உங்கள் பட்ஜெட்டை மிகவும் புத்திசாலித்தனமாக திட்டமிடுங்கள். இன்று சம்பாதித்துள்ள பணத்தை விட செலவுகள் கூடும். லேசான தலைவலி அல்லது அசௌகரியம் உங்களுக்கு வரலாம். இன்றைய வேலைகளை இன்றே செய்து முடித்து விடுவது நல்லது.
உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு நீலமணி
ரிஷபம்
இன்று உங்களுக்கு பரபரப்பான நாள் அமையும். பங்கு சந்தைக்கு உங்களுக்கு சாதகமாக அமைய வாய்ப்பு உள்ளது. இன்றைய நாளின் அமைதியான இரண்டாம் பாதியை நோக்கி நகரும். இன்று நீங்கள் அதிகமாக வெளியே சாப்பிடுவதைத் தவிர்க்கலாம். உங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள்.
உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு சிலிக்கான் அச்சு
மிதுனம்
சில சமயங்களில் உங்கள் உறவில் உள்ள அதிக எதிர்பார்ப்புகள் உங்களை காயப்படுத்தலாம். அது உங்களுக்கு சாதகமாக அமையவில்லை என்றால் விட்டு விடுங்கள். இன்று புதிதாக ஒன்றைக் கற்றுக் கொண்டு உங்களை சந்தோஷமாக வைத்து கொள்ளுங்கள்.
உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு ரோஜா நிற கல்
கடகம்
நிலுவையில் உள்ள சட்ட விஷயங்களில் நீங்கள் இன்று கவனம் செலுத்த வேண்டிய நாள். இன்று வேலையில் முன்னுரிமை கிடைக்கும். எதிர்காலத்திற்காக பல சிறப்பான செயல்களை செய்வீர்கள்.
உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு மஞ்சள் சிட்ரின் கல்
சிம்மம்
நேசிப்பவரின் ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். இன்று இனிமையான நாளாக அமையும். இன்று உங்களுக்கு நிலுவையில் உள்ள வேலைகளை முடிக்க பாருங்கள். உங்களுக்கு தெரிந்த ஒருவரிடம் இருந்து மகிழ்வான செய்தி கிடைக்கும். உங்கள் கண்பார்வையை கவனித்துக் கொள்ளுங்கள்.
உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு பைரைட் கல்
கன்னி
இன்று உங்களுக்கான ஆசைகள் பல நிறைவேறலாம். எப்போதும் மகிழ்வாக இருக்க இறைவனை வழிபடுங்கள். இன்று வேலைகள் நிறைந்த நாளாக இருக்கும். மனதளவில் சுறுசுறுப்பாக உணர்வீர்கள். நீண்ட கால திட்டங்களை உருவாக்குவது குறித்தும் நீங்கள் பரிசீலிக்கலாம்.
உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு கருப்பு படிகம்
துலாம்
நீண்ட நாட்களாக நீங்கள் சந்திக்காத நண்பர்களை பார்ப்பதற்கு இது ஒரு நல்ல நாள். நீங்கள் தனியாக நேரத்தை செலவிட வேண்டும் என்கிற எண்ணம் தோன்றலாம். இன்று நீங்கள் மிகவும் பிசியாக இருந்தாலும் சற்று ஓய்வெடுங்கள்.
உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ட்ரீம் கேட்சர்
விருச்சிகம்
உங்கள் தனிப்பட்ட வேலைகளை முடிக்க சக்திவாய்ந்த நாள். நீங்கள் இப்போது முடிவெடுக்கும் மாற்றங்கள் நீண்ட காலத்திற்கு பலனைத் தரும். உங்களின் பணிகள் குறித்த சுய விமர்சனங்களை அவ்வபோது செய்வது நல்லது.
உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - குவார்ட்ஸ் கல்
தனுசு
நண்பர்கள், குடும்பத்தினர் அல்லது தொலைபேசி அழைப்புகள் மூலம் இன்றைய நாளை சிறப்பாக செலவு செய்யலாம். சில சமயங்களில் நீங்கள் மனரீதியாக சோர்வடையலாம். ஒரு நல்ல அடிப்படை பயிற்சி அல்லது யோகா போன்றவற்றை பின்பற்றி உங்களை சமநிலையில் வைத்து கொள்ளுங்கள்.
உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு நீல டூர்மலைன் கல்
மகரம்
ஒரு சிறிய பயணம் மேற்கொள்ளுங்கள். இது உங்களுக்கு மன நிம்மதியை தரக்கூடும். இன்று சில குடும்பத் தேவைகள் அதிகரிக்கலாம். நீங்கள் இல்லாத நேரத்தில் அலுவலக வேலைகள் கட்டுப்பாட்டில் உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். நம்பத்தகாத இடங்களிலிருந்து சாப்பிடுவதைத் தவிர்க்கவும்.
உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - பசுமையான தோட்டம்
கும்பம்
உங்களுக்கான பயிற்சிக்கு போதுமான நேரத்தை ஒதுக்குங்கள். மாணவர்கள். ஆசிரியர்கள், பயிற்சியாளர்கள் ஆகியோர் வழக்கத்தை விட பரபரப்பாக உணர்வீர்கள். வேலையில் சாதகமான முன்னேற்றத்தை எதிர்பார்க்கலாம்.
உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம்- ஒரு தங்க மோதிரம்
மீனம்
சமீபத்தில் உஙக்ளுக்கு ஏற்பட்ட நெருக்கடிகள் இனி சுமுகமாக தீர்க்கப்படும். நண்பர்களின் ஆதரவு இருந்தால் அது உங்களுக்கு இன்னும் பலனளிக்கும். நீங்கள் புதிய வாகனம் வாங்க திட்டமிட்டிருந்தால், இந்த நேரத்தை பயன்படுத்தி கொள்ளலாம். மற்றவர்களுடன் பகைமை கொள்ளாமல் இருப்பது நல்லது.
உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு இறகு
Published by:Vaijayanthi S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.