ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

தெய்வீக வாக்கு: இந்த ராசியினர் எதையும் எளிதில் முடித்துவிடுவீர்கள்... (மே 15, 2022)

தெய்வீக வாக்கு: இந்த ராசியினர் எதையும் எளிதில் முடித்துவிடுவீர்கள்... (மே 15, 2022)

தெய்வீக வாக்கு

தெய்வீக வாக்கு

Rasi Palan | மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான தினசரி ராசி பலன்...

மேஷம்

கடினமான பணிகளை கூட எளிய அணுகுமுறையை பயன்படுத்தி நீங்கள் முடிப்பீர்கள். இன்று நீங்கள் வெளியே செல்லவோ அல்லது பயணிக்கவோ திட்டமிருந்தால் அந்த பயணத்தை ரத்து செய்வீர்கள் அல்லது ஒத்தி வைப்பீர்கள். உங்கள் நிதி நெருக்கடியில் இதுவரை நீங்கள் கவனம் செலுத்தவில்லை என்றால் இன்று நீங்கள் அதை முதலில் கைவைக்க வேண்டும்.

உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு முத்து

ரிஷபம்:

நீங்கள் கடந்த சில நாட்களாக ஒரு இக்கட்டான நிலையில் போராடி கொண்டிருக்கலாம். அதிலிருந்து விடுபடுவதற்கான வழி உங்களுக்கு மிக நெருக்கமாக இருக்கும். வேலை விஷயங்களில் தெளிவான தகவல் பரிமாற்றத்தை செய்யுங்கள். நீண்ட காலமாக நிலுவையில் உங்களது வேலை ஒன்று இன்று முடிய ஒரு பெண் உங்களுக்கு உதவ கூடும். நீங்கள் முன் புறக்கணித்த வாய்ப்பை இன்று ஏற்க கூடிய சூழல் உருவாகலாம்.

உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு நீல நிற ரிப்பன்

மிதுனம்:

இதுநாள் வரை மற்றவர்களுக்காகவே வாழ்க்கையை வாழ்ந்து வரும் நீங்கள், உங்கள் சொந்த வாழ்க்கையில் கவனம் செலுத்த வேண்டிய நேரம் இது. சில பணிகள் ஆரம்பத்தில் கடினமாக தோன்றலாம் ஆனால் அவை எளிமையானதாகவே இயக்கும். உங்கள் திறமைகள் மேம்படும் நாள் இன்று.

உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு பிரகாசமான லவுஞ்சர்

கடகம்:

இன்று நீங்கள் துரிதமாக செயல்படாவிட்டால் உங்கள் வாழ்க்கையில் சில நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிடும். நீங்கள் ஒரு எழுத்தாளர் அல்லது கதை சொல்பவராக இருந்தால், உங்கள் கன்டன்ட் மிகவும் சலசலப்பை ஏற்படுத்த கூடும். எனினும் அங்கீகாரம் மற்றும் பாராட்டு ஆகியவற்றின் அடிப்படையில் கன்டன்ட் ரைட்டர்ஸ் மற்றும் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு இன்று சிறந்த நாள்.

உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு கார்னிலியன்

சிம்மம்:

இன்று நீங்கள் உணர்ச்சி ரீதியாக மிகவும் பாதிக்கப்படலாம். உங்கள் மனைவி மற்றும் குடும்பத்தினர் ஆறுதலாக இருப்பார்கள். நீங்கள் தனிப்பட்ட முறையில் அறியாத ஒருவர் உங்களை கவலையிலிருந்து விடுவித்து உற்சாகப்படுத்த கூடிய வாய்ப்புகள் உண்டு.

உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு தங்க செயின்

கன்னி:

ஈகோ தீங்கு விளைவிக்கும் என்பதை உணர்ந்து நீங்கள் மற்றவர்களிடம் இயலாக நடந்து கொள்ள வேண்டும். இன்று புதிய திட்டங்களை துவக்க முடிவு செய்திருந்தால் தாராளமாக செய்யலாம். வரும் நெருக்கடிகளில் இருந்து விடுபட தக்க சமயத்தில் உங்களுக்கு உதவிகள் கிடைக்கும். எனினும் எந்த ஒரு உறவிடமும் புத்திசாலித்தனமாக இருப்பது முக்கியம்.

உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு பிரபலம்

துலாம்:

இன்று நீங்கள் அதிகபட்ச ஆதாயங்கள், உதவிகள் மற்றும் வருமானங்களை பெற கூடிய நாளாக அமையும். நீங்கள் நம்ப முடியாத சில நல்ல விஷயங்கள் உங்களுக்கு நடக்க கூடும். புதியவர்களுடன் பிணைப்பு ஏற்படுத்தி கொள்வது உங்கள் வாழ்விற்கு சிறந்த செயலாக இருக்கும்.

உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு கண்ணாடி பாட்டில்

விருச்சிகம்:

ஒரு குறிப்பிட்ட சம்பவத்தால் உங்கள் மீதான நம்பிக்கையை நீங்கள் இழந்திருந்தால், உங்கள் கடனா உழைப்பின் மூலம் அதை திரும்ப பெறுவீர்கள். நீங்கள் நீண்ட காலமாக விரும்பிய ஒன்று இன்று உங்களை வந்து சேரலாம். நீங்கள் வேறொருவருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்த எண்ணியிருப்பீர்கள், ஆனால் உங்களுக்கே ஆச்சரியம் ஏற்பட கூடிய வகையில் சில சம்பவங்கள் நிகழலாம்.

உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு அவென்டுரின் கிரிஸ்டல்

தனுசு:

உங்களை நீங்களே பெரிய அளவில் மாற்றி கொள்வதற்கு ஏதுவான நாள் இன்று. ஒரு புதிய வழக்கம் மற்றும் சுயக்கட்டுப்பாட்டை இன்று முதல் கடைபிடிக்க சிறந்த நாள். இன்று நீங்கள் நண்பர்களுடன் வெளியே பயணம் மேற்கொண்டு மகிழ்ச்சியாக இருக்க திட்டமிட்டால், யோசனை வேண்டாம். இன்று உங்களுக்கு உற்சாகமான நாள்.

உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு நியான் விளக்கு

மகரம்:

எப்போதோ நிறுத்தி வைக்கப்பட்டிருந்த திட்டம் ஒன்றை நீங்கள் இன்று செயல்படுத்துவீர்கள். அதில் நீங்கள் எதிர்பார்த்த வெற்றியையும் பெறுவீர்கள். சில விஷயங்கள் ஆரம்பத்தில் சிக்கலாகத் தோன்றினாலும், அந்த பிரச்சனைக்கு விரைவில் தீர்வு கிடைக்கும். வெளியாட்கள் உங்களை குறைவாக மதிப்பிட கூடும். நீங்கள் விரைவில் அவர்களின் எண்ணத்தை பொய்யாக்கி காட்டுவீர்கள்.

உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு பச்சை மெழுகுவர்த்தி

கும்பம்:

உங்களது குடும்ப உறுப்பினர்களின் உடல்நலன் பற்றிய கவலையில் இன்று அதிக நேரம் செலவிடுவீர்கள். அலுவலக பணிகளை சிறப்பாக முடித்திருந்த காரணத்திற்காக உங்களது அடுத்த கட்ட பயணத்தை கண்டு சக ஊழியர்கள் பொறாமைபடுவார்கள். புதிய தொழில் தொடர்பான சலுகை உங்களுக்கு வரலாம். அதை சரியாக ஆராய்ந்து விட்டு பின்னர் ஏற்பதா வேண்டாமா என்பதை முடிவு செய்வது நல்லது.

உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு மீன் தொட்டி

மீனம்:

வெளிநாட்டு வேலைவாய்ப்பு அலல்து கல்வி வாய்ப்பை எதிர்பார்த்து காத்திருப்போருக்கு இன்று நல்ல தகவல் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களுக்கு மருத்துவ உதவி அல்லது உதவி தேவைப்படலாம். நீங்கள் லேசான மன அழுத்தத்திற்கு ஆளாகலாம். யாரிடமும் வாக்குவாதம் செய்யாமல் அமைதியாக நாளை கொண்டு செல்வது மன அமைதியை தரும்.

உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு சிவப்பு புள்ளி

First published:

Tags: Oracle Speaks