Home /News /spiritual /

தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு இன்று வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும் நாள்... (மே 13, 2022)

தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு இன்று வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும் நாள்... (மே 13, 2022)

தெய்வீக வாக்கு

தெய்வீக வாக்கு

Rasi Palan | மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான தினசரி ராசி பலன்...

மேஷம்:

கடந்த காலத்தில் நீங்கள் உழைத்த விஷயங்களுக்கான பலன்களை இன்று நீங்கள் பெற கூடும். மேலும் இன்று உங்களின் சில முக்கிய பணிகள் வெற்றிகரமாக முடியும். நீங்கள் இன்று ஏற்கனவே போட்டு வைத்திருந்த பயணத் திட்டங் களை ஒத்தி வைக்க நேரிடலாம்.

உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு வைரம்

ரிஷபம்:

சில மாதங்களுக்கு முன் நீங்கள் சந்தித்த ஒருவரை பயனுள்ள விஷயத்திற்காக இன்று நீங்கள் மீண்டும் சந்திக்க நேரிடலாம். ஒருவரின் புதிய ஆற்றல் உங்கள் தன்னம்பிகையை அதிகரித்து இணக்கமான சூழலை இன்று உருவாக்கி தரலாம். உங்களிடம் உள்ள கான்டாக்ட் நெட்ஒர்க்கை பயன்படுத்தி உங்கள் வேலையை விரிவுபடுத்த முயற்சிக்கலாம்.

உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு மர பெட்டி

மிதுனம்:

இன்று உங்களுக்கு அதிர்ஷ்டம் நிறைந்த நாளாக அமையும். எந்த விஷயத்திலும் இன்று ஒரு நல்ல தொடக்கம் கிடைக்கும். பிறரிடம் அதிகம் எதிர்பார்ப்பது ஏமாற்றத்தை தரும். நீங்கள் ஒருவரிடம் கடன் வாங்கியிருந்தால் அல்லது கடன் கொடுத்திருந்தால் இன்று ஒரு சிறிய சங்கடத்தை நீங்கள் சந்திக்க வேண்டியிருக்கும்.

உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு ரூபி ஸ்டோன்

கடகம்:

வேறு யாராவது செய்யும் குழப்பங்களுக்கு நீங்கள் இன்று பொறுப்பேற்க நேரிடலாம் அல்லது விளைவுகளை சந்திக்கலாம். உங்களின் நெருங்கிய நண்பர் பகிர்ந்து கொண்ட ரகசியத்தை நீங்கள் கட்டாயம் காப்பாற்றியாக வேண்டும். விழா அல்லது நிகழ்வில் கலந்து கொள்வதற்காக நீங்கள் வெளியே செல்வீர்கள்.

உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு வீட்டு செடி

சிம்மம்:

நீங்கள் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்திருந்தால், உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும் நாள். மேலும் இன்று உங்களது நண்பர்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட மற்றும் அவர்களின் மகிழ்ச்சியைக் கொண்டாடும் நாளாக உங்களுக்கு அமையும். நீதிமன்ற வழக்கு ஏதேனும் நிலுவையில் இருந்தால், அது சாதகமாக முடியக்கூடிய வாய்ப்புகள் ஏற்படும்.

உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு கார்ட்போர்ட்

கன்னி:

நல்ல காரியங்கள் நிறைவேற சற்று நேரம் எடுக்கும் என்பதை நீங்கள் இன்று உணர்வீர்கள். நீண்ட நாள் காத்திருப்புக்கு பின், உங்கள் கடந்தகால உழைப்பின் பலன்களைப் பெறுவதற்கான நேரம் இன்று. சிக்கலில் இருக்கும் உங்கள் நெருங்கிய நண்பருக்கு நீங்கள் சரியான ஆலோசனைகளை வழங்குவீர்கள்.

உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு தெளிவான குவார்ட்ஸ்

துலாம்:

கடந்த சில நாட்களாக உங்களை வாட்டி வதைத்து வரும் குழப்பங்கள் அனைத்தும் இன்று நீங்கும். இன்றைய நாள் உங்களுக்கு சீராக மற்றும் அமைதியாக செல்லும். வீட்டில் விருந்தினர் வருகை இருக்கும். நீங்கள் இன்று சோர்வடைந்திருந்தாலும் உங்கள் வேலையை பற்றிய நல்ல செய்திகள் உங்களை உற்சாகப்படுத்த கூடும்.

உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு மணி பிளான்ட் (பண செடி)

விருச்சிகம்:

உங்கள் வாழ்க்கையில் வந்திருக்கும் புதிய நபர்களுடனான கெமிஸ்ட்ரி உங்களை தொடர்ந்து மகிழ்ச்சியில் வைத்திருக்கும் நாள் இன்று. பேச முடியாமல் பல நாட்களாக மனதிற்குள்ளேயே வைத்திருக்கும் முக்கிய விஷயங்களை உரியவர்களிடம் வெளிப்படுத்த உங்களுக்கு இன்று தைரியம் பிறக்கும்.

உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு லேம்ப்

தனுசு:

உங்கள் சிந்தனை மற்றும் கவனம் நீண்ட நாட்களுக்கு பிறகு இன்று உங்கள் வசம் வரும். நீண்ட நாட்களாக நீங்கள் செய்து வரும் ஆய்வு, சில உறுதியான முடிவுகளை வெளிப்படுத்தும். இன்று உங்களுக்கு அமைதியான அதே சமயம் உறுதியான நாளாக அமையும்.

உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு கம்பளம்

மகரம்:

இன்று உங்களுக்கு ஆற்றல் நிறைந்த மற்றும் துடிப்பான நாளாக அமையும். இன்று நீங்கள் செய்யும் வேலைகள் ஒரு புதிய அர்த்தத்தை பெறும். உங்கள் பணத்தை இன்று நீங்கள் புத்திசாலித்தனமாக செலவழிக்க வேண்டியது அவசியம். உங்களுக்கு நெருக்கமான ஒருவருக்கு உங்கள் மீது நம்பிக்கை சார்ந்த சிக்கல்கள் இருக்கலாம்.

உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு மைல்கல்

கும்பம்:

ஒரு நெருங்கிய நண்பர் அவருடன் வெளியே ட்ரிப்பிற்கு செல்ல உங்களை அழைக்கலாம். ஆனால் உங்களுக்கு இன்று ஓய்வு தேவைப்படும் என்பதால் வழக்கமான வேலைகளை தவிர வேறு எதிலும் ஈடுபடாதீர்கள். பெரிய முதலீடு செய்ய திட்டமிட்டால் அதற்கேற்ப அதிக நிதி தேவைப்படலாம் என்பதால் கவனமாக திட்டமிடுங்கள்.

உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு மர பலகை

மீனம்:

பண விஷயங்களில் இன்று உங்களுக்கு சில தடைகள் ஏற்படலாம். ஆனால் அவை தற்காலிகமானவை மற்றும் சீரான பணப்புழக்கம் விரைவில் வரும் என்பதால் அலட்டி கொள்ள தேவையில்லை. பல பொழுதுபோக்கு நிகழ்வில் பங்கேற்க உங்களுக்கு வாய்ப்புகள் வரும் என்பதால் நாள் முழுவதும் சுறுசுறுப்பாகவே இருப்பீர்கள்.

உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு மஞ்சள் நிற கிரிஸ்டல்
Published by:Vaijayanthi S
First published:

Tags: Oracle Speaks

அடுத்த செய்தி