்கள் மீதான உங்கள் நம்பிக்கை நீண்ட காலத்திற்கு பிறகு மீண்டும் நிலைநிறுத்தப்படுகிறது. உங்கள் கடந்தகால சாதனைகள் உங்களின் உள்ளார்ந்த திறனை உங்களுக்கு உறுதியளிக்கும். உங்கள் தற்போதைய உறவிலிருந்து நச்சுத்தன்மையை அகற்ற முயற்சிக்கவும்.

உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - மலாக்கிட் கல்

கும்பம்

மற்றொரு நபரின் நோக்கத்தை அளவிடுவது எளிதான பணியாக இருக்காது, ஆனால் நீங்கள் இன்னும் ஆபத்தை எடுக்க தயாராக இருக்கலாம். உங்களைச் சுற்றியுள்ளவர்களை நம்புவதற்கான காலம் கடந்துவிட்டது. தற்போதைய திட்டத்திற்கு கணிசமான பாதுகாப்பு இருப்பதி உறுதி செய்து கொள்ளுங்கள். விரைவில் பயணத்திற்கான வாய்ப்பு கிடைக்கலாம். நீங்கள் புறக்கணிக்க முயற்சிக்கும் ஒருவர் அறிவிக்கப்படாமல் வரலாம். உங்கள் நெருங்கிய நண்பர்களை புத்திசாலித்தனமாக தேர்ந்தெடுங்கள்.

உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - கருப்பு கல்

மீனம்

எளிமையான அணுகுமுறை திட்டத்தை விரைவில் முடிக்க உங்களுக்கு உதவலாம். நீங்கள் சில செல்வாக்கு மிக்க நபர்களைச் சந்திக்கலாம் மற்றும் ஒத்துழைக்க புதிய வாய்ப்பைப் பெறலாம். தைரியம் கண்டுபிடிப்பதற்கு தடையற்றதாக இருக்கலாம் மற்றும் பயனுள்ளதாக இருக்கும். உங்களுக்கான அங்கீகாரம் கிடைக்க வாய்ப்புள்ளது.

உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - சிட்ரின் கல்
Published by:Vaijayanthi S
First published:

Tags: Oracle Speaks

அடுத்த செய்தி