Home /News /spiritual /

தெய்வீக வாக்கு: இந்த ராசியினர் இன்று தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள்... (மே 12, 2022)

தெய்வீக வாக்கு: இந்த ராசியினர் இன்று தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள்... (மே 12, 2022)

தெய்வீக வாக்கு

தெய்வீக வாக்கு

Rasi Palan | மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான தினசரி ராசி பலன்...

மேஷம்:

அதிக வேலை அல்லது முன் கடமைகள் காரணமாக இன்று நீங்கள் கொஞ்சம் சோர்வாக உணரலாம். உங்களின் அணுகுமுறை ஒரு புதிய திட்டத்தை நிர்வகிக்க உதவும். இனி உங்களை நோக்கி வரவிருக்கும் கொண்டாட்டத்திற்கு தயாராக இருங்கள்.

உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு டர்க்கைஸ் கல்

ரிஷபம்

நீங்கள் ஒரு நிலைக்கு வருவதற்கு முன் அதன் சூழ்நிலையை குறித்து ஒருபோதும் கருத வேண்டாம். பணி சுமை காரணமாக உங்கள் மனம் குழப்பமாக இருக்கலாம். உங்கள் ஆரோக்கியத்தை கவனித்துக்கொள்வது முக்கியம்.

உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு பீங்கான் கிண்ணம்

மிதுனம்

உங்களுக்கான புதிய குறிக்கோளை உருவாக்கி, அதை அடைய முயற்சி செய்யுங்கள். மேலும் இதற்கான கால அளவை அமைத்து கொள்வது நல்லது. இப்படி செய்வதால் பல சாதனைகளை எளிதாக உங்களால் செய்ய முடியும். வெளிநாட்டிலிருந்து ஒரு நேர்மறையான செய்தி அல்லது தகவல் உங்களை வந்து சேரும். இது நேர்மறையான மனநிலையை உருவாக்கும்.

உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரே கலர் பை

கடகம்

உங்களால் ஏற்படும் வாக்குவாதம் பல இடையூறுகளை உருவாக்கலாம். உங்கள் உறவு வலுவடையும் ஆனால் படிப்படியாக அதில் சிக்கல்கள் வர தொடங்கலாம். இது குறித்த விஷயங்களில் நீங்கள் ஒரு நிபுணரை அணுகுவது நல்லது.

உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு பரிசு

சிம்மம்

குடும்பத்துடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவு செய்யலாம். இன்று உங்களின் வேலைகள் சற்று தாமதமாகலாம். நிலுவையில் இருந்த சில சட்ட விஷயங்கள் இனி வேகம் பெறும்.

உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - அலங்கரிக்கப்பட்ட அறை

கன்னி

வேலையில் திடீர் முன்னேற்றம் கிடைக்கும். எனவே இது உங்கள் நாளை பிரகாசமாக்கும். உங்கள் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளுங்கள். எதையும் யோசிக்காமல் செய்ய வேண்டாம். நிதானமாக எல்லாவற்றையும் கையாள பழகுங்கள். இது குறித்து இப்போது முன்கூட்டியே திட்டமிட ஆரம்பிக்கலாம்.

மேலே இருந்து அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு புதிய விளக்கு

துலாம்

குடும்பம் மற்றும் நண்பர்களுக்குள் நீங்கள் ஒரு பிம்பத்தை அதிகரிக்க வாய்ப்புள்ளது. நீங்கள் உரையாடலை ஒத்திவைத்திருந்தால், இப்போது அதைச் செய்ய வேண்டிய நேரம் இது. நாளின் முடிவு உங்களை மிகவும் நிதானமாகவும், தளர்வாகவும் உணர வைக்கும்.

உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு தெளிவான வானம்

விருச்சிகம்

தெரிந்த சிலர் உங்களைப் பற்றி கிசுகிசுத்து பேசலாம். ஆனால், இதை நீங்கள் கண்டுகொள்ள தேவையில்லை. இன்று நீங்கள் தன்னம்பிக்கையுடன் இருப்பீர்கள். வேலையில் ஒரு புதிய முன்னேற்றம் உங்களுக்கு கிடைக்கும். உங்களின் குடும்ப நண்பர் மிகவும் உதவிகரமாக மாறலாம்.

உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு அம்பர் கல்

தனுசு

பழைய புகைப்படங்கள் நீண்ட காலமாக மறக்கப்பட்ட நினைவுகளை இன்று தூண்டும். சில நிதி விஷயங்கள் நம்பிக்கைக்குரியதாக இருக்கும். இதுவரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ள விஷயங்களை உங்களின் தெளிவான மனநிலை தீர்க்க உதவும்.

உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு மரகத கல்

மகரம்

சிக்கலான விஷயங்களில் உங்கள் அணுகுமுறையை கொண்டு அதை எளிதாக்குங்கள். தீர்க்கப்படாத விஷயங்களை மறுபரிசீலனை செய்யுங்கள். இன்றைய நாள் ஒரு சக்திவாய்ந்த ஆற்றல் கொண்டதாக இருக்கும். எதையும் நிதானமாக சாதிக்க தியானம் உங்களுக்கு உதவ வேண்டும்.

உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு ஏரி

கும்பம்

நண்பரின் சிறிய உதவிகள் உங்கள் நாளை மாற்றி அமைக்கும். இந்த நாள் நீங்கள் அனுபவிக்கக்கூடிய இனிமையான விஷயங்களை கொண்டுள்ளது. எப்போதும் வெளியில் சாப்பிடுவதில் உங்கள் ஆர்வத்தை கட்டுப்படுத்துங்கள். முக்கிய விஷயங்களில் இன்னும் வெளிப்படையாக இருக்க முயற்சி செய்யுங்கள்.

உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் -ஒரு சைன்போர்டு

மீனம்

உங்களுக்கான புதிய உறவு வளர இன்னும் நேரம் எடுக்கும். நீங்கள் அதற்கு பொறுமையாக இருக்க வேண்டும். புதிய தகவல் தொடர்புகளைத் தொடங்க இது ஒரு நல்ல நாள். உங்களுக்கு தரப்படாத விஷயங்களில் அதிகமாக ஈடுபடாமல் இருக்க முயற்சி செய்யுங்கள். உங்கள் கோபத்தை கட்டுக்குள் வைத்திருக்க முயற்சி செய்யுங்கள்.

உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் -ஒரு வெள்ளி கம்பி
Published by:Vaijayanthi S
First published:

Tags: Oracle Speaks

அடுத்த செய்தி